தேனியில் ஆச்சர்யம்.. 5 தலை நாகம் பாதுகாக்கும் சிவன் கோயில்.. இங்க எவ்வளவு விசேஷம் தெரியுமா?

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்றை ஐந்து தலை நாகம் பாதுகாப்பதாக அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆச்சர்யம் நிறைந்த கோயிலுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். 

bodinayakkanur keezha chokkanathar sivan temple with 5 headed snake

தேனியில் உள்ள போடிநாயக்கனூரில் தான் இந்த பழமையான கீழச்சொக்கநாதர் கோயில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோயிலை 5 தலை நாகம் பாதுகாத்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்பகுதி மக்கள் அதை தீர்க்கமாக நம்பி வழிபட்டு வருகிறார்கள். இந்த கோயிலின் சிறப்பு வரலாறு எல்லா தகவல்களையும் இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். 

சிவனே போற்றி..! 

போடிநாயக்கனூர் சென்றால் அங்கிருந்து வெறும் 8 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் காணப்படுகிறது ஆச்சர்யங்கள் நிறைந்த கைலாய கீழச்சொக்கநாதர் கோயில். சுற்றி மலைகள்... அதன் மத்தியில் நாகத்தின் பாதுகாப்பில் இருக்கும் இந்த கோயிலில் 2000 ஆண்டுகளாக சிவன் அருள்பாலித்து வருகிறார். இங்கு அமைந்துள்ள சிவலிங்க வடிவம் கொண்ட கோயிலும் விசேஷமானது. சித்தர்களும் மகான்களும் 1400 வருடங்களுக்கு முன்பு இக்கோயிலை கட்டி வழிபட்டு வந்ததாக சொல்கிறது வரலாறு. 

மற்றொரு வரலாறு..

மதுரையை கண்ணகி நிர்மூலமாக்கிய காலத்தில் அறத்திற்கும் நீதிக்கும் கட்டுப்பட்டு நின்ற சொக்கநாதர், மதுரையை விட்டு அகன்று பிச்சாங்கரைபுலம் வந்து வீற்றிருக்கிறார் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக மலைத்தொடரில் கண்ணகி அம்மனாய் வீற்றிருக்கும் சிலையும் உண்டு. இந்த விஷயங்களை அறிந்த பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தன் அமைச்சரிடம் தகவல் சொல்லி இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார் என்றும் சொல்லப்படுகின்றது. இது நடந்த காலம் 9 ஆம் நூற்றாண்டு. 

கோயில் சிறப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் காணப்படும் சிவன் கோவில் போலவே இங்கும் சிவாலயம் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வாஸ்து சாஸ்திரத்தின்படி ராகு, கேது பரிகாரத்திற்கு ஏற்றமாதிரி நீர்நிலை வாயு மூலையில் இருக்கிறது. இந்த அம்சம் காலகஸ்தியில் உள்ளது. கிழக்கு முகம் நோக்கி சிவனின் பார்வை போடி நகர் மீது விழுவது போல இருப்பது தனிச்சிறப்பு. அமாவாசை, பிரதோச நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் அன்னதானம் கூட வழங்கப்படுகிறது.

bodinayakkanur keezha chokkanathar sivan temple with 5 headed snake

இந்தக் கோயிலின் பின்புறத்தில் இருக்கும் மலைகளின் வடிவம், சிவனின் பனி அடர்ந்த கயிலாய மலை போலவே இருப்பது காண்போரை வியக்க வைக்கிறது. இதையெல்லாம் விட ஆச்சர்யம் என்னவென்றால் ஐந்து தலை நாகம் சிவன் கோயிலை பாதுகாக்கிறது என்பது தான். அது எப்படி சாத்தியம்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க: கையில காசு நிக்காம வரவுக்கு மிஞ்சிய செலவு வருதா? வீட்டுல இந்த விஷயத்தை கவனிங்க.. பணம் தங்க 3 வாஸ்து டிப்ஸ்!

ஐந்து தலை நாகம் ..

முன்னரே தெரிந்து கொண்டோம்.. பாண்டிய மன்னன் தன் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட உதவினான். அதன் பிறகு இந்த கோயில் போடிநாயக்கனூர் அரண்மனையை ஆட்சி செய்த நாயக்க வம்சத்தினரால் கவனித்து கொள்ளப்பட்டது. பூஜைகள், நிர்வாகம் அனைத்தும் நாயக்கர்கள் பார்த்து கொண்டார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் 5 தலை தலை நாகம் ஒன்று இக்கோயிலை காத்து வருவகாக நம்பப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கைக்கு உரம் சேர்க்கும் வண்ணமாக கோயிலை சுற்றிலும் புற்றுகள் உள்ளன. 

புற்றுகள் சூழ வாயு மூலையில் நீர்நிலை இருக்கும் அம்சங்களையும் கொண்டுள்ளதால் இந்த சிவாலயம், ராகு கேது பரிகாரம் செய்ய ஏற்ற தலமாக விளங்குகிறது. கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் கொண்டவர்களுக்கு தோஷ நிவர்த்தி செய்யும் தலமாகவும் திகழ்கிறது. கல்யாணம் ஆகாமல் தள்ளி போகும் நபர்கள் திருமண தடை நீங்க கீழச்சொக்கநாதர் கோயிலுக்கு வந்து வேண்டிக் கொள்கிறனர். போடிநாயக்கனூர் ஜமீன் வாரிசுகள் இந்த கோயிலை பராமரிக்கின்றனர்.  

இதையும் படிங்க: கருப்பட்டி வச்சு காபி போடாம அதை வைத்து வெயிலை சமாளிக்கும் 4 பானங்கள்..மலையை புரட்டும் அபார சக்தி கிடைக்கும்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios