MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Tirumala Tirupati Temple: கனமழை எச்சரிக்கை அலர்ட்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Tirumala Tirupati Temple: கனமழை எச்சரிக்கை அலர்ட்! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Tirumala Tirupati Devasthanams: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் ஆந்திராவில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 15 2024, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இதனால், பல மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சபரிமலை தரிசன நேரத்தில் மாற்றம்: எந்தெந்த நேரத்தில் தரிசனம் செய்யலாம்? முழு விவரம் வெளியீடு

35

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மழை நிலவரம், தரிசனம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. 

45

இதனையடுத்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து புதன்கிழமை அதாவது அக்டோபர் 16ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்களை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Spiritual Tour: ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்! வெளியான சூப்பர் அறிவிப்பு! எந்தெந்த நாட்களில்?

55

இதனிடையே திருப்பதியில் நேற்று 75,361 பேர் தரிசனம் செய்ததாகவும் 28,850 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved