புனித வெள்ளியை கிறிஸ்தவர்கள் கொண்டாடமாட்டார்கள்! துக்கம் அனுசரிப்பார்கள் ஏன் தெரியுமா?
good Friday: கிறிஸ்வர்கள் புனித வெள்ளியை ஏன் அனுசரிக்கிறார்கள்? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கிறிஸ்தவ மதத்தில் புனித வெள்ளி துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தின் இறுதி வாரத்தில் வரும் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும். இந்தாண்டு புனித வெள்ளி நாளை (ஏப்ரல் 7) அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக மீட்பராம் இயேசுவை தலையில் முள்முடி சூட்டி, தாகத்திற்கு தண்ணீர்கூட வழங்காமல் சிலுவை சுமக்கச் செய்து, அந்த சிலுவையிலேயே அறைந்த நாள் தான் புனித வெள்ளி. அதனால் தான் இந்த நாளில் துக்கம் அனுசரிக்கிறார்கள். புனித வெள்ளியை கருப்பு வெள்ளி, பெரிய வெள்ளி என்றும் அழைக்கிறார்கள். அவரை ஏன் சிலுவையில் அறைந்தார்கள் தெரியுமா? மக்களுக்கு எண்ணற்ற அதிசயங்களையும், அற்புதங்களையும் நிகழ்த்தினார். நோய்களை குணமாக்கினார். பேய்களை விரட்டினார். தான் எல்லாம் வல்ல இறைவனின் மகன் என்றார். வணிகமயாகி கிடந்த ஆலயங்களை கண்டித்தார். இதனால் ஏராளமான மக்கள் அவரை பின்பற்றினர். மற்றொரு சாரர் அவரை வெறுத்தனர். அவருடைய வீழ்ச்சிக்காக காத்திருந்தனர். இயேசுவை, கடவுளின் மைந்தன் என சில மக்கள் நம்பவில்லை.30 வெள்ளி காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவை காட்டி கொடுத்தார் யூதாஸ்.
இயேசுவின் மரணம்!
எருசலேம் காவலர்கள் இயேசுவை கைது செய்தனர். அன்பு, மன்னிப்பு, அமைதி ஆகியவற்றை தன் வாழ்க்கையில் கடைபிடித்த இயேசு கிறிஸ்துவை, மக்கள் பொய் குற்றஞ்சாட்டி மரண மேடைக்கு அனுப்பினர். ஆளுநர் பிலாத்து இயேசுவை குற்றமற்றவர் என அறிவித்தார். ஆனால் விடாப்பிடியாக மக்களில் சிலர் இயேசுவை கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர். யூத ஆட்சியாளர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு எல்லாவிதமான உடல், மன சித்திரவதைகளையும் கொடுத்து, பின்னர் அவரை சிலுவையில் அறைந்தனர். அன்றைய நாள் வெள்ளிக்கிழமை. அதனால் தான் இதை புனித வெள்ளி என்கிறார்கள்.
பைபிளில் இயேசு கிறிஸ்து சுமார் 6 மணி நேரம் அறையப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரது மரண தருவாயில், 3 மணி நேரமாக எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உயிர்த்தெழுந்தார். அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அந்த நாள் தான் ஈஸ்டர் (ஏப்ரல் 11)என கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: வெயிலுக்கு தயிர் ரொம்ப சாப்பிடுறீங்களா! இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க! மத்தபடி ரொம்ப நல்லது!
புனித வெள்ளியின் முக்கியத்துவம்
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருப்பார்கள். இதையே தவக்காலம் என்கிறார்கள். இந்த தவக்காலத்தில் சிலர் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு இருப்பார்கள். புனித வெள்ளி அன்று தேவாலங்களில் துணியால் மூடி, துக்கம் அனுசரிப்பார்கள். தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு மனம் மாறும் நாளாக புனித வெள்ளி பார்க்கப்படுகிறது. பாவங்களுக்கு கழுவாயாக புனித வெள்ளி பார்க்கப்படுகிறது. இந்த நாளில் தேவாலயத்தில் கர்த்தரின் தியாகத்தை நினைவுகூர்ந்து மனமுருகி மக்கள் பிரார்த்தனை செய்வார்கள். தேவனிடம் ஜெபித்தால் எல்லாம் நன்றாக நடக்கும்.
இதையும் படிங்க: புனித வெள்ளியை ஏன் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள்? அன்றைய தினம் இயேசு செய்த தியாகம்!!