மகாலட்சுமி படத்தை இந்த திசையில் வைங்க; வீட்டுல வறுமையே வராது!!
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் மகாலட்சுமியின் படம் மற்றும் சிலையை வைத்தால் மகிழ்ச்சி , செழிப்பு பெருகும்.

Goddess Lakshmi Picture or Idol Placement At Home : இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. வாஸ்துவில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும். வாஸ்துப்படி நீங்கள் எல்லா காரியங்களை செய்வதன் மூலம் உங்களது வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் லட்சுமிதேவியின் படம் அல்லது சிலையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. ஏனெனில் லட்சுமி தேவியின் படத்தை தவறான திசையில் வைத்தால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நின்றுவிடும். மேலும் வீட்டில் வறுமை அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் லட்சுமி தேவியின் படத்தை எந்த திசையில் தவறுதலாக கூட வைக்க கூடாது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் திசையில் லக்ஷ்மி தேவி படத்தை வைக்கவும்:
இந்து மதத்தில் லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, லட்சுமி தேவியின் படம் அல்லது சிலையை வடக்கு அல்லது வடக்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். மேலும் இந்த திசையில் நீங்கள் லட்சுமி தேவியின் படத்தை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்த திசை மகிழ்ச்சி மற்றும் செலுத்தி அடையாளமாக கருதப்படுகிறது. இதுதவிர, தாமரை மலரில் அமர்ந்து செல்வத்தை பொழியும் லட்சுமி தேவியின் படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது.
இதையும் படிங்க: காலை எழுந்ததும் பார்க்கக் கூடாத 4 விஷயங்கள்; பண பற்றாக்குறை வரும்
லட்சுமி தேவி படத்தை இந்த திசையில் வைக்காதே!
ஸ்து சாஸ்திரத்தின் படி, லட்சுமி தேவியின் படத்தை அல்லது சிலையை தவறுதலாக கூட தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டாம். இந்த திசையில் வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக வீட்டில் நிதி சிக்கல்கள் மற்றும் தேவையற்ற பண செலவுகள் அதிகரிக்கும்.
இதையும் படிங்க: மஞ்சள் முடிச்சை வீட்டில் 'இந்த' இடத்தில் வைங்க; பண பிரச்சினை தீரும்!
இந்த வாஸ்து விதிகளை மனதில் கொள்:
- வீட்டில் வைக்கப்படும் லக்ஷ்மி தேவியின் படம் அல்லது சிலை எப்போது தூய்மையாக இருக்க வேண்டும் மற்றும் அந்த படத்தை சுற்றி வெளிச்சம் இருக்க வேண்டும். ஏனெனில் இருள் மற்றும் அழுக்கு வீட்டில் எதிர்மறை சக்தியை அதிகரிக்க செய்யும்.
- வாஸ்து சாஸ்திரத்தின் படி லட்சுமி தேவியின் படத்துடன் விநாயகர் படத்தை சேர்த்து வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
- லட்சுமி தேவியின் படம் அல்லது சிலைக்கு அருகில் கண்டிப்பாக ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
- லட்சுமி தேவியின் படம் அல்லது சிலையை தவறுதலாக கூட நீங்கள் தூங்கும் அறை மற்றும் சமையல் அறைக்கு அருகில் ஒருபோதும் வைக்கவே கூடாது