- Home
- Spiritual
- Astrology: இந்த 4 ராசிக்காரங்களுக்கு 30 வயசானாலும் திருமணம் நடக்காதாம்.! தள்ளிப் போயிட்டே இருக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
Astrology: இந்த 4 ராசிக்காரங்களுக்கு 30 வயசானாலும் திருமணம் நடக்காதாம்.! தள்ளிப் போயிட்டே இருக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
Zodiac signs who likely to get married later in life: ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை என்பது மிகவும் தாமதமாகவே அமையும் என்று கூறப்படுகிறது. அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் 4 ராசிகள்
மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிக முக்கியமான தருணம். சிலர் 20 வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் சிலரோ தனது தனிப்பட்ட இலக்குகள், சுதந்திரம் மற்றும் வாழ்க்கை முறையை முன்னுரிமையாக கொண்டு திருமணத்தை தள்ளிப் போடுகின்றனர். சமூகம் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தாங்கள் விரும்பிய வண்ணம் திருமணம் செய்து கொள்வர். ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் இயல்பாகவே திருமணத்தை தாமதப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அந்த நான்கு ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தனித்தன்மையுடன் விளங்குபவர்கள் மற்றும் சுதந்திரத்தை மிகவும் மதிப்பவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை தனித்தன்மையுடன் வாழ விரும்புகின்றனர். திருமணம் போன்ற பொறுப்புகளை உடனடியாக ஏற்பதற்கு அதிக தயக்கம் காட்டுவார்கள். இவர்களுக்கு தனிப்பட்ட வளர்ச்சி, இலக்குகளை அடையும் ஆர்வம், புதிய அனுபவங்களை தேடுவது ஆகியவையே முக்கியம். வாழ்க்கையில் இலக்குகளை முழுமையாக அடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிக்கின்றனர். திருமண உறவு, அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் என்றும், இலக்குகளை அடைய தடையாக இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
கும்ப ராசி என்பது சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களால் ஆளப்படும் ராசியாகும். யுரேனஸ் கிளர்ச்சி, புதுமை, தீவிர மாற்றங்களுடன் தொடர்புடையது. அதே சமயம் சனி பொறுப்பு, கர்மா மற்றும் தாமதங்களுக்கு காரகராக விளங்கும் கிரகமாகும். எனவே இந்த இரண்டு கிரகங்களின் தாக்கங்களும் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமண உறவில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.
2. தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசங்களையும், பயணங்களையும் விரும்புவார்கள். இவர்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு பயணமாகத் தோன்றுவதால் ஒரே இடத்தில் தங்குவது அல்லது திருமணம் போன்ற உறவுகளில் ஈடுபடுவது இவர்களுக்கு சவாலான காரியமாக இருக்கிறது. தங்களது இளமைக் காலம் முழுவதையும் உலகை ஆராய்ந்து புதிய கலாச்சாரங்களை அறிந்து மகிழ்வதற்கு செலவிடுகின்றனர். இவர்கள் பொதுவாக முதிர்ந்த வயதிலேயே திருமணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். திருமண பந்தம் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் கட்டிப்போட்டு விடும் என்று அவர்கள் தீவிரமாக நம்புகின்றனர். இதன் காரணமாக தனுசு ராசிக்காரர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணைவதற்கு விரும்புவதில்லை.
மேலும் தனுசு ராசியை குருபகவான் ஆள்கிறார். குருபகவான் தனுசு ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்குகிறார். இதன் காரணமாக இவர்கள் உலகை ஆராய்ந்து தெரிந்து கொள்வதிலும், புதிய அனுபவங்களைப் பெறுவதற்கும் விரும்புகிறார்கள். தங்களைப் போலவே சாகசம் மற்றும் வளர்ச்சியில் ஆர்வமுள்ள துணையை காணும் வரை அவர்கள் திருமணம் குறித்து யோசிப்பதே இல்லை.
3. மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் மற்றும் இலக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள். இவர்கள் தங்கள் எதிர்காலத்தை உறுதியாக்குவதற்கு கடினமாக உழைப்பார்கள். உறுதியான எதிர்காலத்தை அமைத்த பின்னரே திருமணம் குறித்த யோசனைகள் இவர்களுக்குத் தோன்றும். திருமணம் என்பது பெரிய பொறுப்பாக தோன்றுவதால், தங்கள் தொழில் மற்றும் நிதி நிலையை உறுதிப்படுத்திய பின்னரே திருமணம் குறித்து யோசிப்பார்கள். இதன் காரணமாகவே மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றனர்.
கும்ப ராசியை போலவே மகர ராசியும் சனி பகவானால் ஆளப்படுகிறது. சனிபகவான் நீதி, கட்டுப்பாடுகள், பொறுப்புகள், தாமதங்கள், கர்மா ஆகியவற்றுடன் தொடர்புடையது. எனவே மகர ராசிக்காரர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். இளமைக்காலத்தில் தொழில் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.
4. கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டவர்கள் மற்றும் பகுத்தறிவு மிக்கவர்கள். இவர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். எந்த ஒரு விஷயமானாலும் அதை ஆராய்ந்து பகுத்தறிந்து அதன் பின்னரே முடிவெடுப்பார்கள். திருமண வாழ்க்கையிலும் அதுபோல இவர்கள் அவசரப்படுவதில்லை. நிதானித்து அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அவர்களுக்கு திருப்தியான முடிவு கிடைத்த பின்னரே திருமண உறவுகளில் இறங்குவார்கள். இவர்கள் ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் அணுகுவதால் திருமணம் போன்ற மிகப் பொறுப்புகளை அவ்வளவு எளிதில் சுமப்பது கிடையாது.
மேலும் கன்னி ராசிக்காரர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். புதன் கிரகம் பேச்சு, அறிவு, விவரங்கள், தொடர்புத்திறன் ஆகியவற்றிற்கு காரகராவார். எனவே கன்னி ராசிக்காரர்கள் திருமண உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் ஒவ்வொன்றையும் அலசி, ஆராய்ந்து அதன் பின்னரே முடிவெடுப்பார்கள். இதன் காரணமாக அவர்கள் திருமணத்திற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)