- Home
- Spiritual
- சூரிய கிரகணம் 2026: 4 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் அரிய நிகழ்வு.. இந்தியாவில் தெரியுமா?
சூரிய கிரகணம் 2026: 4 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் அரிய நிகழ்வு.. இந்தியாவில் தெரியுமா?
இன்று (பிப்ரவரி 17) 'ரிங் ஆஃப் ஃபயர்' என அழைக்கப்படும் வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.26 மணிக்குத் தொடங்குகிறது. இதுதொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரிய கிரகணம் நேரம்
2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கிரகணம் வளைய வடிவில் தோன்றும் ‘அன்னுலர்’ கிரகணம் ஆகும். இந்த வகை கிரகணத்தின் போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காது. மைய பகுதி மறைந்து, ஓரங்களில் தீ வளையம் போல ஒளி தோன்றும். இதனால் இதற்கு “ரிங் ஆஃப் ஃபயர்” என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
பிப்ரவரி 17 சூரிய கிரகணம்
இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.26 மணிக்கு தொடங்கும். மாலை 5.13 மணி முதல் 6.11 மணி வரை உச்ச கட்டத்தை அடையும். பின்னர் மாலை 7.57 மணிக்கு நிறைவடையும். மொத்தம் 4 மணி 32 நிமிடங்கள் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேர விவரங்கள் இந்திய ஸ்டாண்டர்ட் டைம் (IST) அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தெரியாத கிரகணம்
ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் காணப்படாது என்பது முக்கிய தகவல். தென் ஆப்ரிக்கா, அன்டார்டிகா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கிரகணத்தை நேரடியாக காண முடியும். இந்தியாவில் தென்படாததால் பொதுமக்களுக்கு நேரடி பார்வை வாய்ப்பு இல்லை.
சூரிய கிரகணம் சூதக காலம்
சாஸ்திர நம்பிக்கையின்படி, சூரிய கிரகணத்திற்கு முன் 12 மணி நேரம் சூதக காலமாகக் காணப்படுகிறது. ஆனால் கிரகணம் தென்படும் இடங்களில் மட்டுமே இது அமலில் இருக்கும். எனவே இந்தியாவில் சூதக காலம் நடைமுறையில் இருக்காது.
வானியல் நிகழ்வு
இதனால் இந்தியர்கள் வழக்கமான தினசரி செயல்களை மேற்கொள்ளலாம். ஆன்மீக கட்டுப்பாடுகள் பற்றிய அவசியம் இல்லை என அறிஞர்கள் விளக்குகின்றனர்.

