MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கும்பத்தில் செவ்வாய்-ராகு சங்கமம்: 40 நாட்கள் ஜொலிக்கப்போகும் 6 ராசிகள்! முன்னேற்றம் இனி உங்கள் கையில்!

கும்பத்தில் செவ்வாய்-ராகு சங்கமம்: 40 நாட்கள் ஜொலிக்கப்போகும் 6 ராசிகள்! முன்னேற்றம் இனி உங்கள் கையில்!

Mars Rahu Conjunction in Kumbha 2026 Rasi : பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையில் கும்ப ராசியில் நிகழும் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கையால் 6 ராசியினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் தான். அந்த ராசியினர் யாரென்று பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 16 2026, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கும்பத்தில் செவ்வாய் ராகு சங்கமம்
Image Credit : Social Media

கும்பத்தில் செவ்வாய்-ராகு சங்கமம்

Mars Rahu Conjunction in Kumbha 2026 Rasi : வரும் பிப்ரவரி 23 முதல் ஏப்ரல் 2 வரை, கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகு ஒன்றிணைகிறார்கள். இந்த கூட்டணி அதிகாரம், சொத்து மற்றும் செல்வத்தின் மீது அதீத மோகத்தை உண்டாக்கும். பிடிவாதம், விடாமுயற்சி மற்றும் சண்டையிடும் குணம் அதிகரித்தாலும், மேஷம் முதல் கும்பம் வரையிலான 6 ராசிகளுக்கு இது ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. இந்த 40 நாட்களில் உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போகும் அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை தெரியுமா? மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசியினரே.. தயாராக இருங்கள், முன்னேற்றம் உங்களைத் தேடி வரப்போகிறது.

27
ரிஷப ராசிக்கான பலன்
Image Credit : Getty

ரிஷப ராசிக்கான பலன்

ரிஷப ராசியினருக்கு 10-ம் வீட்டில் சேரும் செவ்வாய்-ராகு, அதிகாரத்தையும் அந்தஸ்தையும் அள்ளித் தரப்போகிறது. வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் என அதிரடி மாற்றங்கள் நிகழும். மருத்துவம் மற்றும் சட்டத் துறையில் இருப்பவர்களுக்குப் புகழும் பணமும் குவியும். பழைய வழக்குகளில் வெற்றி பெற்று சொத்துக்களை மீட்பீர்கள். உங்கள் தலைமையின்கீழ் தொழிலில் அபார வளர்ச்சி காண்பீர்கள். பொருளாதார ரீதியாக உச்சத்தை அடையும் காலமிது!

37
மகரம் ராசிக்கான பலன்
Image Credit : istockphoto

மகரம் ராசிக்கான பலன்

மகர ராசியினருக்கு 2-ம் வீட்டில் அமரும் செவ்வாய்-ராகு, செல்வச் செழிப்பை அள்ளித் தரப்போகிறது. வேலையில் வருமான உயர்வு, வெளிநாட்டு வாய்ப்புகள் என நிதி நிலைமை உச்சம் தொடும். சிக்கலில் இருந்த சொத்துக்கள் உங்கள் வசமாகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பண வரவு உண்டாகும். சொந்த வீடு மற்றும் வாகனக் கனவுகள் நனவாகும் காலமிது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி, வாழ்வில் ஒரு நிலையான கௌரவத்தைப் பெறுவீர்கள்!

47
மேஷ ராசிக்கான செவ்வாய் ராகு சேர்க்கை பலன்
Image Credit : Asianet News

மேஷ ராசிக்கான செவ்வாய் ராகு சேர்க்கை பலன்

மேஷ ராசி நேயர்களே, உங்கள் லாப வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு இணைவதால் 'ஜாக்பாட்' அடிக்கப் போகிறது! இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்; எடுத்த காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். அபாரமான தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, உங்கள் திறமையால் வேலையில் மிகப்பெரிய பதவி உயர்வைப் பெறுவீர்கள். பிசினஸில் சில மாற்றங்களைச் செய்து லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். காதல் கைகூடி, மனதிற்குப் பிடித்தவருடன் திருமண பந்தத்தில் இணைவீர்கள். போட்டித் தேர்வுகள் முதல் பங்குச்சந்தை வரை அனைத்திலும் வெற்றி உங்கள் பக்கம்! விடாமுயற்சியால் வருமானத்தை மலைபோல் உயர்த்துவீர்கள்.

57
தனுசு ராசிக்கான ராகு செவ்வாய் சேர்க்கை பலன்
Image Credit : AI

தனுசு ராசிக்கான ராகு செவ்வாய் சேர்க்கை பலன்

தனுசு ராசியினருக்கு 3-ம் வீட்டில் அமரும் செவ்வாய்-ராகு, ஒரு 'புயல்' வேக முன்னேற்றத்தைத் தரப்போகிறது. வேலையில் பதவி உயர்வு, பல வழிகளில் வருமானம் எனப் பொருளாதாரத்தில் உச்சம் தொடுவீர்கள். தனிப்பட்ட மனக்கசப்புகள் தீர்ந்து நிம்மதி பிறக்கும். நேர்காணல்களில் தடையின்றி வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் லாபகரமாக மாறும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். தைரியமாக முடிவுகளை எடுத்து சாதிக்கும் காலமிது!

67
கும்ப ராசிக்கான ராகு செவ்வாய் சேர்க்கை பலன்
Image Credit : unsplash and pinterest

கும்ப ராசிக்கான ராகு செவ்வாய் சேர்க்கை பலன்

கும்ப ராசியிலேயே செவ்வாய்-ராகு இணைவதால், உங்கள் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். எந்தச் சவாலையும் எதிர்கொண்டு வேலையில் உயர் இடத்தைப் பிடிப்பீர்கள். காவல்துறை மற்றும் இராணுவத் துறையினருக்குப் பதவி உயர்வு நிச்சயம். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். தர்க்க ரீதியான விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மருத்துவம் மற்றும் சட்டத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு திருப்புமுனை காலம். சமுதாயத்தில் உங்களின் அந்தஸ்து ஒரு புதிய உயரத்தை எட்டும்!

77
சிம்மம் ராசிக்கான செவ்வாய் ராகு சேர்க்கை பலன்
Image Credit : Social Media

சிம்மம் ராசிக்கான செவ்வாய் ராகு சேர்க்கை பலன்

சிம்ம ராசியினருக்கு 7-ம் வீட்டில் அமரும் செவ்வாய்-ராகு, அதிரடி முன்னேற்றங்களைத் தரப்போகிறது. வெளிநாட்டு வேலை மற்றும் வெளிநாட்டுத் திருமண வரன் அமையக் கூடிய காலமிது. தொழிலில் வேகம் கூடும், வேலையில் உங்கள் அதிகாரம் நிலைநாட்டப்படும். காதலில் வெற்றி காண்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற்று பெரிய சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும். நிதி நிலைமை உச்சத்தை அடைந்து, பெரும் பணக்காரராக மாறும் யோகம் கைகூடி வந்துள்ளது!

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Birth Date : இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! கஷ்டத்தையும் சாதனையாக மாற்றுவார்கள்.!
Recommended image2
மீன ராசியில் நடக்கும் இணைவு.! மார்ச் மாதம் முழுவதும் தூக்கத்தை தொலைக்கப் போகும் 4 ராசிகள்.!
Recommended image3
மகா சிவராத்திரி இரவில் நடக்கும் அதிசயம்.! 4 ராசிகள் வாழ்வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved