சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை நீங்க பாலோ பண்ணினால் வாழ்வில் பணக்கஷ்டமே வராதாம் தெரியுமா?
வாழ்க்கையில் பண கஷ்டமே வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய ஆறு விஷயங்களை சாணக்கிய நீதி நமக்கு சொல்கிறது.
வெறும் பணம் மட்டுமே ஒருவருடைய மதிப்பை உயர்த்துவதில்லை. சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக வாழ்பவர்களே வெற்றிகரமாக வாழ்பவர்கள் என சாணக்கியர் கூறுகிறார். சாணக்கியர் என்பவர் அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் மற்றும் அறிஞரும் கூட. அவர் வாழ்க்கையில் பணக்கஷ்டம் வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்களை நமக்கு சொல்கிறார்.
யோசித்து செலவு செய்:
எதையும் சிந்திக்காமல் அவசரமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். சாணக்கியரின் நீதிபடி, பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்பவர்கள், பணத்தை சேமிக்காதவர்கள் ஆகியோர் முட்டாள்கள்கள். இவர்கள் மோசமான துன்பங்களை சந்திக்க கூடும். அவசர காலத்திற்கு என்று கொஞ்சம் பணம் சேமிக்க வேண்டும். பணத்தை சேமிக்கத் தெரிந்தவர்கள் புத்திசாலிகள் என்று சாணக்கியர் சொல்கிறார். ஆடம்பரத்திற்காக பணத்தை வீணாக செலவு செய்யக் கூடாது.
சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்?
சாணக்கியர் கூற்றுப்படி பணத்தை நாம் சரியாக உபயோகிக்க வேண்டும். கெட்ட செயல்களில் நாம் சம்பாதிக்கும் பணம் எந்த நன்மையும் செய்யாது. ஒருபோதும் பணத்திற்கு அடிமையாகக் கூடாது. சாணக்கியரின் கொள்கைகளை நாம் பின்பற்றும் போது நமக்கு பணக்கஷ்டம் ஏற்படவே ஏற்படாது. வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம் போன்ற விஷயங்களை தேர்வு செய்யும் போது தெளிவாக தேர்வு செய்ய வேண்டும். மனதிற்கு பிடித்த இடங்களில் வசிக்கும் போதும், வேலை செய்யும் போதும் பணத்தை சம்பாதிக்க முடியும்.
நல்ல செயல்கள்:
சாணக்கியரின் கொள்கைகளின் படி ஒழுக்கம் தவறிய வழிகளில் நாம் பணத்தை சம்பாதித்தால் அது விரைவில் விரையம் ஆகிவிடும். அதாவது நீங்கள் தவறான வழியில் சம்பாதிக்கும் பணம் பத்து வருடங்களுக்கு பின்னர் உங்களிடமிருந்து சென்றுவிடும். உங்களுடைய நிம்மதியும் அதனுடன் சேர்ந்து அழிந்துவிடும். தவறான வழியில் சம்பாதிக்கும் பணத்திற்கு குறைந்த ஆயுள் காலம் தான். ஆகவே நல்ல வழிகளில் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.
பிறரை மதித்தல்:
சாணக்கியரின் கொள்கைகளின் படி, எந்த நிலையிலும் மற்றவர்களை மதித்து நடக்க வேண்டும். நீங்கள் பிறரை மதிக்கும் போது தான் அவர்களும் உங்களிடம் மரியாதையாக நடந்து கொள்வார்கள். பிறரை மதிப்பவர்களுக்கு சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும் என்கிறது, சாணக்கிய நீதி. பிறரை அவமானப்படுத்துவதில் மகிழ்ந்தவர்களை சமூகம் ஒருபோதும் மதிப்புடன் பார்க்காது.
மகாலட்சுமி வழிபாடு:
சாணக்கியரின் கூற்றுப்படி, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகம் இருந்தால் மகாலட்சுமி வாசம் செய்ய மாட்டார். வீட்டில் அமைதியான சூழல் நிலவும் போது தான் மகாலட்சுமி அங்கு வீற்றிருப்பார். இல்லையென்றால் அங்கிருந்து உடனே வெளியேறி விடுவார். மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லாத வீட்டில் செல்வம் எப்போதும் தங்காது. உங்களிடம் இருக்கும் பணத்தை குறித்து எப்போதும் தற்பெருமை கொள்ள கூடாது. பணத்தின் மீது மோகம் கொண்டு திரியக்கூடாது. பணம் சம்பாதிப்பதை வெறி போல செய்யக்கூடாது. தங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து ஆணவம் கொள்பவர்களிடம் பணம் நிலைக்காது.