MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வாசலில் இந்த 2 பொருள் மட்டும் கட்டுங்க..! கெட்ட நேரத்துக்கு முடிவு காலம்.. எண்டு இல்லாம ஐஸ்வர்யம் கிடைக்கும்

வாசலில் இந்த 2 பொருள் மட்டும் கட்டுங்க..! கெட்ட நேரத்துக்கு முடிவு காலம்.. எண்டு இல்லாம ஐஸ்வர்யம் கிடைக்கும்

வாசலில் செய்யும் சிறுமாற்றங்கள் கூட மொத்த வீட்டின் நன்மைக்கும் காரணமாகிவிடும். வீட்டு வாஸ்து சாஸ்திரங்களில் தோஷம் இருந்தால் கூட நீங்கும். 

2 Min read
Author : maria pani
Published : Mar 15 2023, 06:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

"மனசே சரியில்ல.. வீட்டுல எப்பவும் பிரச்சனை, செலவுக்கு மேல செலவு. தூங்க முடியாத அளவுக்கு மன அழுத்தம், நெனச்ச வேலை நடக்கல கைல காசு இல்ல" என்பது போன்ற புலம்பல்கள் வருவதற்கு முதல் காரணம் அவர்களுக்கு நேரம் சரியில்லை என்பதுதான். என்னதான் முயற்சி செய்தாலும் தோல்வியில் தான் முடியும். நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிரம்பி, கெட்ட நேரம் தொடங்கிவிட்டால் அந்த நேரத்தில் நம்மை தேடி வரும் நல்ல விஷயங்கள் கூட கெட்டதாகவே மாறிவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஒரு மனிதனின் கெட்ட நேரத்தில் தான் அவனுடைய உண்மையான பலத்தையும் அறிய முடியும். உங்களுடைய கெட்ட நேரத்தில் துன்பங்கள் வீட்டுக்குள் வராமல் தடுப்பதற்கு சில பரிகாரங்கள் இருக்கின்றன. இந்த பரிகாரத்தை செய்தால் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும். 

35

இந்து சாஸ்திரங்களின்படி, இந்த இரண்டு பொருட்களையும் உங்களுடைய வீட்டில் வாசலில் தொங்கவிட்டால் குடும்பத்தை தீய சக்திகள் அணுகாது என்பது பரவலான நம்பிக்கை. அந்த இரண்டு பொருள்கள் வசம்பும், அருகம்புல்லும் தான். கடும் விஷத்தையும் முறிக்கும் ஆற்றல் இந்த இரண்டு பொருள்களுக்கும் இருக்கிறது. நம்மை வீட்டை சூழ்ந்துள்ள தீய சக்திகள் தான் அந்த விஷக்கிருமிகள். இந்த வசம்பையும், அருகம்புல்லையும் ஒன்றாக வைத்து தான் பரிகாரம் செய்யவேண்டும். 

இதையும் படிங்க: கண் திருஷ்டியால் நீங்கள் தொடங்கும் காரியங்கள் தடைபடுதா? வீட்டில் ஓயாத பிரச்சனை.. இந்த 1 பரிகாரத்தை பண்ணுங்க

45

ஒரு சின்ன துண்டு வசம்பு, அதனுடன் இரண்டு அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து ஒரு மஞ்சள் வண்ண நூலால் கட்டி நிலை வாசலில் மாட்டி விடுங்கள். இது வீட்டிற்கு வரும் வெளி ஆட்கள் கண்களில் படுமாறு வைப்பது ரொம்ப அவசியம். வாரத்துக்கு ஒரு முறை அருகம்புல்லை மட்டும் மனிதர்கள் கால் படாத இடத்தில் புதைத்து விட்டு புதிய அருகம்புல்லை வசம்புடன் சேர்த்து மாட்டி வையுங்கள். இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களுடைய குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்யும் போது ஊதுவத்தியை வாசலில் உள்ள வசம்புக்கும் காட்டுவதை வழக்கப்படுத்துங்கள். குலதெய்வத்தை நினைத்து செய்யும் இந்த பரிகாரத்தினால் வீட்டு வாசலில் காவல் தெய்வமாக குலதெய்வம் நிற்கும் என்பது ஐதீகம். 

55

இந்த பரிகாரம் செய்த பிறகு வீட்டில் இருக்கும் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நிம்மதி நிலைகொள்ளும். தீராத கடன் சுமைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக அடைப்படும். இந்த பரிகாரத்தில் பயன்படுத்தப்படும் வசம்பை வருடத்திற்கு ஒரு முறை மாற்றினால் கூட போதுமானது. ஆனால் அருகம்புல்லை ஒரு வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு அருகம்புல் கிடைக்கவில்லை என்றால், வெறும் வசம்பை மட்டும் நிலை வாசலில் கட்டி வைக்கலாம். வினை தீர்க்கும் விநாயகனுக்கு பிடித்தமான அருகம்புல் நம்முடைய வீட்டு நிலை வாசல் படியில் இருந்தால் எல்லா வாஸ்து பிரச்சனைகளும் கூட சரியாகும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை மனதார இறைவனை வேண்டி நம்பிக்கையுடன் செய்பவர்கள் பலனடைவார்கள். 

இதையும் படிங்க: தரித்திரம் பிடிச்ச இந்த பொருட்களை, வீட்டுல இருந்து உடனே தூக்கி போடுங்க.. மொத்த பீடை ஒழிந்து செல்வம் பெருகும்

About the Author

MP
maria pani
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Purattasi Kolam: புரட்டாசி ஸ்பெஷல் கோலம் டிசைன்.. உங்க வீட்டு வாசலில் ட்ரை பண்ணுங்க!
Recommended image2
Perumal Holy Names: "கோவிந்தா..நாராயணா"..புரட்டாசியில் சொல்ல வேண்டிய பெருமாள் திருநாமங்கள்!
Recommended image3
Purattasi: நாளை புரட்டாசி முதல் நாள்.. வீட்டில் இந்த விஷயங்களை மறக்காமல் செய்யுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved