அட்சய திருதியை. 2023: அட்சய திருதியையன்று இந்த பூஜையை செய்தால் போதும். உங்க வீட்ல பண மழை தான்!
Akshaya Tritiya 2023: அட்சய திருதியை ஏன் மிகவும் சிறப்பான நாளாக கருதுகிறார்கள்? அட்சய திருதியை தினத்தன்று என்ன பூஜை செய்ய வேண்டும் என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியா முழுதும் கொண்டாடப்படும் திருநாளில் அட்சய திருதியும் ஒன்றாகும். இந்த நாள் மிக அற்புதமான நாளாக கருதப்படுகிறது. நாம் செய்கின்ற நல்ல செயல்கள் அனைத்தும் புண்ணியமாக மாறி மீண்டும் அது நமக்கு பன் மடங்காக திரும்பி கிடைக்கும்.
மங்களம் உண்டாகவும், வற்றாத செல்வம் கிடைக்கவும், தங்கம் சேரவும் நம்மில் அதிகமானோர் தங்கம் வாங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது தங்கம் விற்கும் விலையை பார்த்தால், தங்கத்தை பார்த்தாலே போதும், தங்கம் பெருகும் என்று சொல்லி விடுவார்களோ என்னவோ!
அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பும், மஞ்சளும் வாங்கினாலே போதுமானது . தங்கங்கத்திற்கான அதே பலன்கள் தன இவைகளுக்கும் உண்டு .இந்த வருடம் அட்சய திருதியை வரும் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினத்தில் குரு பெயர்ச்சியும் ஏற்பட உள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும்.
அட்சய திருதியை ஏன் மிகவும் சிறப்பான நாளாக கருதுகிறார்கள்? அட்சய திருதியை தினத்தன்று என்ன பூஜை செய்ய வேண்டும் என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்
தங்கம் வாங்கக் காரணம் என்ன:
சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்து வருகிற 3 வது நாள் அட்சய திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. 3 ஆம் எண்ணின் அதிபதி குரு பகவான் ஆவார் . குரு தங்க உலோகத்தை பிரதிபலிக்கிறார். ஆகவே குரு பகவானுக்கு பொன்னன் என்ற சிறப்பு பெயர் கூட உண்டு. இந்த காரணத்தினால் தான் அட்சய திருதியை தினத்தில் தங்கம் அல்லது பொன் நகைகள் வாங்குவது சிறப்பு என்று கூறியுள்ளனர் நமது முன்னோர்கள் .
யோகமும் செல்வமும் தரும் அட்சய திருதியை நன்னாள்:
மகாலட்சுமியின் பரிபூரண ஆசியையும், அருளையும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை திருநாளின் முக்கிய நோக்கம். சந்திரன் 1 முறை சாபம் பெற்றதால் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். சந்திரன் மனம் திருந்திய பிறகு அட்சய திருதியை நாளன்று அட்சய வரம் பெற்றுக் கொண்டார். ஆகையால் மறுபடியும் அட்சய திருதியை நாளில் இருந்து வளரத் தொடங்கினார்.
அரிதான அல்லது கஷ்டமான வேலையை செய்வதை "அலப்ய யோகம்" என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேருவதால் அரிதான அட்சய திருதியை நழுவ விட்டால் பிறகு ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
லட்சுமி குபேர பூஜை:
அட்சய திருதியை நாளன்று அதிகாலை எழுந்து குளித்து, பின் விஷ்ணு பூஜை செய்தால் சிறப்பான பலன்களை தரும்.
அட்சய திருதியை நாளில் அதி காலை எழுந்து நீராடிவிட்டு ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை உச்சரித்து புதிய செயல்களை செய்யவைத்து உச்சிதம் .பின் லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.
மகாலட்சுமி பூஜை :
திருமாள் மார்பில் மகாலட்சுமி எப்போதும் நீங்காமல் இருக்க அட்சய திருதியை தினத்தில் சிறப்பு வரம் பெற்றாள். ஆகையால் அன்று வாசுதேவரை வணங்கி விட்டு உங்களால் இயன்றளவில் அன்னதானம் செய்வைத்து மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும்.
வைகுண்ட நாதன் ஏழுமலையான் திருப்பதி தன் திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் கூறுகிறது. அப்படியான பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தில் மகாலட்சுமியை மனம் உருகி, வேண்டி வணங்கி செல்வத்தை பெருக்குவதாகவும் கூறப்படுகிறது .
ஆகையால் அன்றைய தினத்தில் கனகதாரா ஸ்தோத்திரம் உச்சரித்து மகாலட்சுமியை வணங்குவது மிகச் சிறப்பாகும். அதோடு குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அன்னப் பிரசானம் செய்வதும் மிக சிறப்பாகும்.
செல்வம் பெருக என்ன செய்யலாம்:
அட்சய திருதியை தினத்தில் வீட்டின் 4 மூலைகளிலும் சோழிகளை போடுவது மரபாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. அட்சய திருதியை தினத்தில் மகாலட்சுமிக்கு திருவுருவ படத்துக்கு மல்லிகைப் பூ வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் உச்சரித்து ஒரு மனதாக பிரார்த்தனை செய்தாலே போதும், அன்னை மகாலட்சுமி உங்கள் வீடு நிறைய செல்வத்தை அள்ளித் தருவாள்.
உங்களால் முடியுமானால் அன்றைக்கு அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி விட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி தூபங்கள், கற்பூர ஆராதனை காட்டி கற்கண்டும் பாலும் வைத்து மகாலட்சுமியின் பெயரை உச்சரித்தாலே போதும் வற்றாத செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும்.
உப்பு, மஞ்சள்:
அட்சய திருதியை தினத்தில் தங்கம் அல்லது வெள்ளி தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கல் உப்பு, மஞ்சள், பச்சரிசி, பருப்பு வகைகள், நெய் போன்ற பொருட்களும் வாங்கி பூஜித்தால் மென்மேலும் பன் மடங்காக பெருகும். அதோடு நம் வீட்டில் அள்ள அள்ள குறையாத வகையில் உணவுப் பொருட்களும் குவியும்.
குழந்தை பிறந்த பிறகு அரைஞாண் கயிறு ஏன் கட்டுகிறோம்? இதன் காரணம் ? பின்னணியில் இத்தனை பலன்களா?