MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Aadi matha sirappu naatkal 2024: ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்

Aadi matha sirappu naatkal 2024: ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்

ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது.  இந்த மாதத்தில் ஆடி தபசு, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடி பெருக்கு என அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டும். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 வரை உள்ளது எந்த நாளில் என்ன விஷேசம் நடைபெறும் என்று பார்க்கலாம்.

3 Min read
Author : Dhanalakshmi G
Published : Jul 12 2024, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
ஆடி மாத விசேஷங்கள் 2024

ஆடி மாத விசேஷங்கள் 2024

ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியே உண்டு. ஆடியில் விதை விதைத்தல், விவசாயம் செய்தல், துணி நெய்தல், குடிசைத் தொழில் செய்தல், போன்ற வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியமான ஆதார வேலைகளில் ஈடுபடுவார்கள்.

29
ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்

ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்

ஆடி 1ஆம் தேதி மாத பிறப்பு தொடங்கி ஆடி 31ஆம் தேதி கடைசி ஆடி வரை திருவிழாதான்.  ஆடி செவ்வாய்,ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு திருவிழாக்கள் நடைபெறும்.  "ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பது பழமொழி". ஆடி செவ்வாய் நாளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைபிடிப்பார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள்.

39
ஆடி தபசு

ஆடி தபசு

ஆடி அமாவாசை போல ஆடி பவுர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில்தான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்பிகை ஈசனை விஷ்ணுவுடன் காட்சி தருமாறு வேண்டினாள். அதற்கு ஈசன் பொதிகை மலையில் புன்னைவனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி  காணக்கிடைக்கும் என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இறைவன் ஆடி பெளர்ணமி அன்று பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி  சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இன்றைக்கும் பாரம்பரியமாக இந்த விழா சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. ஆடி 05 ஜூலை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  கொண்டாடப்படுகிறது.
 

49
ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த  நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். இந்த மாதம் ஆடிக்கிருத்திகை ஆடி 13, ஜூலை 29 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

59
ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடி பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆடி 18ஆம் தேதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

69
ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை

ஆடி மாதத்தில் சந்திரன் தனது சொந்ந வீட்டில் இருக்கிறார். அப்போது சூரியனுடன் தொடர்பு  ஏற்படும் நாள் ஆடி அமாவாசை நாளாகும்.   முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாக கடைபிடிக்க வேண்டும். அன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆடி 19 ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
 

79
ஆடிப்பூரம்

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள் இந்த ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7 ஆம் நாள் ஆடி 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
 

89
நாக பஞ்சமி

நாக பஞ்சமி

இந்தியாவில் நாகர்களை தெய்வமாக வழிபடும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆடி மாதத்தில் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. ஆடி 23 ஆகஸ்ட் 8 நாக சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 9 ஆடி 24ஆம் தேதி நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. திருமண தடை, புத்திரபாக்கிய தடை இருப்பவர்கள் நாக சதுர்த்தி, நாக பஞ்சமி நாளில் அருகில் உள்ள புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் ஊற்றி வழிபடலாம். ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆடி 25 ஆடி சுவாதி கருடாழ்வார் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

99
வராஹி அம்மன்

வராஹி அம்மன்

ஆடி மாதம் முதல்நாள் எப்படி சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அதே போல ஆடி மாத கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும்.  ஆடி  மாதம் கடைசி நாளில் மாலை வேளையில் இந்த  பூஜையை  செய்ய வேண்டும். முன்னோர்கள் நம் படையலை சந்தோஷமாக ஏற்றுக்  கொண்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஆடி 31  ஆகஸ்ட் 16ஆம் நாள் கடைசி ஆடி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதமும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

About the Author

DG
Dhanalakshmi G
செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருவிழாக்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கந்த சஷ்டி 2026: முருகன் அருள் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரத முறை என்ன?
Recommended image2
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image3
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved