திருமணத் தடை நீக்கும் ஸ்ரீ கல்யாண காமாட்சி உடனுறை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்!
தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களில் முதன்மையான இடத்தை இந்த கோட்டை கோயில் பெறுகிறது. எட்டாம் நூற்றாண்டில் குறுநில மன்னர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது.
வாரம் ஒரு கோவில் தொகுப்பில் இந்த வாரம் நாம் காண இருப்பது தர்மபுரியில் உள்ள கோட்டைக் கோவில் என அழைக்கப்படும் ஶ்ரீ கல்யாண காமாட்சி உடனுறை மல்லிகார்ஹூனேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு
தர்மபுரியில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நகரின் மைய்ய பகுதியில் அமைந்துள்ளதால் எளிதில் இக்கோயிலுக்கு செல்லலாம் .
கோயிலுக்குள் சென்றதும் கொடிமரம் மற்றும் நந்தி பெருமாள் அனைவரையும் வரவேற்கிறது. அவர்களை தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால் இறைவனின் அர்த்த மண்டபத்தை அடையலாம் . அர்த்த மண்டபத்தில் அறிவியலுக்கு சவால் விடும் அதிசய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தூண்கள் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவை ‘தொங்கும் தூண்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
கருவறையில் ஈசனை கண்டால் அவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்து அருளுகிறார். 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி என்ற நாமத்துடன் விளங்குகிறார். இந்த 36 படிகள் சிவகாமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது. கர்பகிரகத்தின் வாயில் அருகே இடது புறம் விநாயக பெருமானும், வலது புறம் முருக பெருமானும் உள்ளார்கள், அப்படியே வெளியே வந்து கோயிலை வலம் வருகையில் வலம்புரி விநாயகர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். அதனருகில் இஷ்ட சித்தி சண்முகர் சன்னதி உள்ளது. அவர் ஆறுமுகங்களுடன் மயில்வாகனத்தில் ஐயப்ப சுவாமியை போல் கால்களை மடக்கி அமர்ந்துகொண்டிருக்கிறார். முருகரின் ஒரு பாதம் நாகத்தின் தலைமேல் உள்ளது. முருகரின் வாகனமான மயில் தன் அலகால் ஒரு நாகத்தை பிடித்துள்ளது. இந்த தரிசனம் எங்கும் காணக்கிடைக்காத ஒரு அபூர்வ தரிசனம் ஆகும் .
அம்பாள் கல்யாண காமாட்சி சன்னதி சிவபெருமானின் சன்னதியை விட உயரமாக அமைந்துள்ளது. 18 படிகள் ஏறித்தான் அன்னை காமாட்சியை தரிசிக்க வேண்டும். இங்கு அம்பாள் கல்யாண காமாக்ஷி சிவசக்தி ஐக்ய சுருபமாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் கம்பீரமாக நின்று கொண்டு அருள்புரிகிறார்.
18 கல்யாண குணங்களை நாம் கடைபிடித்தால் தான் கல்யாண காமாக்ஷியின் அருளும் அனுகிரஹமும் நமக்கு கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் 18 படிகள் ஏறி அன்னையை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
பூஜை மற்றும் வழிபாடு
அமாவாசை நாளன்று அன்று மாலை வேளையில் பெண்கள் 18 படிக்கு பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் தடை நீங்க வேண்டி தேய்பிறை அஷ்டமி நாளில் கல்யாண மாலை பூஜை செய்து பைரவர் சன்னதியில் கந்தர்வ ராஜ கல்யாண மாலையை பெற்றுக்கொள்வது சிறப்பு.
சேலம் கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்