- Home
- Spiritual
- Chanakya Niti: இந்த 3 விஷயங்கள் இருந்தால் பூமியே உங்களுக்கு சொர்க்கமாக மாறும்.! சாணக்கியர் சொல்லும் சீக்ரெட் தெரியுமா?
Chanakya Niti: இந்த 3 விஷயங்கள் இருந்தால் பூமியே உங்களுக்கு சொர்க்கமாக மாறும்.! சாணக்கியர் சொல்லும் சீக்ரெட் தெரியுமா?
Chanakya Advice: சாணக்கியர் தனது நீதியில் இந்த 3 விஷயங்களை தங்களது வாழ்க்கையில் வைத்திருப்பவர்கள் பூமியிலேயே சொர்க்கத்தில் வாழ்வது போன்ற மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள் என்று கூறுகிறார். அந்த 3 விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கியர் நீதி
சாணக்கியர் இந்திய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அறிஞர்களின் ஒருவராக இருக்கிறார். அவரது ‘நீதி சாஸ்திரம்’ நூல் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஆழமான அறிவுரைகளை வழங்குகிறது. ஒரு மனிதன் வாழ்க்கையை பூமியில் சொர்க்கமாக மாற்றுவதற்கு மூன்று முக்கிய விஷயங்களை பின்பற்ற வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கீழ்படிதல் கொண்ட மகன்
- கீழ்படிதல் கொண்ட மகன்களைப் பெற்ற பெற்றோர்கள் பூமியிலேயே சொர்க்கத்தை போல் வாழ்வார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
- பெற்றோர்களின் பேச்சை கேட்டு அவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் மகன்களைப் பெற்ற பெற்றோருக்கு இந்த பூமி சொர்க்கம் போன்றது என்று அவர் கூறுகிறார்.
- பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
- அத்தகைய குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வயதான காலத்தில் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் ஆதரிக்கிறார்கள்.
- இத்தகைய குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் போன்றது என்று சாணக்கியர் தெளிவுபடுத்துகிறார்.
ஒருவரையொருவர் மதிக்கும் கணவன் மனைவி
- தனது வார்த்தையைக் கேட்டு தனது விருப்பப்படி நடந்து கொள்ளும் மனைவியைக் கொண்ட ஒரு மனிதன் இந்த பூமியில் சொர்க்கம் போல வாழ்வதாக சாணக்கியர் கூறுகிறார்.
- இது மனைவிக்கு மட்டுமல்ல, கணவனுக்கும் பொருந்தும்.
- ஒரு மனிதன் தனது மனைவியின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.
- வீட்டில் அமைதி நிலவும். குடும்பத்தில் அன்பும், பரஸ்பரம் மரியாதை இருந்தால் அது அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
திருப்திக்கு போதுமான செல்வம்
- சாணக்கியர் கூற்றுப்படி தேவைக்கு பொருள் சேர்ப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
- அதிக செல்வம் இருப்பவர்கள் மன நிம்மதியை இழந்து தவிப்பார்கள்.
- எனவே தேவையான அளவு செல்வம் சேர்ப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
- அவர்கள் தங்கள் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ப வாழப்பழகி இருப்பார்கள். இதுதான் உண்மையான செல்வம்,
- அத்தகையவர்களுக்கு பூமி கூட சொர்கமாக மாறும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி இந்த மூன்று விஷயங்களைக் கொண்டவர்கள் பூமியிலேயே சொர்க்கம் போல வாழ்வார்கள். மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. நமது மதிப்புகள், எண்ணங்கள் மற்றும் உறவுகளில் மறைந்துள்ளது. சாணக்கியர் அறிவுரைப்படி பூமியில் சொர்க்கம் போல வாழ விரும்பினால் இன்று மூன்று விஷயங்களை பின்பற்றினால் போதும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)