MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • Snakes: பாம்புகளுக்கு பெத்த பாசம் கிடையாதா? முட்டையிட்ட உடன் குட்டிகளை பிரிவது ஏன்? அறிவியல் உண்மை!

Snakes: பாம்புகளுக்கு பெத்த பாசம் கிடையாதா? முட்டையிட்ட உடன் குட்டிகளை பிரிவது ஏன்? அறிவியல் உண்மை!

Snakes: உலகில் அனைத்து விலங்குகளும் குட்டியுடன் இருக்க, பாம்புகள் மட்டும் எப்போதும் ஏன் தனித்து இயங்குகிறது? என உங்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கலாம். இதற்கான காரணம் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 14 2026, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாம்புகளின் உலகம் ஆச்சரியமானது
Image Credit : AI

பாம்புகளின் உலகம் ஆச்சரியமானது

மனிதர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக வாழ்ந்து வருவது போல் விலங்குகளும் தங்கள் குட்டிகளுடன் வாழ்ந்து வருகின்றன. விலங்குலகில் தாய்மை என்பது எப்போதும் ஆச்சரியமானது. பூனை தன் குட்டிகளை வாயில் கவ்வி இடமாற்றுவதையும், நாய் தன் குட்டிகளுக்குப் பால் கொடுப்பதையும் நாம் பார்த்திருப்போம். இதேபோல் சிங்கம், புலி, யானை போன்ற காட்டு விலங்குகளும் தங்களின் குட்டிகள் மேல் அதீத பாசம் காட்டும். ஆனால் பாம்புகளின் உலகம் மிகவும் விசித்திரமானது; வித்தியாசமானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பாம்புகள் குட்டியுடன் ஏன் செல்வதில்லை?
Image Credit : Stock Photo

பாம்புகள் குட்டியுடன் ஏன் செல்வதில்லை?

நீங்கள் பாம்புகள் தங்கள் குட்டியுடன் செல்வதை ஒருபோதும் பாத்திருக்க முடியாது. ஏனெனில் முட்டையிட்ட உடனோ அல்லது குட்டி போட்ட உடனோ அதை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் விசித்திரமான குணம் பாம்புகளுக்கு உண்டு. மற்ற உயிரினங்களை போல் பாம்புகளும் ஏன் குட்டிகளுடன் வாழ்வதில்லை பாம்புகளுக்குப் பாசமே இருக்காதா? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இதன் பின்னணியில் இருக்கும் இயற்கையின் விசித்திரமான அறிவியல் காரணங்களை பார்ப்போம்.

இயற்கையின் நியதி இதுதான்

பாலூட்டி விலங்குகளின் குட்டிகள் பிறக்கும்போது மிகவும் பலவீனமாக இருக்கும். தாயின் அரவணைப்பும் பாதுகாப்பும் இல்லாமல் அவற்றால் வாழ முடியாது. ஆனால், பாம்புகள் ஊர்வன (Reptiles) வகையைச் சேர்ந்தவை. இவற்றின் குட்டிகள் பிறக்கும்போதே அல்லது முட்டையிலிருந்து வெளிவரும்போதே முற்றிலும் சுயசார்பு உடையவையாக இருக்கின்றன. அவற்றுக்குத் தேவையான வேட்டையாடும் திறன், தற்காப்பு உணர்வு மற்றும் விஷத்தன்மை ஆகியவை பிறப்பிலேயே இயற்கையாக அமைந்துவிடுகின்றன. எனவே, அவற்றுக்குத் தாயின் பராமரிப்புத் தேவைப்படுவதில்லை.

Related Articles

Related image1
Snake: உங்கள் கனவில் பாம்பு வருதா..? துரோகத்தின் அறிகுறியா..? மரணத்தின் எச்சரிக்கையா..?
Related image2
Snakes: பால் குடிக்காதுனு தெரிஞ்சும் பாம்பு புத்துல ஏன் பால் ஊத்துறாங்க? அந்த பழக்கம் எப்படி வந்தது?
34
சொந்த குட்டிகளையே பாம்புகள் சாப்பிடும்
Image Credit : stockPhoto

சொந்த குட்டிகளையே பாம்புகள் சாப்பிடும்

பாம்புகளுக்குப் பாலூட்டிகளைப் போன்ற நீண்ட காலத் தாய்மை பாச உணர்வு (Maternal instinct) மூளையில் இருப்பதில்லை. மேலும், பாம்புகள் பொதுவாகப் பசியோடு இருக்கும்போது எதிரில் நகரும் எதையும் உணவாகப் பார்க்கும் குணம் கொண்டவை. முட்டை பொரிந்து வெளிவரும் குட்டிகள் நகர்வதைப் பார்த்து, பசியில் இருக்கும் தாய் பாம்பே தன் சொந்தக் குட்டிகளைச் சாப்பிட்டுவிடக் கூடிய ஆபத்து இயற்கையில் உண்டு. இதைத் தவிர்க்கவே, குட்டிகள் வெளிவரும் தருணத்தில் தாய் பாம்பு அங்கிருந்து விலகிச் சென்றுவிடுகிறது.

மரபணுவிலேயே விதைக்கப்பட்டுள்ளது

தெளிவாக சொல்வது என்றால் பாம்புகளின் உலகில் உயிர் பிழைத்திருப்பது, சாப்பிடுவது என இரண்டும் தான் இருக்கிறது. அதன் மரபணுவிலேயே இயற்கை அப்படி தான் பிக் செய்து வைத்திருக்கிறது. பாம்பு ஒரு குட்டி போட்டு, பிற்காலத்தில் அந்த குட்டியே எதிரில் வந்தாலும், தாய்ப் பாம்பு பசியோடு இருக்கும்போது அதனை ஒரு உணவாகத்தான் பார்க்கும். அதற்கு தன் குட்டி என்றெல்லாம் தெரியாது. இது தான் இயற்கையின் நியதி.

44
ராஜநாகம் இதில் வித்தியாசமானது
Image Credit : stockPhoto

ராஜநாகம் இதில் வித்தியாசமானது

இதில் சில ஆச்சரியமான விதிவிலக்குகளும் உண்டு. உலகிலேயே கூடுகட்டி முட்டையிடும் ஒரே பாம்பு ராஜநாகம் (King Cobra) ஆகும். முட்டைகளைப் பிற எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க அது கூடு கட்டி, முட்டை பொரியும் வரை கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேல் பட்டினியாக இருந்து காவல் காக்கும். ஆனால், குட்டிகள் முட்டையை உடைத்து வெளிவரும் தருணத்தில், பசியில் தன் குட்டிகளைத் தானே சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்து கிளம்பிவிடும். சில மலைப்பாம்புகளும் முட்டைகளைத் தன் உடலால் சுற்றி வெப்பமளித்து அடைகாக்கும்.

ஒட்டுமொத்தத்தில் பாம்புகள் தன் குட்டிகளைப் பிரிந்து செல்வது பாசமின்மையால் அல்ல; இயற்கையின் தப்பிப்பிழைக்கும் கோட்பாட்டின்படி குட்டிகள் தனித்து வாழப் பழக வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
இந்தியா
சிறப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Simple Kitchen Hacks: இனி வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வராது.! யாருமே சொல்லாத ரகசியம்.!
Recommended image2
விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
Recommended image3
மூன்றெழுத்து மந்திரத்திற்காக எச்சில் இலையை எடுத்த புஸ்ஸி! அடிமட்ட தொண்டனாய் மாறிய பொதுச்செயலாளர்!
Related Stories
Recommended image1
Snake: உங்கள் கனவில் பாம்பு வருதா..? துரோகத்தின் அறிகுறியா..? மரணத்தின் எச்சரிக்கையா..?
Recommended image2
Snakes: பால் குடிக்காதுனு தெரிஞ்சும் பாம்பு புத்துல ஏன் பால் ஊத்துறாங்க? அந்த பழக்கம் எப்படி வந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved