- Home
- Lifestyle
- Interesting Facts: 100 ஆண்டுகளாக வடிவம் மாறாத பிளேடு.! டிசைன் மட்டுமல்ல, செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.! 99% பேருக்கு இது தெரியாது.!
Interesting Facts: 100 ஆண்டுகளாக வடிவம் மாறாத பிளேடு.! டிசைன் மட்டுமல்ல, செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.! 99% பேருக்கு இது தெரியாது.!
Interesting Facts about Razor Blade Shape: பல ஆண்டுகளைக் கடந்த பிறகும் பிளேடின் வடிவம் மாறாமல் அப்படியே இருப்பதற்குப் பின்னால் அறிவியல் மற்றும் சுவாரஸ்ய காரணங்கள் உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம்.

Interesting Facts about Razor Blade Shape
உலகம் எங்கிலும் பயன்படுத்தப்படும் பிளேடுகளின் வடிவம் ஒரே மாதிரியாகவும், அதன் நடுப்பகுதி ஒரே வடிவமைப்பை கொண்டதாகவும் விளங்குகின்றன. இதற்குப் பின்னால் சுவாரஸ்யமான வரலாற்று மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளது. 1901-ல் கிங் கேம்ப் ஜில்லெட் என்பவரால் இந்த பிளேடு வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. இவர் இதை சந்தையில் அறிமுகப்படுத்தி 1904 ஆம் ஆண்டு காப்புரிமையும் பெற்றார். தொடக்கத்தில் இவரது நிறுவனம் மட்டுமே பிளேடுகளை தயாரித்து வந்தது.
100 ஆண்டுகளாக வடிவம் மாறாத பிளேடு
ஜில்லெட் நிறுவனம் இந்த தயாரிப்பை கண்டறிந்த போது தங்கள் பிளேடுகள் ரேஸர் பிடியில் பொருந்த வேண்டும் என்பதற்காக நடுவில் குறிப்பிட்ட வடிவத்தில் துளைகளை அமைத்தனர். 1930 காலகட்டத்தில் அந்த நிறுவனத்தின் காப்புரிமை காலம் முடிவடைந்ததை அடுத்து பல நிறுவனங்கள் பிளேடுகளை தயாரிக்கத் தொடங்கின. ஆனால் ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் வைத்திருந்த ரேஸர் பிடிகளுக்கு பொருந்த வேண்டும் என்பதால் அனைத்து நிறுவனங்களும் இதே வடிவத்தையே பின்பற்றத் தொடங்கினர்.
நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமை
பிளேடு மிக மெல்லிய எஃகு தகட்டால் ஆனது. ஷேவிங் செய்யும் பொழுது ரேஸரின் தலைப்பகுதியில் பிளேடை வைத்து திருகும்பொழுது பிளேடு உடைந்து விடாமல் லேசாக வளைய வேண்டும். நடுவில் உள்ள வெட்டுக்களும் துளைகளும் பிளேடிற்குத் தேவையான நெகிழ்வுத் தன்மையை கொடுக்கின்றன. ஷேவிங் செய்யும் பொழுது ஏற்படும் அழுத்தத்தை பிளேடு முழுவதும் ஒரே சீராக பரப்புவதற்கு இந்த வடிவமைப்பு உதவுகிறது. இந்த குறிப்பிட்ட வடிவமைப்பு பிளேடு உடைந்து போகாமல் லேசாக வளைந்து வெட்டும் முனையை துல்லியமாகவும் உறுதியாகவும் பிடித்துக் கொள்ள உதவுகிறது.
உற்பத்தி எளிமை & குறைந்த செலவு
தொழிற்சாலைகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பிளேடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கூர்மைப்படுத்துதல், பேக்கேஜிங் போன்ற நிலைகளில் இயந்திரங்களின் ஊசிகள் இந்த நடுத்துளைகள் வழியாக பிளேடுகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு துல்லியமாக வேலை செய்ய உதவுகின்றன. நடுவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை வெட்டி எடுப்பது பயன்பாட்டிற்கு தேவையில்லாத உலோகத்தைக் குறைத்து குறைந்த எடையில் குறைந்த செலவுகளில் பிளேடுகளை தயாரிக்க வழிவகுக்கிறது.
இன்றும் தொடரும் பாரம்பரிய வடிவம்
இன்றைய நவீன காலத்தில் மல்டி பிளேடு ரேஸர்கள் வந்த போதிலும் உற்பத்தி எளிமை, குறைந்த விலை மற்றும் பொறியியல் நேர்த்தி காரணமாக இந்த 100 ஆண்டு கால பாரம்பரிய வடிவம் இன்றளவும் மாறாமல் தொடர்ந்து வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

