MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • கர்ப்பம் கலைந்துவிட்டதால் மன உளைச்சல்... நடக்கவே கூடாதுனு கண்டிஷன் போட்ட கணவர் - மனம்திறந்த நடிகை நமீதா

கர்ப்பம் கலைந்துவிட்டதால் மன உளைச்சல்... நடக்கவே கூடாதுனு கண்டிஷன் போட்ட கணவர் - மனம்திறந்த நடிகை நமீதா

நடிகை நமீதா தான் முதன் முறை கர்ப்பமானபோது நான்கே மாதங்களில் கர்ப்பம் கலைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jun 12 2024, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Namitha Husband

Namitha Husband

கோலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நமீதா. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கவர்ச்சியாக நடித்து பேமஸ் ஆன நமீதா, ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு குறைந்தது. இதனால் சின்னத்திரை பக்கம் சென்ற நமீதா, அதில் நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். அதுமட்டுமின்றி அரசியலிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தார் நமீதா.

24
Namitha Pregnant

Namitha Pregnant

இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட நமீதா, அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு தன்னுடைய காதலனான நடிகர் வீராவை கரம்பிடித்தார். திருமணமாகி நான்கு ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த நடிகை நமீதாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை வளர்ப்பதில் தற்போது பிசியாக உள்ள நமீதா, அண்மையில் அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக வதந்தி பரவியது.

இதையும் படியுங்கள்... அன்று ஹோட்டல் வேலை, தண்ணீர் கேன் விற்ற மாணவன்! இன்று பல கோடி சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோ! யார் தெரியுமா?

34
Namitha Twin Babies

Namitha Twin Babies

பின்னர் அது துளியும் உண்மையில்லை என விளக்கம் அளித்த நமீதா, தன் கணவருடன் சேர்ந்து ஜோடியாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தன்னுடைய கர்ப்பகாலம் பற்றியும், அப்போது தான் சந்தித்த கஷ்டங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதன்படி, சூரத்தில் பெற்றோர் வீட்டில் இருந்தபோது தான் கர்ப்பமாக இருப்பது நமீதாவுக்கு தெரியவந்ததாம். உடனே அவரது கணவர் வீராவும் இங்கிருந்து கிளம்பி சூரத் சென்றிருக்கிறார்.

44
Namitha opens up about miscarriage

Namitha opens up about miscarriage

மூன்று மாதத்தில் இரட்டை குழந்தைகள் என்பதை மருத்துவர்கள் சொன்னார்களாம். அதுமட்டுமின்றி இரட்டைக் குழந்தைகள் என்பதால் உடல் எடை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் முழு நேரமும் ரெஸ்டில் தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்களாம். அதனால் நடக்கவே கூடாதுனு அவரது கணவர் வீராவும் கண்டிஷன் போட்டுவிட்டாராம். இப்படி கண்டிஷன் போடுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், திருமணமான நான்கே மாதத்தில் நமீதா முதன்முறை கர்ப்பமானாராம். ஆனால் அந்த கர்ப்பம் நான்கு மாதத்தில் கலைந்துவிட்டதாம். அந்த சமயத்தில் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் பின்னர் தான் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் நமீதா கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... திரிஷா, நயன்தாராலாம் லிஸ்ட்லயே இல்ல... இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள் பட்டியல் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
விமானத்தைப்போலவே ரயிலிலும் வந்த புதிய விதி..! இனி கூடுதல் லக்கேஜ்ஜை எடுத்து செல்ல கட்டணம்..! எந்த வகுப்புக்கு எவ்வளவு தெரியுமா?
Recommended image2
மூன்றெழுத்து மந்திரத்திற்காக எச்சில் இலையை எடுத்த புஸ்ஸி! அடிமட்ட தொண்டனாய் மாறிய பொதுச்செயலாளர்!
Recommended image3
20 வயசுலேயே வயசான மாதிரி தெரிறீங்களா? அப்போ இதுதான் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved