- Home
- Cinema
- கருத்து
- ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்; விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா முதல் படத்திலேயே சாதித்தாரா? சோதித்தாரா?
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்; விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா முதல் படத்திலேயே சாதித்தாரா? சோதித்தாரா?
விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமான ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Oho Enthan Baby Review
தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதையடுத்து ராட்சசன், முண்டாசுப்பட்டி, எஃப்.ஐ.ஆர் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஷ்ணு விஷால், தற்போது தன்னுடைய தம்பி ருத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கிறார். அதன்படி விஷ்ணு விஷாலின் விவி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஓஹோ எந்தன் பேபி என்கிற ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார் ருத்ரா. இப்படத்தை கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார்.
ஹீரோவான விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா
ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் ருத்ராவுக்கு ஜோடியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஓஹோ எந்தன் பேபி ட்விட்டர் விமர்சனம்
இந்த பேபி யூத்துக்கு ரொம்ப பிடிக்கும், ஓஹோ வென கொண்டாடுவார்கள். ஹீரோ ருத்ரா முதல் படத்தில் ஜெயித்து இருக்கிறார். ஹீரோயின்கள், இசை, ஒளிப்பதிவு அருமை. அண்ணன் விஷ்ணு விஷாலுக்கு கிடைக்காதது, தம்பி ருத்ராவுக்கு முதல் படத்தில் அதிகம் கிடைத்து இருக்குது, அது முத்தக் காட்சிகள். இயக்குனர் மிஷ்கின் வரும் காட்சிகள் மாஸ் என பதிவிட்டுள்ளார்.
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்
காலமும் தூரமும் எவ்வாறு எல்லாவற்றையும் குணப்படுத்தும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் இருந்தபோதிலும் ஒரு உறவில் மரியாதை மற்றும் அக்கறையுடன் இருப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசும் ஒரு வேடிக்கையான காதல் படம் தான் இந்த ஓஹோ எந்தன் பேபி. மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் ஒரு தீவிரமான தொனியில் சொல்லியிருக்கலாம் என்றாலும், இயக்குனர் கிருஷ்ணகுமார் தனது முதல் படத்தை 'தீவிரமான' மோதல்களைப் பற்றிய ஒரு லேசான காதல் படமாக கையாண்டுள்ளார்.
நடிகர் ருத்ரா சிறந்த அறிமுகம், அவர் தனது நடிப்பின் மூலம் கவர்கிறார். நாயகி மிதிலா பால்கரின் கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கிறது, டாக்ஸிக் குடும்ப பின்னணி கொண்ட ஒரு பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். முதல் பாதியில் தல-தளபதி ரெபரன்ஸ் உடன் காதல் மற்றும் நகைச்சுவையோடு படம் நகர்கிறது, இரண்டாம் பாதி சீரியஸாக நகர்ந்தாலும், ஒரு நல்ல முடிவுடன் பல செய்திகளை கடத்துகிறது. விஷ்ணு விஷால், மிஷ்கின் அவர்களின் நிஜ வாழ்க்கை குறிப்புகளுடன் வரும் சுவாரஸ்யமான கேமியோ தோற்றங்கள் அருமை என குறிப்பிட்டுள்ளார்.
ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி இருக்கு?
ஓஹோ எந்தன் பேபி இந்த சீசனின் கிளியர் வின்னர். மிகவும் ஃபன்னான எமோஷனல் படம் இது. தன் தம்பி ருத்ராவுக்காக சிறப்பான அறிமுகப்படத்தை கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால். ருத்ரா சிறப்பாக நடித்துள்ளார். எமோஷனல் காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இன்றைய தலைமுறை யூத்களை பிரதீபலிக்கும் விதமாக ஒரு காதல் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் கிருஷ்ண குமார். ஒரு இடத்தில் கூட டல் அடிக்கவில்லை. மிதிலா பால்கர் யதார்த்தமாக நடித்துள்ளார். மிஷ்கினின் கேரக்டர் படத்தோடு ஒன்றி இருக்கிறது. கருணாகரனின் காமெடியும் அருமை. புரடொக்ஷன் வேல்யூ வேறலெவலில் உள்ளது என பாராட்டி உள்ளார்.