MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • கூலி விமர்சனம்... ரஜினி - லோகேஷ் கூட்டணி மாஸ் காட்டியதா? பல்பு வாங்கியதா?

கூலி விமர்சனம்... ரஜினி - லோகேஷ் கூட்டணி மாஸ் காட்டியதா? பல்பு வாங்கியதா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Ganesh A
Published : Aug 14 2025, 08:03 AM IST| Updated : Aug 14 2025, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Coolie Movie Twitter Review
Image Credit : instagram

Coolie Movie Twitter Review

நடிகர் ரஜினிகாந்தின் 171வது படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இதற்கு முன்னர் விஜய், கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய லோகேஷ் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு வானுயர இருந்தது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொண்டிருந்தார்.

28
கூலி ரிலீஸ்
Image Credit : instagram

கூலி ரிலீஸ்

கூலி பான் இந்தியா படமாக உருவாகி உள்ளதால், இதில் நாகர்ஜுனா, அமீர்கான், சேபின் ஷாஹிர் போன்ற பான் இந்தியா நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார். கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. வெளிநாடுகளில் தான் இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. அங்கு படம் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

Related Articles

Related image1
கூலி படம் பார்த்த லதா ரஜினிகாந்தின் முதல் விமர்சனம்; அடடே படத்தை பார்த்து இப்படி சொல்லிட்டாரே!
Related image2
கூலி படம் எப்படி இருக்கு! நம்ம துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் கொடுத்துட்டாரு!
38
கூலி ட்விட்டர் விமர்சனம்
Image Credit : instagram

கூலி ட்விட்டர் விமர்சனம்

கூலி படத்தை அமெரிக்காவில் பார்த்த பிரபல விமர்சகர் ஒருவர் போட்டுள்ள பதிவில், கூலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கவர்கிறார். பிளாஷ்பேக் டீ ஏஜிங் காட்சிகள் மாஸாக உள்ளது. சோபின் ஷாஹிருக்கு முழுநீள வேடம். நாகர்ஜுனா ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார். ஆனால் அவரது கதாபாத்திர வடிவமைப்பு சரியில்லை. ஸ்ருதி மற்றும் ரச்சிதா நன்கு நடித்துள்ளார்கள். அனிருத் சிறப்பாக இசையமைத்துள்ளார். வீக்கான கண்டெண்ட் மற்றும் மந்தமான திரைக்கதை. ஆக்‌ஷன் காட்சிகள் அருமை. மொத்தத்தில் படம் ஆவரேஜ் தான். கூலி - போலி என பதிவிட்டுள்ளார்.

#Coolie - Charismatic Superstar, Flashback Deaging seq Mass. Shoubin full fledge role. Stylish Nagarjuna, but Poor characterization. Shruthi & Rachita gud Perf. Anirudh superb work. Weak Content & Clumsy screenplay; Its all over the places. Gud Actions. Wannabe Cameos. AVERAGE!

— Christopher Kanagaraj (@Chrissuccess) August 14, 2025

#Coolie - Poli!

கூலி - போலி!

Keep your Expectations LOW!

— Christopher Kanagaraj (@Chrissuccess) August 14, 2025

48
கூலி எக்ஸ் தள விமர்சனம்
Image Credit : instagram

கூலி எக்ஸ் தள விமர்சனம்

தமிழ் சினிமாவின் புது இண்டஸ்ட்ரி ஹிட் கூலி. அருமையான ரைட்டிங், மிரள வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், வெறித்தனமான பிளாஷ்பேக். லியோவில் எதெல்லாம் ஒர்க் அவுட் ஆகவில்லையோ அதெல்லாம் கூலியில் ஒர்க் ஆகி இருக்கிறது. பிளாஷ்பேக் அருமை. இரண்டாம் பாதி வெறித்தனமாக உள்ளது. பிளாக்பஸ்டர் என குறிப்பிட்டு இருக்கிறார்.

#Coolie - New industry Hit for Tamil Cinema. 

Crazy writing , Crazy taking , Mad action sequences , Verithanam Flashback episodes.

Whatever’s didn’t workout for Leo clicked for #Coolie. 

Great Flashback 
Terrific Second half. 

Unanimous blockbuster 🔥🔥🎇#CoolieFDFS - 4/5

— Peter Reviews (@urstruelypeter) August 14, 2025

58
கூலி எப்படி இருக்கு?
Image Credit : Youtube print shot/Gemini tv

கூலி எப்படி இருக்கு?

கூலி படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், கூலி படத்தின் முதல் பாதி ஆவரேஜ் தான். ஆனால் இரண்டாம் பாதி கேமியோக்கள் உடன் அருமையாக உள்ளது. ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சோபின், ஸ்ருதி ஆகியோரின் நடிப்பு நன்றாக உள்ளது. இந்த படத்தின் உயிர்நாடியாக அனிருத் இருக்கிறார் என பதிவிட்டு இப்படத்திற்கு 5க்கு 2.75 மார்க் கொடுத்துள்ளார்.

#CoolieReview Avg First Half 👍🏼 & Good Second half with Cameos 🙌🏻 Rajni, Nag, Soubhin & Shruti 👏🏻 Anirudh is soûl for the film 🍻
#Coolie My Rating: 2.75/5 ⭐️⭐️⭐️ pic.twitter.com/U2ZRj99m4S

— Simon 🔥 (@rk_dublin) August 14, 2025

68
கூலி விமர்சனம்
Image Credit : Youtube print shot/Gemini tv

கூலி விமர்சனம்

கூலி முதல் பாதி விறுசிறுவென, ஸ்டைலிஷ் ஆக உள்ளது. பாடல்கள் அனைத்தும் நன்கு ஒர்க் ஆகி இருக்கின்றன. ஹாஸ்டல் சண்டைக் காட்சி சிறப்பாகவும் ஃபன் நிறைந்ததாகவும் உள்ளது. இரண்டாம் பாதி ஸ்லோவாக ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்தில் வேகமெடுத்து இறுதிவரை மான்ஸ்டர் போல் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்தப்படத்தை காப்பாற்றியதே அதன் இரண்டாம் பாதி தான். தாஹா மற்றும் கூலி கேங் வெறித்தனமாக உள்ளது. கூலி ஒரு மாஸ் மான்ஸ்டர் என பதிவிட்டுள்ளார்.

#Coolie It’s a wrap!

Second half starts slow and peaks at mid point.. And then no stopping this monster.

Best parts saved for the second half of the second half 🔥🔥🔥🔥🔥🔥🔥

Dahaa and the Coolie gang 🥵🥵🥵 

Thanks Lokesh and team. Mass monster!#Thalaivar…

— Harish (@ghghomerun) August 14, 2025

78
கூலி படத்தின் ரிவ்யூ
Image Credit : Youtube print shot/Gemini tv

கூலி படத்தின் ரிவ்யூ

கூலி படத்தின் முதல் பாதி ஆவரேஜாகவும், இரண்டாம் பாதி அபவ் ஆவரேஜ் ஆகவும் உள்ளது. உங்களுக்கு ரஜினியை பிடிக்கும் என்றால் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும். காமன் ஆடியன்ஸுக்கு இது ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக இருக்கும். இது அடல்ட்டுக்கான படம் தயவு செய்து குழந்தைகளை அழைத்து வராதீர்கள். ஏனெனில் படத்தில் எக்கச்சக்கமான வயலன்ஸ் நிறைந்திருக்கிறது என வார்னிங் கொடுத்துள்ளார்.

Average first half
Following by above avg second half
3/5 👍

If u like #Rajini u will love it, for common audiences it's once watchable flick, strictly for adults don't bring you children because movie is filled with much violence #Coolie#CoolieReview#CoolieFromAug14pic.twitter.com/PZqx8G1GNA

— 🗽God x Devil 😈 (@cinemaismyworld) August 14, 2025

88
கூலி FDFS விமர்சனம்
Image Credit : X/@sunpictures

கூலி FDFS விமர்சனம்

துபாயில் கூலி FDFS பார்த்த ரசிகர் ஒருவர் போட்டுள்ள பதிவில், தலைவர் பட்டைய கிளப்பிட்டாரு, 50வது வருசத்துக்கு இப்படி ஒரு படம் கொடுத்த லோகேஷ்க்கு நன்றி, அரங்கம் அதிருது சூப்பர் ஸ்டார் மற்றும் அனைத்து நடிகர்களும் செமையா நடிச்சிருக்காங்க, படம் பிளாக்பஸ்டர், எட்ரா கொக்கிய என அனல்பறக்க பதிவிட்டுள்ளார்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved