Idli Kadai Review : தனுஷின் இட்லி கடை சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
தனுஷ் இயக்கத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் இட்லி கடை திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Dhanush Idli Kadai Twitter Review
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரனும், ஒண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பின்னர், தனுஷும் நித்யா மேனனும் இணைந்துள்ள படம் இதுவாகும். மேலும் இதில் சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, இளவரசு, ராஜ்கிரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இட்லி கடை திரைப்படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிவனேசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்திற்கு கிரண் கெளஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளராக பிரசன்னா பணியாற்றி உள்ளார். இப்படம் ஆயுத பூஜை விருந்தாக இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இட்லி கடை ட்விட்டர் விமர்சனம்
இட்லி கடை படத்தின் முதல் பாதி எமோஷனல் காட்சிகளாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் நிரம்பி உள்ளது. அருண் விஜய் - தனுஷ் இடையேயான மோதல் உடன் இண்டர்வெல் காட்சி முடிகிறது. படம் நன்றாக கனெக்ட் ஆனது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கழுகு காட்சி புல்லரிக்க வைத்தது. முழு படமும் முருகன் இட்லி கடையை சுற்றியே நகர்கிறது. தனுஷ் இயக்குனராகவும், நடிகராகவும் ஜெயித்திருக்கிறார். கிளைமாக்ஸில் தனுஷ் கொடுக்கும் இரண்டு நிமிட ஸ்பீச், அவரின் ரியல் வாழ்க்கையை பிரதீபலிப்பது போல் இருந்தது. கிராமத்து வாழ்க்கையை பற்றி படம் பேசுகிறது. சண்டை இல்லாமல், கலாச்சாரத்தோடு ஒன்றிய படமாக இது உள்ளது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
#IdliKadai 4.25/5 🌟 Connected So Well With Me!
Eagle Scene in 2nd Half = Goosebumps 🔥 Full Film Revolves Around Murugan’s Idli Kadai 🍽️#Dhanush Wins As Both Director & Actor 👏 Preclimax His 2-Minute Speech Felt Straight From Real Life ( I'm Doing My work w/o distrubing… pic.twitter.com/EYPQduN0mZ— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) October 1, 2025
இட்லி கடை விமர்சனம்
இட்லி கடை முதல் பாதி அருமை. தனுஷ் மற்றும் அருண் விஜய்யின் கதாபாத்திரங்கள் ஃபாரின் பின்னணியில் இருந்து தொடங்குகிறது. நித்யா மேனன் கேரக்டர் ரசிக்கும்படியும், கலகலப்பானதாகவும் உள்ளது. மீண்டும் ஒருமுறை தனுஷ் தன்னுடைய நடிப்பால் உச்சம் தொட்டுள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ஜொலித்துள்ளார். ஜிவி பிரகாஷின் மாண்டேஜ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை. இண்டர்வெல் காட்சி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஒரு பக்காவான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உள்ளது. குறிப்பாக சி செண்டர் ஆடியன்ஸுக்கு இப்படம் நன்றாக கனெக்ட் ஆகும். சிம்பிளான கதை மற்றும் திரைக்கதை. ஆனால் இயக்குனர் தனுஷ் அதை எமோஷன், ஃபன், லவ், ஆக்ஷன் உடன் பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.
#IdliKadai: A PERFECT FAMILY ENTERTAINER which will work big especially for Rural Audience🎯💯
A simple story & screenplay, but Director #Dhanush Delivered Deliciously with perfect mix of Emotion + Fun + Love + Action👌 pic.twitter.com/NQhu8lbXMT— AmuthaBharathi (@CinemaWithAB) October 1, 2025
இட்லி கடை படம் எப்படி இருக்கு?
இட்லி கடை அருமையான ஃபீல் குட் படம். தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன் என அனைவரும் நடிப்பில் ஜொலிக்கின்றனர். ராஜ்கிரணின் கதாபாத்திரம் அருமை. பிஜிஎம் நன்றாக இருந்தது. நல்ல ரைட்டிங் உடன் கூடிய சிம்பிளான படம். கிராமத்து வாழ்க்கையை நினைவுக்கு கொண்டு வரும். சில இடங்களில் எமோஷனலாகவும் உள்ளது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும் சில காட்சிகள் அருமையாக எழுதப்பட்டு உள்ளன. ஒர்த் ஆன படம் என குறிப்பிட்டுள்ளார்.
#IdliKadai Review
Beautiful Feel-Good Drama👏#Dhanush shines along with #ArunVijay, #NithyaMenen & others 👍
Supporting Cast like #RajKiran were too good✌️
Good BGMs💯
Simple but effective writing 👌
Rating: ⭐️⭐️⭐️💫/5#IdliKadaiReview#IdliKadaiFDFS#ShaliniPandeypic.twitter.com/BQxWxlFEiv— Swayam Kumar Das (@KumarSwayam3) October 1, 2025