MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • கம்பேக் கொடுத்தாரா பரத்? காளிதாஸ் 2 விமர்சனம் இதோ

கம்பேக் கொடுத்தாரா பரத்? காளிதாஸ் 2 விமர்சனம் இதோ

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத், பிரகாஷ் ராஜ், கிஷோர், அபர்ணதி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருக்கும் காளிதாஸ் 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 03 2026, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kalidas 2 Movie Review
Image Credit : X

Kalidas 2 Movie Review

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நாயகனாக நடித்துள்ள படம் காளிதாஸ் 2. இப்படத்தில் பரத் உடன் அபர்ணதி, கிஷோர், பிரகாஷ் ராஜ், சங்கீதா, பவானி ஸ்ரீ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்து உள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அரவிந்தன் ஆனந்த் திரைக்கதை எழுதி உள்ள இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் தயாரித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

24
காளிதாஸ் 2 கதைக்களம்
Image Credit : X

காளிதாஸ் 2 கதைக்களம்

சென்னையின் புறநாகரில் ஒரு மாபெரும் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கு வசிக்கும் அபர்ணதி - அனந்த் நாக் தம்பதியின் பெண் குழந்தை காணாமல் போகிறது. அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் தீவீரமாக ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பரத், பவானி ஸ்ரீ இருவருக்கும் அதே குடியிருப்பில் வசிக்கும் இளம் வழக்கறிஞர் அஜய் கார்த்தி மீது சந்தேகம் எழுகிறது. விசாரணை தீவிரமாகும் நிலையில், குழந்தையின் சடலம் கிடைக்கிறது. குழந்தையைத் தொடர்ந்து சில தொடர் கொலைகள் நடக்கின்றன. அதன் உண்மையான குற்றவாளி யார் என்பதுதான் காளிதாஸ் 2 படத்தின் கதை.

Related Articles

Related image1
சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ சூப்பரா?... சுமாரா? விமர்சனம் இதோ
Related image2
Happy Raj Review : GV-யின் காமெடி ட்ரீட் டேஸ்டா? வேஸ்டா? ஹாப்பி ராஜ் விமர்சனம்
34
காளிதாஸ் 2 விமர்சனம்
Image Credit : X

காளிதாஸ் 2 விமர்சனம்

சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையை எழுதி பார்வையாளர்களை அடுத்து என்ன என்று பரபரப்புடன் கேட்கவைத்து திரையில் சாகசம் செய்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். காளிதாஸாக வரும் பரத் நடிப்பில் அனுபவ முதிர்ச்சி. காவல்துறைக்கான துணிச்சலும் வேகமும் சில நேரங்களில் நிதானமும் காட்டி நடிப்பில் சிறப்பு செய்திருக்கிறார். புதுமுக நடிகர் அஜய் கார்த்தி கண்களில் அதிகம் பேசுகிறார். வசனங்கள் அதிகம் பேசுவது மாதிரி காட்சிகளை அமைக்கவில்லை. எப்போதும் அவர் முறைப்பது மாதிரியும் சந்தேகப்படுவதுமாதிரியும் அவரது கேரக்டரை சித்திரித்திருக்கிறார்கள். அவர் இயல்பாகவே இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும் அவர்மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கும். அவரது அறிமுகத்திற்கு இது சிறந்த படமாக இருக்கிறது.

44
காளிதாஸ் 2 ரிவ்யூ
Image Credit : X

காளிதாஸ் 2 ரிவ்யூ

இளம் ஐபிஎஸ் அதிகாரியாக பவானி ஸ்ரீ கவனம் ஈர்க்கிறார். களப்பணி தெரியாமல் உயர் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறார். அதேபோல நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்துள்ள பூவே உனக்காக சங்கீதா கதாபாத்திரம் படத்தின் திருப்பமுனை. அபர்ணதி, அனந்த் நாக், பிரகாஷ்ராஜ், கிஷோர் இவர்களின் கதாபாத்திரங்கள் பரபரப்பான திரைக்கதையின் நம்பிக்கையா இருக்கின்றன. சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை படங்களுக்கான ஒளிப்பதிவில் சில இடங்களை அடிக்கடி காட்டவேண்டியிருக்கும். அதை சலிப்புத் தோன்றாமல் நிறைவாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா.

அஜய் கார்த்தி தோன்றும் இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான சிம்பாலிக் இசையை தந்து கிலி ஏற்படுத்துகிறார் சாம் சி.எஸ்.

அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கமுடியாத சம்பவங்களை கோர்த்து என ஒரு க்ரிப்பான க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ சூப்பரா?... சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image2
Kaattaan Review : விஜய் சேதுபதியின் காட்டான் வெப் சீரிஸ் மிரட்டலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
Recommended image3
Happy Raj Review : GV-யின் காமெடி ட்ரீட் டேஸ்டா? வேஸ்டா? ஹாப்பி ராஜ் விமர்சனம்
Related Stories
Recommended image1
சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ சூப்பரா?... சுமாரா? விமர்சனம் இதோ
Recommended image2
Happy Raj Review : GV-யின் காமெடி ட்ரீட் டேஸ்டா? வேஸ்டா? ஹாப்பி ராஜ் விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved