நல்ல வேளை தியேட்டர்ல ரிலீஸ் ஆகல... அருள்நிதியின் ‘ராம்போ’ விமர்சனம் இதோ
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி, தன்யா ரவிச்சந்திரன், பிக் பாஸ் ஆயிஷா ஆகியோர் நடிப்பில் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ள ராம்போ படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Rambo Movie Twitter Review
அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ராம்போ. இப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் கொம்பன், மருது, விருமன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம், விருமன் போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். தொடர்ந்து கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டும் இயக்கி வந்த முத்தையா, முதன்முறையாக நகர வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ராம்போ. இப்படம் இன்று நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.
ராம்போ படத்தின் கதை என்ன?
இளம் குத்துச் சண்டை வீரரான அருள்நிதி, ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறான். அப்போது அவன் வாழ்க்கையில் பல அதிரடி சம்பவங்கள் நடக்கிறது. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது தான் ராம்போ படத்தின் கதைச் சுருக்கம். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் ஆயிஷா, நடிகர்கள் விடிவி கணேஷ், ஹரீஷ் பெராடி, மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ், நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ராம்போ விமர்சனம்
ராம்போ படம் பார்த்த நெட்டிசன் ஒருவர், நல்ல வேளை இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என பதிவிட்டுள்ளார். அருள்நிதி படம் நம்பி மினிமம் கேரண்டினு போனா வச்சு செஞ்சுடாணுங்க என புலம்பி இருக்கிறார். படத்தில் காமெடி எல்லாம் தெரிஞ்சா ஓடுற அளவுக்கு தான் இருக்கு என்றும், ரைட்டிங் சொதப்பல் எனவும், சண்டை காட்சிகள் மட்டும் ஓகே மத்தபடி எல்லாம் ஒன்னும் பெருசா இல்ல என ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
🎬 #Rambo (2025) – AVPL 🙏
📺 OTT: Sun NXT
⏱️ Duration: 1 hr 49 mins
நல்ல வேல தியேட்டர்ல ரிலீஸ் ஆகல 😭😭
அருள்நிதி படம் நம்பி மினிமம் கேரண்டி னு போன வச்சு செஞ்சுடாணுவோ🤧
காமெடி எல்லாம் தெரிஞ்சா ஓடுற அளவுக்கு தான் இருக்கு 😢
✍️ ரைட்டிங் சொதப்பல் 👎
சண்டை காட்சிகள் ஓகே… pic.twitter.com/RXVVgRlpbN— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) October 10, 2025
ராம்போ ட்விட்டர் விமர்சனம்
படம் பார்த்த மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், ராம்போ ரெம்ப டீசண்ட் ஆன பார்க்கக்கூடிய படம் தான். கண்டிப்பா ஒருமுறை பார்க்கலாம். பெருசா கதையில் ட்விஸ்ட் எல்லாம் இல்லை. ஆனால் படம் ஏமாற்றம் அளிக்காது பார்க்கலாம் என தன்னுடைய விமர்சனத்தை குறிப்பிட்டு இருக்கிறார்.
#Rambo decent watchable movie kandipa one time pakkalam perusa story twist lam illa but movie disappointment pannathu pakkalam pic.twitter.com/RI3emecak4
— Joe Selva (@joe_selva1) October 10, 2025
ராம்போ எப்படி இருக்கு?
ராம்போ படம் ரொம்ப போர் என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். ஒருவரோ இந்த படம் பார்த்தால் தூக்கம் தான் வருகிறது என மீம் போட்டு கலாய்த்து உள்ளார். ஆக மொத்தம் ராம்போ படம் சுமாராக இருக்கிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
#Rambo 😐 bore 😴 pic.twitter.com/Ts0ztyldWO
— SRS CA TV (@srs_ca_tv) October 10, 2025
#Rambo 😭 pic.twitter.com/uuzjhP88cn
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 10, 2025