- Home
- Cinema
- கருத்து
- Bomb Review : அர்ஜுன் தாஸ் நடித்த ‘பாம்’... வெடித்ததா? புஸ்ஸுனு போனதா? விமர்சனம் இதோ
Bomb Review : அர்ஜுன் தாஸ் நடித்த ‘பாம்’... வெடித்ததா? புஸ்ஸுனு போனதா? விமர்சனம் இதோ
Arjun Das Bomb : விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா நடிப்பில் வெளியாகி உள்ள பாம் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bomb Movie Twitter Review
அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் பாம். இப்படத்தில் ஹீரோயினாக ஷிவாத்மிகா நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், அபிராமி, நாசர், சிங்கம் புலி, பால சரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் தான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் சுதா சுகுமார் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாம் படத்தின் விமர்சனம்
இரண்டு கிராமம், ஜாதி பிரச்னை, கடவுள் நம்பிக்கை பின்னணியில் மாறுபட்ட முயற்சி. காளிவெங்கட், அர்ஜூன் தாஸ் கேரக்டர், நடிப்பு, இடைவேளை, கிளைமாக்ஸ் பிளஸ். கடவுள் விஷயத்தில் சண்டை போடும் இரண்டு தரப்பு மக்களின் கதை, அதை அழுத்தமாக, புதுமாதிரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த பாம் சமூக நீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது. காளி வெங்கட் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலக்கல். பிணமாக உயிர்ப்புடன் நடித்து இருக்கிறார் என பதிவிட்டுள்ளார்
பாம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்
"சிம்ப்ளி பிளாஸ்ட்", ஒரு கிராமத்தில் ஒரு கடவுளுக்காக இரண்டு குழுவை சேர்ந்த மக்கள் போட்டியிடும் போட்டியைப் பற்றிய ஒரு அருமையான கதை. நகைச்சுவை, எமோஷன் கலந்த ஒரு படம், அருமையான ரைட்டிங், கண்டிப்பா பாருங்க பேமிலி ஆடியன்ஸ் மற்றும் வில்லேஜ் ஆடியன்ஸுக்கு சரியான ஆ இருக்கும். இமான் இசையமைப்பாளர் படத்தின் மிகப்பெரிய பிளஸ், க்ளைமாக்ஸ் எல்லாம் பின்னிட்டாரு என குறிப்பிட்டுள்ளார்.
பாம் படத்தின் எக்ஸ் தள விமர்சனம்
மனித நம்பிக்கையையும் மத நம்பிக்கையையும் இணைத்து, இரண்டிற்கும் பின்னால் உள்ள பகுத்தறிவை கேள்விக்குள்ளாக்கும் ஒரு எளிய, நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட கதை. நகைச்சுவை, கதைசொல்லலுக்கு நன்றாக உதவுகிறது. விஷயங்களை புரிந்துகொள்ள நேரம் எடுக்கும், ஆனால் படம் சொல்ல வரும் மெசேஜ் அழகாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை நாம் பார்த்ததைப் போலல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். இந்த ஆண்டு காளி வெங்கட்டிற்கு மற்றொரு மறக்கமுடியாத கதாபாத்திரம் இது என பதிவிட்டுள்ளார்.