MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Anbil Avan Review : அசோக் செல்வனின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? அன்பில் அவன் விமர்சனம்

Anbil Avan Review : அசோக் செல்வனின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? அன்பில் அவன் விமர்சனம்

Anbil Avan Movie Review : ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் தியேட்டரில் ரிலீஸ் ஆகி உள்ள அன்பில் அவன் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Oct 02 2026, 07:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அன்பில் அவன் படத்தின் கதை
Image Credit : X

அன்பில் அவன் படத்தின் கதை

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு தொடங்கி, எதிர்பாராத வகையில் ஆக்‌ஷன் பாதைக்குள் பயணிக்கும் கதையாக உருவாகியுள்ளது.

சூர்யாவும் இயலும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். குடும்பத்தினரின் ஆதரவு இல்லாத நிலையில், இருவரும் தனியாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். சொந்தமாக ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில், மலைப்பகுதியில் அழகான வீட்டை வாங்கி, அதனை தங்கும் விடுதியாக மாற்றி நடத்த முடிவு செய்கிறார்கள்.

ஆனால், அந்த வீடு அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ., அந்த வீட்டை எப்படியாவது தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக சூர்யா மற்றும் இயலை பல்வேறு வழிகளில் தொந்தரவு செய்யத் தொடங்குகிறார்.

எம்.எல்.ஏ.வின் பின்னணியில் இயங்கும் நபர்கள், போலீஸ் அதிகாரி, வழக்கறிஞர் என ஒவ்வொருவராக இந்த இளம் தம்பதியின் வாழ்க்கைக்குள் நுழைய, பிரச்சனை படிப்படியாக தீவிரமடைகிறது. ஒரு கட்டத்தில், தங்களுடைய வீட்டையும் உயிரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு சூர்யாவும் இயலும் தள்ளப்படுகிறார்கள். இந்த போராட்டத்தின் முடிவு என்ன என்பதுதான் மீதிக்கதை.

Baththa Review : விஜய் சேதுபதி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? பத்தா விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அன்பில் அவன் விமர்சனம்
Image Credit : X

அன்பில் அவன் விமர்சனம்

அசோக் செல்வன் நடிக்கும் படம் என்றாலே மென்மையான காதல், இயல்பான கதாபாத்திரங்கள் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவற்றை எதிர்பார்ப்பது இயல்பு. ‘அன்பில் அவன்’ என்ற தலைப்பும் கூட ஒரு காதல் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பையே ஏற்படுத்துகிறது.

ஆனால், படம் தொடங்கிய சில நேரத்திலேயே அந்த எதிர்பார்ப்பை மாற்றுகிறது திரைக்கதை. ஆரம்பத்தில் சூர்யா - இயல் ஜோடியின் இயல்பான வாழ்க்கையை காட்டும் காட்சிகள், படத்தின் போக்கை ஒரு அழகான காதல் கதையாகவே நினைக்க வைக்கின்றன.

மலைப்பகுதிக்கு இருவரும் பயணிக்கும் தருணத்திலிருந்து கதை வேறு பாதைக்குச் செல்கிறது. அதன்பிறகு தொடர்ந்து நிகழும் சம்பவங்கள், படம் எந்த திசையில் செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பை மாற்றுகின்றன. குறிப்பாக எம்.எல்.ஏ., போலீஸ், வழக்கறிஞர் மற்றும் ரவுடிகள் என பல்வேறு கதாபாத்திரங்கள் கதைக்குள் நுழைந்ததும் பதற்றம் அதிகரிக்கிறது.

35
அன்பில் அவன் ரிவ்யூ
Image Credit : X

அன்பில் அவன் ரிவ்யூ

இதுவரை காதல் மற்றும் மென்மையான கதாபாத்திரங்களில் அதிகம் பார்க்கப்பட்ட அசோக் செல்வன், இந்தப் படத்தில் ஆக்‌ஷன் களத்திலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக செயல்பட முயற்சித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஆக்‌ஷன் கதைக்கு ஏற்ப உடலமைப்பு மற்றும் கதாபாத்திரத்திற்கான உடல் மொழியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அவரது கேரக்டர் மேலும் வலுவாக இருந்திருக்கும்.

ப்ரீத்தி முகுந்தன், காதல் மனைவியாக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் அசோக் செல்வனுக்கும் ப்ரீத்திக்கும் இடையே இடம்பெறும் வார்த்தைப் போர், படத்தின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக அமைகிறது.

45
அன்பில் அவன் படம் எப்படி இருக்கு?
Image Credit : X

அன்பில் அவன் படம் எப்படி இருக்கு?

எம்.எல்.ஏ. ராஜநாயகமாக வரும் கதிர் பாலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவசியாக நடித்துள்ள மஹா டெல்லி கணேஷ் மற்றும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வரும் சாபுமோன் அப்துசமத் ஆகியோர் தங்களது வில்லத்தனமான அணுகுமுறையால் பல காட்சிகளுக்கு பதற்றத்தை உருவாக்குகிறார்கள். இவர்களைச் சுற்றி நகரும் சம்பவங்களே படத்தின் இரண்டாம் பாதையை வேகமாக நகர்த்துகின்றன.

கோவிந்த் வசந்தாவின் இசை படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. பாடல்கள் கேட்கும்போது மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு குறிப்பாக மலைப்பகுதி காட்சிகளில் கவனம் ஈர்க்கிறது. இயற்கை அழகையும், கதையின் பதற்றமான சூழலையும் காட்சிகளின் வழியாக சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

55
அன்பில் அவன் படத்தின் பிளஸ், மைனஸ் என்ன?
Image Credit : X

அன்பில் அவன் படத்தின் பிளஸ், மைனஸ் என்ன?

அசோக் செல்வனை வழக்கமான காதல் கதாபாத்திரத்திலிருந்து விலக்கி, ஆக்‌ஷன் களத்தில் நிறுத்தியிருப்பது இயக்குநர் ஆர். கார்த்திகேயனின் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. அதற்கு ஏற்ற வகையில் அசோக் செல்வனும் தனது பங்களிப்பை செய்துள்ளார். அதே நேரத்தில், படத்தில் இடம்பெறும் வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவற்றின் சட்டரீதியான முடிவை இன்னும் அழுத்தமாகக் காட்டியிருந்தால் கிளைமாக்ஸ் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

மொத்தத்தில் காதல் கதையாக தொடங்கி, எதிர்பாராத திருப்பங்களுடன் ஆக்‌ஷன் பாதைக்குச் செல்லும் ‘அன்பில் அவன்’, அசோக் செல்வனை வித்தியாசமான கோணத்தில் பார்க்க வைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.

Yezhu Kadal Yezhu Malai Review : ஏழு கடல் ஏழு மலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விமர்சனம்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sattamum Needhiyum 2 Review : சட்டமும் நீதியும் 2 வெப் சீரிஸ் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்
Recommended image2
Haiku Review : ஹைக்கூ காதல் கசக்குதா?... இனிக்குதா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Ranabaali Review : ஜெயிலர் 2-வை விட மிரட்டலாக உள்ளதா ரணபாலி? முழு விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Dorothy Movie First Review : டோரதி முதல் விமர்சனம் வந்தாச்சு... படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா?
Recommended image2
Lenin Pandiyan Review : சிவாஜி பேரன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? லெனின் பாண்டியன் விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved