- Home
- Politics
- தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.15,000 கிடைக்க வாய்ப்பு..! வங்கிக்கணக்கு தொடங்குங்கள்..! சீமான் அட்வைஸ்..!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு ரூ.15,000 கிடைக்க வாய்ப்பு..! வங்கிக்கணக்கு தொடங்குங்கள்..! சீமான் அட்வைஸ்..!
பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 போட்டது போல, தமிழ்நாட்டிலும் ரூ.15,000 போடக்கூட வாய்ப்புள்ளது. நம் அம்மாக்களிடம் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க சொல்லவேண்டும்

‘‘பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 போட்டது போல, தமிழ்நாட்டிலும் ரூ.15,000 போடக்கூட வாய்ப்புள்ளது’’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நம் அம்மாக்களிடம் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க சொல்லவேண்டும் - சீமான்
இதுகுறித்து பேசிய சீமான், ‘‘ஆட்சிக்கு வந்தால் 3.5 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது ஆட்சியில் அமர்த்திய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம்.
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் எத்தனை அதிகாரிகள் அடி வாங்கிவிட்டு ஓடப்போகிறார்களோ தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நாட்களில் நீங்கள் பாருங்கள் எவனாவது இந்த ஃபார்ம் என்று சொல்லி ஓடப்போகிறார்கள். எங்கள் ஆட்கள் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்கள். அப்புறம் அதுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது. கவனமாக இருங்கள். எனக்கு தெரியவில்லை. எனக்கு குழப்பமாக இருக்கிறது. காலையில் இருந்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
பிள்ளைகள் விழிப்புணர்வோடு இருந்து அவரவர் வாக்கை தக்க வைக்க பார்க்க வேண்டும். ஆனால் இதற்கு இந்திய ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு ஆட்கள்.. ஸ்டாலின் அவர்களே நீங்கள் எதிர்க்கிறேன் என்பதில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு பக்கம் இதை எதிர்த்து கொண்டு இருக்கீறீர்கள். ஆனால் உண்மையிலேயே எதிர்க்கிறீர்கள் என்றால் நீங்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும். உங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளையே நீங்கள் கூப்பிடவில்லை.
நீங்கள் சட்டசபையை கூட்டி, ஒருவேளை அங்கே எடப்பாடி பழனிசாமி எதிர்த்துப் பேசினால் அவரை நீங்கள்எதிர்த்து பேசுங்கள். இதில் எவ்வளவு பேராபத்து இருக்கிறது என்று நீங்கள் ஒரு தீர்மானத்தை போடுங்கள். தமிழ்நாடு ஒத்துழைக்காது என்ற தீர்மானத்தை நிறைவேற்றுங்கள். நீங்கள் அதை செய்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை.
அவசர அவசரமாக பிஎல்ஓ அதிகாரிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும் எனக் கூறி இருக்க வேண்டும். உங்கள் ஆட்கள் வீடியோ காலில் வந்து விளக்கம் சொல்கிறார்கள். உங்கள் மாமன்ற உறுப்பினர்கள் எல்லாம் உங்கள் வாக்கை உறுதிப்படுத்தி விட்டு போகிறார்கள். ஆனால் எங்கள் வாக்கை எல்லாம் பார்க்க நாங்கள் என்ன செய்வது? பாஜகவினர் அதிகாரிகளின் வாக்காளர்கள். எவன் எவனெல்லாம் பாஜக வாக்காளன் இல்லையோ அவனுக்கு வாக்கு இருக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 போட்டது போல, தமிழ்நாட்டிலும் ரூ.15,000 போடக்கூட வாய்ப்புள்ளது. நம் அம்மாக்களிடம் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க சொல்லவேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.