MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சௌமியா அன்புமணி, பாரிவேந்தருக்கு இத்தனை கோடி சொத்துகளா.!! வேட்பு மனுவில் வெளியான மிரள வைக்கும் தகவல்கள்

சௌமியா அன்புமணி, பாரிவேந்தருக்கு இத்தனை கோடி சொத்துகளா.!! வேட்பு மனுவில் வெளியான மிரள வைக்கும் தகவல்கள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல கோடிக்கு சொந்தக்காரர்களாக வேட்பாளர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Mar 26 2024, 11:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வேட்பாளர்களின் சொத்து விவரம் என்ன.?

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், நேற்று மட்டும் 300க்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுவில் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்களையும்,

குற்ற பின்னனி வழக்கையும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் சொத்து விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
sowmiya

sowmiya

சௌமியாவின் சொத்து எவ்வளவு.?

அந்த வகையில், பாமகவின் கோட்டையாக கருதப்படும் தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி  சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். அரசியல் களத்தில் முதல் முறையாக இறங்கவுள்ள  சௌமியாவின் சொத்துக்கணக்கு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், ரூ.48.18 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தனது கணவர் அன்புமணி ராமதாஸ் பெயரில் ரூ.6.85 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

34
parivendar

parivendar

பாரிவேந்தரின் சொத்து என்ன.?

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனது பெயரில் 59 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன்படி பாரிவேந்தர் பெயரில் 20 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் 39 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளது.

 பாரிவேந்தர் மனைவி பெயரில் 6 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும் , 27.50 கோடி அசையா சொத்துகளும் உள்ளது. மேலும் பாரிவேந்தர் பெயரில் 4080  கிராம் நகைகளும், அவரது மனைவி பெயரில் 8040 கிராம் நகைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாரிவேந்தர் மற்றும் அவரது மனைவி இருவர் பெயரிலும் எந்தவித வாகனங்களும் இல்லை என்றும் வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள சொத்து பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

44

பொன்.ராதாகிருஷ்ணனின் சொத்து என்ன.?

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனக்கு 7.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் களம் இறங்கும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது பெயரில் 64 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை தவிர்த்து தனது பெயரில் 6.99 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா.? வேட்புமனுவில் வெளியான தகவல்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
பிஜேபி
தமிழ்நாடு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved