MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • புஸ்ஸி ஆனந்த் பேச்ச கேட்டு நடந்தால் நீங்க அடிக்க வேண்டியது விஜயை தான்..! தவெகவுக்குள் தகராறு..!

புஸ்ஸி ஆனந்த் பேச்ச கேட்டு நடந்தால் நீங்க அடிக்க வேண்டியது விஜயை தான்..! தவெகவுக்குள் தகராறு..!

புஸ்ஸி ஆனந்த், நமது இயக்கத்தின் அடையாளம். நம் குடும்ப விஷயத்தை, அடுத்தவர் பஞ்சாயத்து செய்ய அனுமதிக்க வேண்டாம். புஸ்ஸி ஆனந்த், ஒரு தூணாக இருக்கிறார். நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம்’’ என சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். 

3 Min read
Thiraviya raj
Published : Oct 17 2025, 12:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறைக்கு சென்று திரும்பிய தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனும், நிர்வாகி பவுன்ராஜும் விஜய் சந்திப்புக்கு முன்பு, குடும்பத்துடன் புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்தனர். இது தவெக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அதிருப்தி, விமர்சனங்கள், வெறுப்பு உணர்வுகள்தொடக்கத்திலிருந்து தீவிரமடைந்து வந்தது. குறிப்பாக கரூர் சம்பவத்துக்குப் பிறகு உச்சத்தை அடைந்துள்ளது. இந்தப் பிரச்சினை பதவி நியமனங்கள், மோதல்கள் ஆகியவற்றைச் சுற்றி சுழல்கிறது. விஜயின் ரசிகராகவும், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். 2024ல் த.வெ.க கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

24
Image Credit : x

அவர் கட்சியின் அன்றாட நிர்வாகம், பதவி நியமனங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றைப் பார்ப்பதுக்கொண்டார். 2025 ஜனவரி முதல், கட்சியில் மாவட்ட, இலக்கிய நிர்வாகிகள் நியமனங்களின்போது "சாதி, பணம் பார்த்து பதவி வழங்குவதாக" குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. த.வெ.க நிர்வாகிகளும், தொண்டர்களும் புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பதவிகளை சாதி அடிப்படையில் குறிப்பாக தனது சாதியினருக்கு வழங்குவதாகவும், ரூ.15 லட்சம் வரை பணம் வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து. "எங்களை நாய் மாதிரி நடத்துகிறார்" என நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆரணி மாவட்ட செயலாளர் நியமனத்தில் ஜாதி பார்ப்பதாக பெண் நிர்வாகி வீடியோ வெளியிட்டார். தனக்கு இணக்கமானவர்களுக்கு மட்டும் அழைப்பு விடுப்பது, எதிர்ப்பாளர்களை புறக்கணிப்பது என அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன.

Related Articles

Related image1
இந்துவோ, முஸ்லிமா ... பெண்கள் ஜிம்முக்கு போகக்கூடாது..! சதி நடக்கிறது..! பகீர் கிளப்பும் பாஜக எம்.எல்.ஏ..!
34
Image Credit : Google

41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானார். "அவர் இருக்கும்போது கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது" என நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்தனர். 17 நாட்கள் தலைமறைவாக இருந்து, அஞ்சலி செலுத்தாமல் அலுவலகத்திற்கு வந்தார். #KickOutBussyAnand என்ற ஹேஷ்டேக் வைரலானது.

கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் குடும்பத்துடன் புஸ்ஸி ஆனந்தின் காலில் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் அதிருப்தியை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் தவெக ஆதரவாளர்கள்.

கட்சி postingகாக கண்டவன் கால்ல விழுந்துட்டு இருக்கிங்களே ,

தளபதிய மறந்து இவன்தான் தலைவர்னு நெனச்சிட்டு இருக்கிங்களா? 

தளபதி கூட சேர்ந்து அரசியல் பண்ணுவானு பார்த்தா இவன் கட்சிக்குள்ளையே அரசியல் பண்ணிட்டு இருக்கான், 

புஸ்ஸி ஆனந்த் கட்சிக்கு வேணானு சொல்றவன் மட்டும் Like பண்ணு!👍

— Pokkiri Madhan 😎 (@Pokkiri_madan3) October 17, 2025

‘‘ஜான், புஸ்ஸி ஆனந்த் பேச்ச கேட்டு தான் அண்ணன் விஜய் நடந்து கொள்கிறார் என்றால், நீங்க அடிக்க வேண்டியது அவர்களை இல்ல. விஜயைத்தான். நேற்று புஸ்ஸி வந்தார். அப்படியே கட்சி அலுவலகத்தில் கரூரில் உயிரிழந்தவர்களின் படங்களை வைத்து ஒரு மவன அஞ்சலி செலுத்தினார்களா?ஆனந்த் என்ன செய்தார். அவர் காலில் நிர்வாகிகள் ஏன் விழுறாங்க?விஜய் ஏன் கண்டிக்கவில்லை. இதான் மாற்று அரசியலா? ஆனந்தால் வெட்க,மானம்தான் காற்றில் பறக்கிறது. இது தெரியாதா?

ஜான், புஸ்ஸி ஆனந்த் பேச்ச கேட்டு தான் அண்ணன் நடக்காருன்னா......

நீங்க அடிக்க வேண்டியது அவனுங்கள இல்ல கொஞ்சம் கூட சுயபுத்தி இல்லாத அண்ணன தான்....#KickoutVijaypic.twitter.com/urbXum8lQH

— NFA 🧛 AK mafia🧛 TVK IT WING🔥 (@AmuthanKan22128) October 16, 2025

44
Image Credit : our own

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் விஜய். புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கிய சாமி இருவரும் உங்களுடன் இருக்கும் வரை உங்களால் வெற்றிப்பெற முடியாது. இவர்களை நம்பி 33 வருடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பெயரும், புகழும், பணமும், தமிழ்நாட்டு மக்களின் செல்வாக்கையும் இழந்துவிடாதீர்கள்.

15 நாட்கள் தலைமறைவாக இருந்த தியாக சீலர் புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் தவெக நிர்வாகிகள்!
சுயமரியாதை ஸ்வாஹா!

செருப்ப கழட்டி போட்டு விழுந்திருக்கானுங்க pic.twitter.com/BODHM1fn3i

— Dollar Mahes (@MahesDollar) October 16, 2025

புஸ்ஸி ஆனந்த் இரண்டாம் கட்ட தலைவர்களை வளர விடாமல் கட்சிக்குள் தனக்கென ஆதரவாளர்களை வைத்துள்ளார். இவர் பொதுச்செயலாளராக தொடர்ந்தால் கட்சி வலுவடையாது. ஆளுமை, அதிகாரம், பொது அறிவு உடைய பொதுச்செயலாளர் தேவை. தவெக கட்சியோட ஒரிஜினல் தலைவரே புஸ்ஸி ஆனந்த் தான். புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் தொண்டர்களை வைத்து அரசியல் செய்வது விஜய்க்கு கெட்ட பெயரையே உருவாக்கும்’’ எனக் கொந்தளித்து வருகிறார்கள்.

நேத்து assembly லயே அவ்ளோ அவதூறுகள் நம்ம கட்சிய பத்தி பேசுறாங்க...அணு அளவு கூட நம்ம சைடு ரெஸ்பான்ஸ் இல்லாததற்கு காரணம் புஸ்ஸி ஆனந்த் ஒருத்தன் தான்..! 

தானும் வளரல...புதுசா யாரையும் வளரவும் விடல...#KickOutBussyAnand

— Mʀ.Exᴘɪʀʏ (@Jana_Naayagan) October 16, 2025

‘‘கட்சித் தலைமையின் மீது நம்பிக்கை வைப்போம். தேவையற்ற சண்டைகள், நமது பலவீனத்தையே வெளிக்காட்டும். புஸ்ஸி ஆனந்த், நமது இயக்கத்தின் அடையாளம். நம் குடும்ப விஷயத்தை, அடுத்தவர் பஞ்சாயத்து செய்ய அனுமதிக்க வேண்டாம். புஸ்ஸி ஆனந்த், ஒரு தூணாக இருக்கிறார். நாம் அனைவரும் அவருக்காக பிரார்த்திப்போம்’’ என சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved