- Home
- Politics
- சொட்டை தலையன் என விஜய் சொல்லச் சொல்கிறார்..! அவரும் விக்குதானே..! உருவ கேலியால் ரவீந்திரன் துரைசாமி கடும் வேதனை..!
சொட்டை தலையன் என விஜய் சொல்லச் சொல்கிறார்..! அவரும் விக்குதானே..! உருவ கேலியால் ரவீந்திரன் துரைசாமி கடும் வேதனை..!
அவனுக்கு விஜய் மீது பற்றுதல் இருந்தால் அவன் ரவீந்திரன் துரைசாமியும் சொட்டைத்தலை என்கிற உருவக்கேலிக்கு வருவானா? விஜயும் சொட்டைத்தலை தானே தம்பி. அவர் தொழிலுக்கு விக்கு வைத்திருக்கிறார்.

தவெகவை வெறுப்பேற்றும் ரவீந்திரன் துரைசாமி
மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி தவெகவினர் கூறும் உருவக்கேலியால் கடும் மனவேதனை அடைந்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாதக போன்ற கட்சிகளை பற்றி அவர் யூடியூப் சேனல்களில் விமர்சித்து வருகிறார்.
சீமானை தலைவரை "இந்த மண்ணுக்கான உண்மையான தலைவர்" என்று பாராட்டி, விஜய்யின் தவெகவை ‘காகிதப் புலி’ என்று கிண்டல் செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சீமான் வளர்ச்சி பெறுவார் என்றும் விஜய் வீழ்வார் என்றும் பேசியது தவெகவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் தொடர்ந்து தவெகவையும், விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் விமர்சித்து வருகிறார். ‘‘விஜய்க்கு நல்லது கெட்டதே தெரியல... என்ன நிர்வாகம் பண்ணிடுவ? விஜய் ஒரு செல்லாத நோட்டு. தவெக எந்த தொகுதியிலும் ஜெயிக்காது. என்ன செஞ்சாலும் சீமானை அடிச்சுக்க முடியாது. கூட்டத்தை காட்டி பிம்பத்தை ஏற்படுத்துகிறார் விஜய். தவெக ஒரு தொகுதியிலும் ஜெயிக்க முடியாது’’ என கடுமையாக விமர்சித்து வருகிறார் ரவீந்திரன் துரைசாமி.
விஜய் உங்களுக்கும் சொட்டைத் தலைதான்
இந்நிலையில் ஒரு யூடியூப் சேனலில் தன்னை விஜய் ரசிகர்கள் உருவக்கேலி செய்துள்ளதாக வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். அதில், ‘‘உச்சகட்ட காமெடி என்னவென்றால், என்னை சொட்டத்தலையன்னு எழுதச் சொல்லி விஜய் ரசிகர்களிடம் ஜான் ஆரோக்கிய சாமி சொல்லி இருக்கிறார். எனக்கு தலையில் முடி இல்லை. நான் என்ன விக்கா வைச்சிருக்கேன். அதைத்தான் சகோதரர் விஜயிடமும் சொல்கிறேன். சகோதரர் விஜய் உங்களுக்கும் சொட்டைத் தலைதான். அவர் சொட்டை என்பதை விஜய் ரசிகன்தான் எழுதுகிறான்.
தொழிLook wig !!!🤭🤭🤭 pic.twitter.com/XF1UydwRB9
— Gypsy 🎭 (@Gypsy_1809) September 24, 2025
தொழிலுக்கு விக்கு வைக்க வேண்டியது தான்
அவனுக்கு விஜய் மீது பற்றுதல் இருந்தால் அவன் ரவீந்திரன் துரைசாமியும் சொட்டைத்தலை என்கிற உருவக்கேலிக்கு வருவானா? விஜயும் சொட்டைத்தலை தானே தம்பி. அவர் தொழிலுக்கு விக்கு வைத்திருக்கிறார். இது தப்பில்லையா? நான் விஜயை சொட்டைத்தலை என நான் எந்த இடத்திலும் சொன்னது இல்லை. இன்னும் படம் நடிப்பார். தொழிலுக்கு விக்கு வைக்க வேண்டியது தான்'’ என உருவ கேலி குறித்து ரவீந்திரன் துரைசாமி கடும் வேதனையை பகிர்ந்துள்ளார்.