த்ரிஷா வெளியிட்ட போட்டோ... எலக்சென் வரை சும்மா இரு தாயீ... கெஞ்சும் தவெக அனுதாபிகள்..!
2025-ல் இந்த ரூமர்கள் இன்னும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக விஜய்யின் அரசியல் பயணம், த்ரிஷாவின் சமூக ஊடக பதிவுகள் காரணமாக. "த்ரிஷா புகைப்படம் போஸ்ட் செய்வது அவரது உரிமை. விஜய் அமைதியாக இருப்பது அவரது ஸ்டைல்

நடிகை த்ரிஷா தான் விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து, எங்கே செல்கிறேன் என்று கேட்டிருந்தார். அதற்கு பிரபலங்களும், ரசிகர்களும் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகிறார்கள்.
‘‘எங்கே போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டுவிட்டு துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்திருக்கலாம். இல்லை என்றால் வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லலாம். அது எல்லாம் இருக்கட்டும் த்ரிஷா, இந்த போட்டோவை எடுத்தது யாரென்று சொல்லுங்கள். அதை தெரிந்து கொள்ளத் தான் ஆவலாக இருக்கிறோம்’’ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே பிரகாஷ் ராஜின் மனைவி போனியோ, த்ரிஷாவை ஹைதராபாத்துக்கு வருமாறு கமெண்ட் போட்டிருக்கிறார். த்ரிஷா அவ்வப்போது தன் தோழிகளுடன் வெகேஷனுக்கு வெளிநாட்டிற்கு செல்வார். இல்லை என்றால் எங்காவது அவர்களை சந்தித்து நேரம் செலவிடுவார். இந்நிலையில் தான் இந்த சோலோ போட்டோவை எடுத்த தோழி யாரென்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.
பெரும்பாலானவர்கள், ஒரு போஸ்ட் போட்டு விடுகிறீர்கள். இதில் பாதிக்கப்படுவது என் அண்ணன் தான். எலக்க்ஷன் வரைக்கும் செத்த சும்மாயிருமா தாயே.இது அந்த பிரச்சார பஸ் தானே ..? அப்ப சரி அப்ப சரி...வா வந்து ஏதாச்சும் ஒன்னு புகைத்து விட்டு போ’’என பதில் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விஜய் மற்றும் த்ரிஷா இடையேயான உறவு குறித்த கிசுகிசுகள் தமிழ் சினிமாவில் பல காலமாக பரவி வருகிறது.2004-ல் கில்லி படத்திலிருந்து தொடங்கி, 2023-ல் லியோ படம் வரை எரிந்து கொண்டிருக்கிறது. 2025-ல் இந்த ரூமர்கள் இன்னும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக விஜய்யின் அரசியல் பயணம், த்ரிஷாவின் சமூக ஊடக பதிவுகள் காரணமாக. "த்ரிஷா புகைப்படம் போஸ்ட் செய்வது அவரது உரிமை. விஜய் அமைதியாக இருப்பது அவரது ஸ்டைல்..!
ஆனால், த்ரிஷாவுடனான வதந்தியால் " விஜயின் அரசியல் கேரியருக்கு தீங்கு’ ஏற்படலாம்.