- Home
- Politics
- பிக்பாஸ் போட்டியாளராக பனையூரில் விஜய்..? தவெகவின் எதிர்காலம் என்னவாகும்..? வேதனையில் தொண்டர்கள்..!
பிக்பாஸ் போட்டியாளராக பனையூரில் விஜய்..? தவெகவின் எதிர்காலம் என்னவாகும்..? வேதனையில் தொண்டர்கள்..!
விஜய் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் 33 பேரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். 'என்ன ஆறுதல் சொன்னாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது, நான் உங்களுடன் இருப்பேன். நான் உங்களை விரைவில் நேரில் சந்திப்பேன்' எனக் கூறியுள்ளார். ஆனால், எப்போது..?

கரூர் துயர சம்பவத்தை அரசியல் ரீதியாகவும் கையாளாமல், அனுதாப ரீதியிலும் கையாளாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிய விஜயால் தவெகவின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலைதான் தற்போது அந்த கட்சியின் தொண்டர்களுக்கு எழுந்திருக்கிறது.
கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தால் கரூரே கலங்கி நிற்கிறது. பலரும் மயங்கி சரிந்து விழுந்து கொண்டிருக்க கரூர் முழுக்க மரணமூலம் ஒலிக்க தொடங்கியது . மரண மூலம் விஜய்க்கு கேட்டு திரும்பி கரூருக்கு செல்லும் முடிவை எடுக்காத விஜய் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருச்சிக்கு சென்று விமானத்தை பிடித்து சென்னை வந்து சேர்ந்தார். கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது மோசமான முன் உதாரணம் என்பது ஒரு பக்கம் இருக்க, மீண்டும் கரூருக்கு செல்லவேயில்லை என்பதும் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறி இருக்கிறது.
விஜயை பார்க்க சென்று கூட்டத்தில் சிக்கி பலியாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் கரூர் மக்கள் புழுங்கி கொண்டிருக்கும் நிலையில் ஆறுதலாக நிற்க வேண்டிய விஜயும், தவெக நிர்வாகிகளும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல நழுவி கொண்டே இருப்பது நாகரீக அரசியல் என்ற வார்த்தைக்கு நகை முரணாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் யாருமே விஜயை குறையோ, குற்றமோ சொல்லாதபோது இன்னும் கரூருக்கு செல்ல விஜய் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது. விஜய் கரூருக்கு செல்வதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? சம்பவம் நிகழ்ந்த முதல் இரண்டு நாட்களில் நீதிமன்ற அனுமதி பெற்று விஜய் கரூருக்கு செல்வார் என தகவல் பரவியது.
நீதிமன்றத்தை நாடாத நிலையில் அடுத்த இரண்டு நாட்கள் விஜய் கரூருக்கு செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இப்படி ஒரு தகவல் வெளியாகி 11 நாட்களை கடந்து சென்றுவிட்ட நிலையில் இன்னும் விஜய் கரூருக்கு செல்லாததோடு பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ காலில் சந்தித்து பேசி இருக்கிறார் என்ற புதிய தகவலும் வெளியாக இருக்கிறது.
கரூருக்கு செல்ல காவல்துறை தடை விதிக்காத சூழலில் இன்னும் என்ன காரணம் விஜய் வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்டு இருக்கிறது என்ற சந்தேகம் எழுந்தருக்கிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விட்ட நிலையில், தன்னை சந்திக்க வந்தவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள் என தார்மீக பொறுப்பேற்று முன்னாள் வந்து நின்று இருக்க வேண்டிய விஜய், வீட்டை விட்டு இன்னும் வெளியிலே வராமல் இருப்பதன் மூலம் என்ன செய்தியை சொல்ல நினைக்கிறார் என்பதும் புரியாத புதிராக உள்ளது. கரூர் சம்பவத்தில் சதி இருப்பதாகவோ அல்லது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகவோ நிச்சயமாக நம்புகிறார். விஜய் மௌனமாக இருப்பது அவர் மீது வரும் விமர்சனத்திற்கு அவரே பழி போட்டுக் கொள்வதைப் போலத்தான் இருக்கிறது.
கட்சி தொடங்கியதில் இருந்தே எந்த தவெக மீதும் விஜய் மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்தன. அதையெல்லாம் விஜய் கண்டுகொண்டாரா என்பது தெரியவில்லை. கரூர் விவகாரத்தில் தாமதமாக 3 நாட்கள் கழித்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு வீடியோவில் பேசியிருக்கிறார். கரூர் விவகாரத்தில் யார் மீது தவறு? யாருக்கு பொறுப்பு? என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்காமல் இருப்பது அவருக்கு இருக்கும் ஆதரவை குறைத்துக் கொள்ளும் வகையில் தான் இருக்கிறது. விரைவிலேயே கரூர் மக்களை சந்திப்பேன் என மூன்றாவது நாள் பேசிய வீடியோவிலேயே விஜய் கூறிவிட்டார். ஆனாலும், இத்தனை நாள் தாமதத்திற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கட்சியில் இருக்கும் மாநில நிர்வாகிகள் ஆளாளுக்கு தலைமறைவானது கூட விஜயின் அமைதிக்கு ஒரு காரணமாக கூறப்படும் நிலையில் சட்ட சிக்கல்களை சந்திப்பதை சாக்காக வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதை தள்ளிப் போடுவது எப்படி சரியாக இருக்கும்? என்ற கேள்வியும் விஜயை நோக்கி எழுகிறது. அரசியல் கட்சியை தொடங்கி, பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டு இவ்வளவு பெரிய துயர சம்பவம் நிகழ்ந்திருக்கும் போது வீட்டுக்குள் அமைதியாக அமர்ந்திருப்பது எப்படி நியாயமாக இருக்கும்? என்பதை விஜய் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். எதிர்பாராத நிகழ்வை எப்படி கையாள்வது? எப்படி சமாளிப்பது? என்ற அரசியல் பாடங்களை இன்னும் விஜய் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
விஜய் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் 33 பேரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். 'என்ன ஆறுதல் சொன்னாலும் இழப்பை ஈடு செய்ய முடியாது, நான் உங்களுடன் இருப்பேன். நான் உங்களை விரைவில் நேரில் சந்திப்பேன்' எனக் கூறியுள்ளார். ஆனால், எப்போது..?