- Home
- Politics
- கேரளாவிலும் விஜய் ரசிகர்கள்..! திமுகவைவிட தவெகவுடன் கூட்டணிதான் பெஸ்ட்..! காங்கிரஸ் போடும் லாபக் கணக்கு..!
கேரளாவிலும் விஜய் ரசிகர்கள்..! திமுகவைவிட தவெகவுடன் கூட்டணிதான் பெஸ்ட்..! காங்கிரஸ் போடும் லாபக் கணக்கு..!
இப்பொழுது காங்கிரஸ், திமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் லாபம், நட்டம் என்பது வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை கூடுகிறது. அப்படியானால் கூட்டணியில் தொடர்ந்து நாமும் தோற்றாக வேண்டுமா? என நினைக்கிறது காங்கிரஸ்.

தவெகவுக்கு திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டிய கட்டாயம்
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் இனிமேல் கூட்டணி வைக்க மாட்டேன் என முரண்டு பிடிக்க மாட்டார், இறங்கி வருவார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் அல்லது அதிமுகவுடன் விஜயுடன் இணங்கி வருவாரா? என்கிற மாற்றத்தையும் ஏற்படுத்தி விடும் இந்த கரூர் சம்பவம் என்கிறார்கள்.
விஜயும் வெற்றி பெற வேண்டுமென்றால் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. விஜயின் தற்போதைய நோக்கம் திமுகவுக்கு எதிரான மனநிலையின் ஆழத்தை கூட்டிவிட்டது. தவெகவை நசுக்கப்பார்க்கிறார்கள் என்கிற திமுக வெறுப்பு அதிகமாகிறது. ஆகையால் திமுகவை எதிர்ப்பவர்களை, திமுகவிற்கு எதிரானவர்களை சிதறவிடாமல் ஒன்று சேர்த்தால் தான் திமுக ஆட்சியை வீழ்த்த முடியும். வீழ்த்த வேண்டியது கட்டாயம் என்று தவெகவில் மேலிருந்து கீழே வரை எல்லோரும் உணர்ந்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.
விஜயிடம் ராகுல் காந்தி பேசிய 15 நிமிடங்கள்
இந்நிலையில் இதுகுறித்து பத்திரிக்கையாளர் டிஎஸ்எஸ் மணி பேசுகையில், ‘‘கரூர் சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மு.க.ஸ்டாலிடமும் பேசி இருக்கிறார். அவர் தமிழகத்தின் முதல்வர் என்பதால், கரூர் சம்பவம் குறித்து விசாரித்து இருக்கிறார். அதே நேரத்தில் விஜயுடனும் 15 நிமிடங்களுக்கும் மேல் பேசி இருக்கிறார் ராகுல் காந்தி. விஜயிடம் கரூர் சம்பவத்தை மட்டும் பேசியிருப்பார் ராகுல் காந்தி என எடுத்துக் கொள்ள முடியாது.
ஏனென்றால் விஜயிடம் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் பேசியிருக்கிறார். தன்னுடைய ஆட்கள் சிலரை உடனடியாக கரூருக்கு அனுப்பி இருக்கிறார். இதில் குறிப்பாக காங்கிரஸின் அகில இந்திய அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் மிகப்பெரிய ஆள். காங்கிரஸில் முக்கியமானவர். கட்சி விஷயங்களை தீர்மானிக்க கூடியவர். அவர் இன்று கரூருக்கு வந்திருக்கிறார். அவர் ஏற்கனவே கேரளாவை சேர்ந்தவர். கேரளாவில் விஜய்க்கு ஐந்து விழுக்காடு வாக்குகள் இருக்கிறது. அவரிடம் இணைந்தால் கேரளாவில் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்து விடலாம். பினராயி விஜயின் ஆட்சியை தூக்கி எறிந்து விடலாம் என ராகுல் காந்திக்கு கடுமையான அழுத்தங்களை கே.சி.வேணுகோபால் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை
அதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவிக்கிறாரா? இல்லையா? என்பது தான் பிரச்சனை. அந்த கே.சி.வேணுகோபால் கரூருக்கு வந்து நேரடியாக பார்க்கிறார். அவர் இங்கு வந்து பார்ப்பதால் காங்கிரஸிற்கும், விஜய்க்கும் உள்ள உறவு மலருமா என்பது போன்ற விவாதங்களும் எழுந்து வருகிறது. ஏன் மலர வேண்டும் என்றால் கானஙகிரஸை பொறுத்தவரையில் திமுகவின் அணுகுமுறைகள், திமுகவுக்கும், ஒன்றிய பாஜக அரசுக்கும் உள்ள மறைமுக நல்லுறவுகள், சொல்லாததையும் நாங்கள் செய்வோம் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வார்த்தைகளுக்கு உண்டான அர்த்தம் அதுவா? என காங்கிரஸாருக்குள் விவாதங்கள் கீழ் இருந்து எல்லாம் வருகிறது. இப்பொழுது காங்கிரஸ், திமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் லாபம், நட்டம் என்பது வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை கூடுகிறது. அப்படியானால் கூட்டணியில் தொடர்ந்து நாமும் தோற்றாக வேண்டுமா? என நினைக்கிறது காங்கிரஸ்.
அரசியல் கணக்குகள் என்பது வேறு
ராகுல் காந்தி, மோடியை இன்னும் மூன்று வருடம் பாராளுமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும். அப்படியானால், திமுகவில் உள்ளஎம்பிகள் நமக்கு வேண்டும். அதனால் திமுக எம்பி வேண்டும் என ராகுல் காந்தி நினைக்கிறார். ஆனால் மோடி, நிதீஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் நம்பிக்கொண்டு இருக்க முடியுமா? நாம் மைனாரிட்டி கவர்மெண்டாக இருக்கிறோம். அதனால் அவர்களில் யாராவது காலை உருவி விட்டார்கள் என்றால் என்ன செய்வது? அமலாக்கத்துறை ரெய்டு, மேலும் பல வழக்குகள் என பயந்து போய் கிடக்கிறார்கள் திமுக. ஆகையால் நெருக்கடி வந்தால் திமுகவினர் என்ன செய்வார்கள்? பாஜகவுடன் கைகோர்க்கலாம்.
அதே நேரத்தில், விஜய் கட்சியை அதிமுகவும் நம்பிக்கை கொண்டு இருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி, திமுக -காங்கிரஸ் கூட்டணி என வெளியில் வெவ்வேறு கூட்டணி போல் தெரிந்தாலும் அரசியல் கணக்குகள் என்பது வேறு’’ என்கிறார்.