சித்தப்பாவிடம் இருந்து இப்படியொரு பரிசை உதயநிதி எதிர்பார்த்திருக்கவே மாட்டார்... வைரல் போட்டோ...!
சித்தப்பா கொடுத்த இன்ப அதிர்ச்சியை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வென்று முதன்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்க உள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அன்றைய தினமே கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களில் சென்று மரியாதை செலுத்தினார்.
மறுநாள் தனது வெற்றிக்கு காரணமானவர்களை நேரில் அழைத்து நன்றி தெரிவித்தார் அவர். பிறகு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியை சிஐடி காலணி இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார் உதயநிதி.
சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வெற்றிக்கு கேப்டனிடம் ஆசி பெற்றார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
அதன் பிறகு திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார். தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் உதயநிதி நேரில் சென்று சந்தித்தார்.
இதே போன்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனையும் தேடிச் சென்று வாழ்த்து பெற்றார் உதயநிதி.
பிறகு பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியவர் கி.வீரமணியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் இருந்த போது அவருக்காக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மு.க.தமிழரசு சித்தப்பாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முதன் முறையாக எம்.எல்.ஏ.வாக பதவியேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்பாராத விதமாக அன்பாக முத்தம் கொடுத்து சித்தப்பா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சித்தப்பா கொடுத்த இன்ப அதிர்ச்சியை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.