- Home
- Politics
- TVK Vijay: பெரும்பான்மை நெருக்கடியில் தவெக! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?
TVK Vijay: பெரும்பான்மை நெருக்கடியில் தவெக! அமைச்சரவை ஆசை காட்டும் விஜய்.. காங்கிரஸ், பாமக பல்டி அடிக்குமா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வெற்றி வாகை சூடிய தவெக
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தவெக வெற்றி வாகை சூடியுள்ளது.ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முடியாத சூழல் உருவாகியிருப்பதால், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பரபரப்பு அதிகரித்துள்ளது. தவெக 108 வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.மீதமுள்ள ஆதரவை யாரிடம் இருந்து பெறலாம் என்ற கேள்வி முக்கியமாகியுள்ளது.
தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா?
இந்தச் சூழலில், தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா என்ற பேச்சு வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் நிலைப்பாடு தமிழக அரசியலில் புதிய சமன்பாட்டை உருவாக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.
தொடங்கியது பேச்சு வார்த்தை
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்டிருந்த நிலையில், 5 இடங்களிலும் பாமக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த முடிவுகள் இறுதியாகியுள்ளதால் புதிய கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், சில தொகுதிகளில் அதன் முன்னிலை தவெகவுக்கு மறைமுக ஆதரவாக மாறக்கூடும் என்ற கணிப்பும் நிலவுகிறது. இதனால் விஜய் இன்று மாலை அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் இடம் பிடிக்க போட்டா போட்டி
இந்த இக்கட்டான சூழலில், தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவைத் திரட்டத் தீவிரமாக இறங்கியுள்ளார். குறிப்பாக, திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தனது 5 இடங்களின் ஆதரவை விஜய்க்கு வழங்கி அமைச்சரவையில் இடம் பிடிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதேபோல், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவும் தனது 6 இடங்களின் ஆதரவை தவெகவிற்கு அளிக்கும் பட்சத்தில், சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி அமைக்க திட்டம் போடும் விஜய்.!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் சேர்த்துப் பெற்று, ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்துத் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்க விஜய் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான முக்கிய முடிவுகள் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.

