MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • காங்கிரஸை சரிக்கட்ட ஸ்டாலின் எடுத்த வியூகம்..! அசாம் தேர்தல் செலவை ஏற்கும் திமுக..!

காங்கிரஸை சரிக்கட்ட ஸ்டாலின் எடுத்த வியூகம்..! அசாம் தேர்தல் செலவை ஏற்கும் திமுக..!

காங்கிரசை சரிக்கட்டும் முடிவுக்கு திமுக தலைமை வந்திருக்கிறது. இதற்காக அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Jan 21 2026, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

கடந்த 2021 தேர்தலில் சுமார் 25 தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில், இம்முறை 35-40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது. வெற்றி பெற்றால் 3 அமைச்சர் பதவிகள், ஆட்சியில் பங்கு என காங்கிரஸ், திமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், திமுக தரப்பு "தமிழகத்தில் எப்போதும் தனி ஆட்சி தான், கூட்டணி ஆட்சி இல்லை" என திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காங்கிரஸ் சில தலைவர்கள் தவெக உடன் கூட்டணி வைப்பது குறித்து பேசி, திமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. காங்கிரஸ் மேலிடம் திமுக கூட்டணியை தொடர முடிவு செய்துள்ளது.

23
Image Credit : Google

தவெக தலைவர் விஜய் மீதான ராகுல் காந்தியின் மென்மையான போக்கும், திமுகவுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17ல், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி-எம்எல்ஏ-க்களுடன் டில்லியில் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை முடிப்போம்' என்று ராகுல் காந்தியோ, காங்கிரஸ் தலைவர் கார்கேவோ வெளிப்படையாக அறிவிப்பார்கள் என திமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதையடுத்து, காங்கிரசை சரிக்கட்டும் முடிவுக்கு திமுக தலைமை வந்திருக்கிறது. இதற்காக அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 2011ல் 63 தொகுதிகள், 2016ல் 41 தொகுதிகளை திமுக கூட்டணியில் காங்கிரஸ் பெற்றது. ஆனால், 2021ல் சட்டமன்றட் தேர்தலில் வெறும் 25 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது.

Related Articles

Related image1
புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!
33
Image Credit : Asianet News

ப்போது காங்கிரஸ் கட்சிக்கு தவெக ஒரு ஆப்ஷனாக இருப்பதால் 41 தொகுதிகளை பெற காங்கிரஸ் மல்லுக்கு நிற்கிறது. இந்த நிலையில், விரைவில் நடக்கவிருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், கேரளா, அசாமில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ராகுல் திட்டமிட்டுள்ளார். ஆனால், தேர்தல் செலவுக்கு தேவையான பணமில்லாமல் காங்கிரஸ் தத்தளிக்கிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி காங்கிரஸை வழிக்கு கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காங்கிரஸின் அசாம் மாநில தேர்தல் செலவுகளை ஏற்றுக் கொள்கிறோம். வேறு எந்த நெருக்கடியும் கொடுக்கக்கூடாது' என திமுக தரப்பில் பேசி முடித்துள்ளனர்’’ எனக் கூறப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
Recommended image2
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!
Recommended image3
காங்கிரசில் 7 கோடிக்கு சீட் விற்பனை? ராகுல், பிரியங்கா மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!
Related Stories
Recommended image1
புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved