- Home
- Politics
- காங்கிரஸுக்கு செக் வைத்த ஸ்டாலின்... ஆதாரங்களை திரட்டிய அறிவாலயம்..! ஆடிப்போன செல்வப்பெருந்தகை..!
காங்கிரஸுக்கு செக் வைத்த ஸ்டாலின்... ஆதாரங்களை திரட்டிய அறிவாலயம்..! ஆடிப்போன செல்வப்பெருந்தகை..!
‘‘கூட்டணி விவகாரத்தை பற்றி பொதுவெளியில் பேசியவர்கள் மீது தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற கண்டிஷனை அறிவாலயம் போட்டிருக்கிறது.

காங்கிரஸ் - திமுக கூட்டணி விவகாரம் தற்போது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மண்டைச் சூட்டை கிளப்பி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் பேசப்பட்டு வரும் முக்கிய பிரச்சினை ஆட்சியில் பங்குதான். காங்கிரஸ் தரப்பில் இருந்து சில மூத்த தலைவர்களான மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் ஆட்சியில் பங்கு, அதிகார பகிர்வு, கூடுதல் தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் 30% பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் காங்கிரஸ் கூட்டங்களில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால் திமுக தலைமைக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் பகிரங்கமாக ஆட்சியில் பங்கு இல்லை என மறுத்துள்ளார்.
திமுக தரப்பு கூட்டணி தொடரும், ஆனால் ஆட்சி பங்கு கோரிக்கை ஏற்க முடியாது என உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தரப்போ சிலர் பொதுவெளியில் கருத்து கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தைக்கு முன் அமைதி காக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் மேலிட தலைவர்களான கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் போன்ற மத்திய தலைவர்கள் கூட்டணி உறுதி, தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, கட்சியினருக்கு பொதுவெளியில் கூட்டணி விவகாரம் பேசக்கூடாது, பேசினால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைபிப்ரவரி 22 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் மீது முதலமைச்சர் ஸ்டாலின் ஏக கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய ஆதாரங்களை திமுக கையில் வைத்திருப்பதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முதல்வர் சொன்னதற்குப் பிறகும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் ஆட்சியில பங்கு கேட்டு பொதுவெளியில் பேசியது திமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் தீர்வு காண கே.சி.வேணுகோபால் சென்னை வந்தபோது முதல்வரை பார்க்க அப்பாயின்மென்ட் கேட்டுள்ளார்.
செல்வபெருந்தகை இதற்காக திமுக தலைமையிடம் நேரம் கேட்க, ‘‘முதல்வரை உங்க தலைவர்கள் பார்க்க நேரம் கேக்குறீங்க. இன்னொரு பக்கம் தவெக உடன் உங்க கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காங்க’’ என ஆதாரத்துடன் முதல்வர் தரப்பிலிருந்து செல்வப்பெருந்தகையிடம் கோபமாக கேட்டுள்ளார்கள். அதற்கு செல்வப்பெருந்தகையோ ‘‘தவெகவுடன் எங்கள் கட்சியினர் பேசிக் கொண்டு வருவது எங்களுக்கு தெரியாது’’ எனச் சொல்ல, ‘‘கூட்டணி விவகாரத்தை பற்றி பொதுவெளியில் பேசியவர்கள் மீது தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற கண்டிஷனை அறிவாலயம் போட்டிருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான் இனி கூட்டணியை பற்றி வெளியில் பேசினால் நடவடிக்கை பாயும் என காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் போட்டுள்ளனர் என்கிறார்கள்.
