செந்தில்பாலாஜி விவகாரத்தில் வருத்தம்.. 2024 தேர்தலில் யாருடன் கூட்டணி.. ஓபிஎஸ் நிலை? டிடிவி தினகரன் அப்டேட்ஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது முதல் 2024 தேர்தல் வரை பல முக்கிய விவகாரங்களை குறித்து பேசியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் டிடிவி தினகரனை சென்னை இல்லத்தில் சந்தித்து பேசினார். இருவரும் இணைந்து செயல்படுவதாக கூட்டாக பேட்டி அளித்தது தமிழ்நாடு அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி எடப்பாடி தரப்பினரை கலக்கத்தில் ஆழ்த்தியது.
விரைவில் சசிகலாவை சந்தித்து ஆதரவு கோர இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் இதுவரை சசிகலா சந்திப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் அமமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயபேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் தலைமை வகித்தார்.
இதில், அமமுக பொருளாளராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். கே. செல்வம் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல், விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “மக்களவை தேர்தலுக்கு காலம் இருப்பதால் கூட்டணி குறித்து பின்னர் அறிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி விவகாரத்தைபொறுத்தவரை சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. அதேநேரம் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதை அறிந்துவருத்தமாக உள்ளது. இவற்றை அவர் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இதில் பலிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை.
பிரதமர் மோடியை எதிர்க்கும் வலுவான தலைவர் மு.க ஸ்டாலின் என்று கூறுகின்றனர். முதல்வர் பேசும்வசனங்கள் அனைத்தும் பயத்தின்வெளிப்பாடுதான். ஏற்கனவே சொன்னதுபோல் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்துதான் செயல்பட போகிறோம். மீண்டும் அவரை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசுகிறோம்” என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு