- Home
- Politics
- கோவாவில் உற்சாக உல்லாசம்... சச்சின் மகளை மடக்கிய மச்சக்காரன்..! முட்டிக் கொள்ளும் முரட்டு சிங்கிள்ஸ்..!
கோவாவில் உற்சாக உல்லாசம்... சச்சின் மகளை மடக்கிய மச்சக்காரன்..! முட்டிக் கொள்ளும் முரட்டு சிங்கிள்ஸ்..!
சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, சித்தார்த் கெர்கருடன், சாரா டெண்டுல்கரின் உறவைப் புறக்கணிப்பது கஷ்டம்தான். கத்தரிக்காய் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் கோவாவில் வைச் சேர்ந்த சாராவின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் படு வைரலாகி வருகின்றன. இந்தப் புகைப்படங்களில், சாரா ஒரு இளைஞருடன் செம ஜாலியாக இருக்கிறார். அந்த இளைனன் யார்? சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வரும் சாராவுக்கு அந்த இளைஞருடன் என்ன தொடர்பு? சாரா டெண்டுல்கர் அந்த இளைஞருடன் ரொம்பவே நெருக்கம் காட்டுகிறார். அப்படியானால் சாராவுக்கும் அந்த இளைஞருக்கும் உள்ள உறவு என்ன? என பல விவாதங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
சாரா டெண்டுல்கருடன் இருக்கும் அந்த இளைஞரின் பெயர் சித்தார்த் கெர்கர். சமூக ஊடகங்களில் அவர் ஒரு தொழிலதிபர் என்று கூறப்படும் அதே வேளையில், அவரது இன்ஸ்டாகிராம் சுயவிவரம் அவர் ஒரு திரைக் கலைஞர் என்பதாகக் காட்டுகிறது. சித்தார்த் கெர்கரின் சுயவிவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவது போலவே சாரா டெண்டுல்கருடனான அவரது உறவு குறித்தும் குழப்பம் நிலவுகிறது.
ஆனாலும், சித்தார்த் கெர்கரை சமூக ஊடகங்களில் சாரா டெண்டுல்கரின் காதலன் என்று அடித்துச் செலொகிறார்கள். வைரலான புகைப்படங்களில் இருவரின் முகபாவங்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சாரா, சித்தார்த் உறவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
சாரா டெண்டுல்கர் முன்பு ஷுப்மான் கில்லுடன் இணைத்து பேசப்பட்டது. இருவரின் பல புகைப்படங்களும் வைரலானது. ஆனால் அவர்களின் உறவு குறித்த தகவல்கள் வதந்தியாக மாறியது. சமூக ஊடகங்களில் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, சித்தார்த் கெர்கருடன், சாரா டெண்டுல்கரின் உறவைப் புறக்கணிப்பது கஷ்டம்தான். கத்தரிக்காய் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.