- Home
- Politics
- Asia cup -2025 : ஜெய் ஷாவை கண்டு நடுங்கும் பாகிஸ்தான்..! கொஞ்சம் வாலாட்டினாலும் பிசிபி-க்கு நாசம்தான்..!
Asia cup -2025 : ஜெய் ஷாவை கண்டு நடுங்கும் பாகிஸ்தான்..! கொஞ்சம் வாலாட்டினாலும் பிசிபி-க்கு நாசம்தான்..!
ஆசிய கோப்பை 2025 : -ல், பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. ஆனால் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முடிவால் சிக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் இருந்து விலகக்கூடும் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஜெய் ஷா பயம்
ஆசிய கோப்பை 2025-ல், பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. ஆனால் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தனது முடிவால் சிக்கிக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான கைகுலுக்கல் சர்ச்சைக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி போட்டி நடுவரான ஆண்டி பைக்ராஃப்ட் மீது புகார் அளித்தது. பைக்ராஃப்ட் இரு அணிகளும் கைகுலுக்குவதைத் தடுத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியது. ஆனால் ஐசிசி போட்டி நடுவருக்கு க்ளீன் சிட் வழங்கியுள்ளது. போட்டி நடுவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் இருந்து விலகக்கூடும் என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் இந்த நடவடிக்கையை எடுக்காது, இதற்குக் காரணம் ஜெய் ஷா தான் என்கிறார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை மோசம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, ‘‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கோப்பையில் இருந்து தனது அணியை விலக்கிக் கொள்ளாது. பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் இருந்து விலகினால், ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி அதற்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கலாம் என்று பிசிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிதி அபராதம் மிக அதிகமாக இருக்கலாம். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தாங்கிக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவல்படி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள அனைத்து மைதானங்களையும் பழுதுபார்ப்பதில் நிறைய பணம் செலவிடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது.
சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறுமா பாகிஸ்தான் அணி ?
பாகிஸ்தான் அணி செப்டம்பர் 17 அன்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆசிய கோப்பையின் அடுத்த போட்டியில் விளையாடும். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். ஏனென்றால் இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி சூப்பர்-4 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பைத் தவறவிடலாம். பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரக அணியை தோற்கடித்தால், வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 21 ம்தேதி இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் மோதும்.
இந்தியா- பாகிஸ்தான் அணி ஒரே நேரத்தில் பயிற்சி
செவ்வாய்க்கிழமை ஐ.சி.சி அகாடமியில் இந்தியாவும், பாகிஸ்தானும் பயிற்சி செய்யப் போகின்றன. இரு அணிகளின் பயிற்சி நேரம் வேறுபட்டாலும், இரு அணிகளும் ஒரு மணி நேரம் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடும். இந்தியாவின் பயிற்சி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பாகிஸ்தான் அணி இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை பயிற்சியில்இ ஈடுபட உள்ளன.