- Home
- Politics
- தமிழகத்தின் வேர்களை வலுப்படுத்தும் பாஜக..! சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி உணர்த்தும் அர்த்தம் என்ன..?
தமிழகத்தின் வேர்களை வலுப்படுத்தும் பாஜக..! சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி உணர்த்தும் அர்த்தம் என்ன..?
சிபிஆரின் வெற்றிக்குப் பிறகு, என்டிஏவுக்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்ப ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள பிஜேடி, பிஆர்எஸ், அகாலிதளம் விலகியே இருந்து.

துணை ஜனாதிபதி பதவிக்கு என்டிஏ வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்தன. என்டிஏ கூட்டணிக்கு மக்களவையில் 304 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 141 எம்.பி.க்களும் என மொத்தம் 445 பேர் உள்ளனர். என்.டி.ஏ-வின் எண்ணிக்கையின் பலத்தைக் கருத்தில் கொண்டு, சிபி ராதாகிருஷ்ணன் புதிய துணை ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தாலும், இந்த வெற்றிக்கும் பல அர்த்தங்கள் உள்ளன.
இந்த வெற்றியின் மூலம், என்.டி.ஏ கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்கின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில், எதிர்க்கட்சிகள் என்.டி.ஏ கூட்டணிக்குள் கசப்புகள் உள்ளதாக பேசி வருகின்றன. குறிப்பாக பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவின் கூட்டணி கட்சிகள் விலகலாம் என்ற விவாதங்கள் தொடர்ந்து வந்தன. என்.டி.ஏ வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனின் இந்த வெற்றிம் என்.டிஏ கூட்டணி வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதை உணர்த்தியுள்ளது. பாஜக தலைமையும் இதற்காக கடுமையாக உழைத்தது. பாஜக எம்.பி.க்களுக்காக இரண்டு நாள் பயிலரங்கு நடத்தப்பட்ட நிலையில், பயிலரங்குகளின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் உரையாற்றினார். இன்று காலை, பல்வேறு அமைச்சர்களின் வீடுகளில் பல்வேறு குழுக்களின் எம்.பி.க்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்போது, ஆந்திராவில் ஒரு என்.டி.ஏ கூட்டணி அரசு நடந்து வருகிறது. அதில் பாஜகவும் அங்கம் வகிக்கிறது. இங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸை அதிகாரத்திலிருந்து வெளியேற்றி சந்திரபாபு நாயுடு தலைமையில் எண்டிஏ கூட்டணி இங்கு அரசை அமைத்தது. எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவர். இந்நிலையில், இது ஓய்எஸ்ஆர் காங்கிரஸூக்கு அழுத்தம் கொடுக்குமா? எதிர்க்கட்சி வேட்பாளரை ஆதரிக்குமா என்ற விவாதமும் கிளம்பியது. ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்டிஏ வேட்பாளரை ஆதரித்தது. ஆந்திர அரசியலிலும் பாஜக இதனால் பயனடையலாம்.
சிபி ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக-அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பாஜக தமிழகத்திலும் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளதால் பலனை பெற முடியும். சிபி ராதாகிருஷ்ணன் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களிலும் பணியாற்றியுள்ளார். பாஜக தென்னிந்தியாவில் தனது வேர்களை வலுப்படுத்த முயற்சிக்கிறது. சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றி பாஜக தமிழ்நாட்டில் தன்னை நிலைநிறுத்த உதவும். தென்னிந்தியாவில் ஒரு வட இந்தியக் கட்சியாக பாஜக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த வெற்றியின் மூலம் பாஜக இப்போது அதை கடுமையாக மறுக்க முடியும்.
சிபி ராதாகிருஷ்ணனின் வெற்றிக்குப் பிறகு, என்டிஏ கூட்டணி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த கேள்விகளை எழுப்ப ஒரு வாய்ப்பு கிடைகத்திருக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள பிஜேடி, பிஆர்எஸ் மற்றும் அகாலிதளம் ஆகியவை விலகியே இருந்து வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே பாஜக எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறது.