MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஜெயலலிதா எடுத்த சாட்டை! திமுகவினரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை! தமிழகத்தையே அதிர வைத்த அரசியல் ஆட்டம்.!

ஜெயலலிதா எடுத்த சாட்டை! திமுகவினரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை! தமிழகத்தையே அதிர வைத்த அரசியல் ஆட்டம்.!

2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், முந்தைய திமுக அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் பாய்ந்தன. புதிதாக உருவாக்கப்பட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு மூலம்  உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 24 2026, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பாய்ந்த வழக்குகள் துரத்திய சட்டம்
Image Credit : x

பாய்ந்த வழக்குகள் - துரத்திய சட்டம்

தமிழக அரசியல் வரலாற்றில் 2011-ஆம் ஆண்டு என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய 'சட்டப் போர்' தொடங்கிய ஆண்டு. 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து களம் கண்ட ஜெயலலிதா, முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் தனது அதிரடி 'ஆக்ஷன் பிளானை' கையில் எடுத்தார்.

27
திமுக அமைச்சர்களைத் துரத்திய சொத்துக்குவிப்பு வழக்குகள்!
Image Credit : Asianet News

திமுக அமைச்சர்களைத் துரத்திய சொத்துக்குவிப்பு வழக்குகள்!

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, கோட்டை வட்டாரமே அதிரும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) முடுக்கிவிடப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைத் தவிர்த்து, அந்த அமைச்சரவையில் இருந்த 18 முக்கிய அமைச்சர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குகள் பதியப்பட்டன.

Related Articles

Related image1
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
Related image2
Now Playing
ஒரே தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட முயன்ற ஜெயலலிதா.. கடைசில என்ன ஆச்சு தெரியுமா..?
37
ரெய்டுகளில் சிக்கிய புள்ளிகள்
Image Credit : Getty

ரெய்டுகளில் சிக்கிய புள்ளிகள்

துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு முதல் வீரபாண்டி ஆறுமுகம், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு வரை திமுகவின் ‘பில்லர்கள்’ என அழைக்கப்பட்ட அனைவரும் லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடிக்குள் வந்தனர். அமைச்சர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் மனைவி, பிள்ளைகள் என நெருக்கமானவர்களின் வீடுகளிலும் விடிய விடிய சோதனைகள் நடத்தப்பட்டன.

47
நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு
Image Credit : Asianet News

நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு

ஜெயலலிதாவின் 'மாஸ்டர் ஸ்டிரோக்'! திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களிடமிருந்தும், நில உரிமையாளர்களிடமிருந்தும் நிலங்கள் மிரட்டிப் பறிக்கப்பட்டதாக எழுந்த புகார்களை விசாரிக்க, ஜூலை 10, 2011 அன்று 'நில அபகரிப்பு தடுப்புத் தனிப்பிரிவு' உருவாக்கப்பட்டது. "மக்களின் நிலங்களை மீட்டுக் கொடுப்பதே எனது நோக்கம்" என முழங்கிய ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, திமுகவினருக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது.

57
கம்பி எண்ணிய முக்கியத் தலைகள்!
Image Credit : Getty

கம்பி எண்ணிய முக்கியத் தலைகள்!

இந்தத் தனிப்பிரிவின் அதிரடியால், திமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் நிலைகுலைந்தனர்.கே.என்.நேரு (திருச்சி), பொன்முடி (விழுப்புரம்) மற்றும் என்.கே.கே.பி.ராஜா போன்றோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், மதுரை தளபதி மற்றும் சேலம் வீரபாண்டி ஆறுமுகம் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

67
அரசியல் ஆட்டத்தின் முடிவு என்ன?
Image Credit : Getty

அரசியல் ஆட்டத்தின் முடிவு என்ன?

இந்த வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தரப்பு கடுமையாகச் சாடியது. இருப்பினும், சில வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டன. பல வழக்குகள் நீதிமன்றங்களில் நீண்ட சட்டப் போராட்டங்களைக் கடந்தன. சில வழக்குகள் போதிய ஆதாரங்கள் இன்றி தள்ளுபடியும் செய்யப்பட்டன. 

77
ஆட்சியும் காட்சியும் மாறும்
Image Credit : Getty

ஆட்சியும் காட்சியும் மாறும்

தமிழக அரசியலில் 2011-ல் அரங்கேறிய இந்த 'அதிரடி ஆட்டம்' இன்றும் ஒரு பாடமாகவே பார்க்கப்படுகிறது. ஆட்சி மாறும்போது அதிகாரம் எப்படிச் சுழலும் என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி! ஆனால் தப்பு செஞ்சால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என ஒரு தரப்பும், அதிகார மிரட்டல் என மற்றொரு தரப்பும் இந்த நடவடிக்கை குறித்து விமர்சிக்கின்றனர்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அரசியல்
திமுக
வழக்குகளும் வெற்றிகளும்
Latest Videos
Recommended Stories
Recommended image1
கூட்டணியை முறித்துக் கொண்ட திருமாவளவன்..? தனித்து போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பு..
Recommended image2
தளபதி விஜய் Vs செந்தமிழன் சீமான்.. படிப்பில் 'டாப்' யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல் இதோ!
Recommended image3
5 நாட்கள் போர் ஒத்தி வைப்பு.. யூ-டர்ன் அடித்த டிரம்ப்..! ஈரானிடம் இறங்கி வரும் அமெரிக்கா..?
Related Stories
Recommended image1
நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
Recommended image2
Now Playing
ஒரே தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட முயன்ற ஜெயலலிதா.. கடைசில என்ன ஆச்சு தெரியுமா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved