MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ‘நீங்கள் முதல்வராக வேண்டாமா..?’ எடப்பாடியாருக்கு ஜெ.,வின் நிழல் எழுதிய ஆதங்கக் கடிதம்..!

‘நீங்கள் முதல்வராக வேண்டாமா..?’ எடப்பாடியாருக்கு ஜெ.,வின் நிழல் எழுதிய ஆதங்கக் கடிதம்..!

நாங்கள் உங்கள் தொண்டர்கள், துணை நிற்பவர்கள், முழு ஆதரவாளர்கள். உங்கள் வெற்றி நிச்சயம். மக்களுக்கான ஆட்சியை கழகம் தர வேண்டும். புரட்சித்தலைவி அவர்களின் கொள்கையும், புரட்சித்தலைவருடைய எண்ணமும் அதுவே!

3 Min read
Thiraviya raj
Published : Sep 02 2025, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் நேர்முக உதவியாளராக இருந்தவர் ஜெ.பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கும் அவர் அதிமுக ஒன்றுபடவேண்டும் என அழுத்தமாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என தனது முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், ‘‘போற்றுதலுக்குரிய கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, நான், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும் நம்பிக்கையை பெற்று பயணித்த அம்மாவின் தொண்டன், இன்று உங்கள் தொண்டன், மனம் திறந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதம் உணர்ச்சி, அன்பு மற்றும் நம்பிக்கையை முழுமையாக பிரதிபலிக்கும்.

24
Image Credit : Asianet News

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டலில், மக்கள் நலனுக்காக நாம் கடந்து வந்த சோதனைகளும், வெற்றிகளும் நம் மனங்களில் புதைந்து கிடக்கின்றன. அதிலும் புரட்சித்தலைவரின் வழியில் புரட்சித்தலைவி அவர்கள் அடுத்தடுத்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் வென்று சாதனையை நிகழ்த்தியதையும் நாம் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம். அவர் எதிர்த்து வெற்றி பெற்றது, அனைத்து வல்லமைகளையும் தெரிந்து செயல்படுத்தக்கூடியவர் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்தும் இருக்கிறோம்.

புரட்சித்தலைவி அவர்கள் பெங்களூர் சிறைச்சாலையில் இருந்த போது, அந்த சாலையின் தரையில் நீண்ட நாட்களாக அமர்ந்து காத்திருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பாசம் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். அந்த சிறைச்சாலையின் காவலர்கள் "இப்படி ஒரு பாசமுள்ள தொண்டர்களை நாங்கள் இதுவரை சந்தித்ததில்லை" என்று சொன்னவற்றையும் நாம் கேட்டிருக்கிறோம். நாம் அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்ப உறுப்பினர்கள், எங்கள் உடம்பில் ஓடுவது கழகத்தின் ரத்தம் என்றும் பெருமைப்பட சொல்லிக் கொண்டிருக்கிறோம். "உடன்பிறப்பு" என்ற மந்திர வார்த்தையால் கட்டுண்டு கிடக்கிறோம்.

Related Articles

Related image1
எடப்பாடியின் அட்ராசிட்டி, அதிமுக.வில் இருந்து வெளியேறும் செங்கோட்டையன்? 5ம் தேதி வரை சஸ்பெண்ஸ்
34
Image Credit : Google

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக தாங்கள் சிறப்பாக செயலாற்றி வருகிறீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் நான்தான் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். நாங்களும் மனப்பூர்வமாக உங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். கழகம் வெற்றி பெற்றால், நீங்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனுடைய அவா! நீங்கள் புரட்சித்தலைவருடைய பொற்கால ஆட்சியை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வழங்க வேண்டும் என்பதே எங்களைப் போன்ற தொண்டனின் லட்சியம்.

"இன்றைய சூழ்நிலையில், கழகத்திலிருந்து பிரிந்து சென்ற தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டால், வெற்றி எளிதாகும்", இதை மக்கள் சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் அனைவரும் இதை உணர்ந்திருப்பதினால் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பொறுப்பில் உள்ளவர்கள் தனக்கு நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டு, வெளியில் சொல்லத் தயங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் ஒரே நோக்குடன் செயல்பட்டால் வெற்றி உறுதி. அந்த வெற்றியை நீங்கள் ருசிக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற கடைக்கோடி தொண்டனுடைய வேண்டுதல்.

44
Image Credit : our own

நாங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வெற்றியை விரும்புகிறோம். உங்களுடைய வெற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி. அது எங்களுடைய வெற்றி! நீங்கள் முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை தொடர வேண்டும்.

நாங்கள் சொல்வதெல்லாம் உங்கள் நலனுக்காக மட்டுமே! நான் நேற்றல்ல, இன்றல்ல, நாளையும் கழகத்திற்கான நல்லவற்றை சொல்லிக் கொண்டிருப்பேன். கழகத்திற்கு நல்லதைச் செய்யும் எந்தக் கருத்தாக இருந்தாலும் புரட்சித்தலைவிக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது கடமை! அதை நான் சரிவரச் செய்ததால் தான் புரட்சித்தலைவி அவர்களோடு என்னால் இவ்வளவு நாட்கள் பயணிக்க முடிந்தது என்பது உங்களைப் போன்ற உண்மை விசுவாசிகளுக்குத் தெரியும். புரட்சித்தலைவி அவர்களுடன் பயணிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, அவருடைய நம்பிக்கையைப் பெறுவது எவ்வளவு சிரமம் என்பதும் உங்களுக்குப் புரியும். அன்றிருந்த அதே மனப்பான்மையோடு இன்றும் தங்களுக்கு எனக்கு தெரிந்தவற்றை சொல்லவே விழைகிறேன்.

நாங்கள் உங்கள் தொண்டர்கள், துணை நிற்பவர்கள், முழு ஆதரவாளர்கள். உங்கள் வெற்றி நிச்சயம். மக்களுக்கான ஆட்சியை கழகம் தர வேண்டும். புரட்சித்தலைவி அவர்களின் கொள்கையும், புரட்சித்தலைவருடைய எண்ணமும் அதுவே! எனது நம்பிக்கை, உறுதி, அன்பு எப்போதும் உங்கள் அருகிலிருக்கும்..! கழகத்தின் வெற்றிக்காக சிந்தனையை செலவழித்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டன்'' எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
எடப்பாடி பழனிசாமி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved