MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • மிரட்டும் ஈரான்..! பணியுமா அமெரிக்கா..? உலகையே உலுக்கும் 6 நிபந்தனைகள்..!

மிரட்டும் ஈரான்..! பணியுமா அமெரிக்கா..? உலகையே உலுக்கும் 6 நிபந்தனைகள்..!

ஈரானின் இந்த ஆறு நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிராந்திய செல்வாக்கை வெகுவாகக் குறைக்கும்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 23 2026, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஈரானின் ஆறு நிபந்தனைகள்
Image Credit : Asianet News

ஈரானின் ஆறு நிபந்தனைகள்

மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக நிலவி வரும் மோதல் போக்கு, தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் அதிரடி நகர்வுகளுக்குப் பதிலடியாக, ஈரான் தனது 'ஆறு நிபந்தனைகளை' முன்வைத்துள்ளது. இது வெறும் போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு ஆசியாவின் அதிகார சமன்பாட்டை மாற்றியமைக்கும் ஒரு உத்தியாகப் பார்க்கப்படுகிறது.

கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும்

அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு 48 மணி நேரக் கெடு விதித்துள்ளார். தவறினால் ஈரானின் மின் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் மின் கட்டமைப்புகளை முடக்கி அந்தப் பிராந்தியத்தையே இருளில் மூழ்கடிப்போம் என ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை, இந்த மோதல் ஒரு முழு அளவிலான உலகளாவிய எரிசக்திப் போராக மாறும் அபாயத்தைக் காட்டியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஈரானின் ஆறு அதிரடி நிபந்தனைகள்
Image Credit : Getty

ஈரானின் ஆறு அதிரடி நிபந்தனைகள்

லெபனான் ஊடகமான அல் மயாதீனுக்கு அளித்த பேட்டியில், ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகள் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பின்வரும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். தற்காலிகமான அல்லது பெயரளவு போர்நிறுத்தங்களை ஈரான் ஏற்காது. மீண்டும் போர் மூளாது என்பதற்கு சர்வதேச அளவில் பலமான உத்தரவாதங்கள் தேவை. மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை அகற்ற வேண்டும் என்பது ஈரானின் மிக முக்கியமான கோரிக்கை.

இது பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விடப்பட்ட நேரடி சவாலாகும். தற்போதைய மோதல்களால் ஈரானுக்கு ஏற்பட்ட பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தற்போதைய இஸ்ரேல்-ஈரான் மோதலை மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த பிராந்தியத்தில் நிலவும் அனைத்துப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். உலக எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் புதிய சட்ட நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

ஊடகக் கட்டுப்பாடு மற்றும் ஒப்படைப்பு: ஈரானுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களை முன்னெடுக்கும் ஊடக நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவர்கள் ஈரானிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

Related Articles

Related image1
விடியா ஆட்சியா..? விபரீத ஆட்சியா..? திமுகவின் முகத்திரையைக் கிழித்தெறிந்த எடப்பாடி பழனிசாமி..!
34
ஈரானின் வியூகம்: வெறும் எதிர்வினை அல்ல
Image Credit : Getty

ஈரானின் வியூகம்: வெறும் எதிர்வினை அல்ல

இந்த நிபந்தனைகள் திடீரென எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல என்றும், பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட வியூகம் என்றும் ஈரான் தரப்பில் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஏவுகணைத் தாக்குதல்களில் கவனம் செலுத்திய ஈரான், தற்போது இஸ்ரேலின் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளைத் துல்லியமாகத் தாக்குவதன் மூலம் வான்வெளியில் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயல்கிறது. குறிப்பாக அரத் மற்றும் டிமோனா பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் இஸ்ரேலின் தற்காப்பு நிலைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன.

தற்போதைய இராணுவச் சூழலில் உடனடி போர்நிறுத்தம் என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. "ஆக்கிரமிப்பாளரைத் தண்டிப்பது" என்ற கொள்கையில் ஈரான் உறுதியாக இருப்பதால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு 'பாடம்' கற்பிக்கும் வரை தாக்குதல்கள் தொடரும் எனத் தெரிகிறது. ஈரானின் இந்த ஆறு நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிராந்திய செல்வாக்கை வெகுவாகக் குறைக்கும். மாறாக, இவை நிராகரிக்கப்பட்டால் மத்திய கிழக்கு ஒரு நீண்ட கால மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய போரை நோக்கிச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

44
புதிய பிராந்திய சமன்பாடு
Image Credit : X

புதிய பிராந்திய சமன்பாடு

இந்தச் சூழலில், உலக நாடுகள் ஒரு புதிய பிராந்திய சமன்பாட்டை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. அமைதி என்பது பழைய நிலைக்குத் திரும்புவதல்ல, மாறாகப் போர்க்களத்தின் தற்போதைய யதார்த்தங்களால் தீர்மானிக்கப்படும் ஒரு புதிய அதிகாரப் பகிர்வாகவே அமையும்.

About the Author

TR
Thiraviya raj
உலகப் போர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
Recommended image2
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!
Recommended image3
CBSE Language Policy : மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமை - அண்ணாமலை கடும் எதிர்ப்பு
Related Stories
Recommended image1
விடியா ஆட்சியா..? விபரீத ஆட்சியா..? திமுகவின் முகத்திரையைக் கிழித்தெறிந்த எடப்பாடி பழனிசாமி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved