- Home
- Politics
- SIR படிவத்தை ஆன்லைனில் நிரப்புவது எப்படி..? 5 நிமிடங்கள் போதும்.. வீட்டிலிருந்தே நீங்களே செய்து முடிக்கலாம்..!
SIR படிவத்தை ஆன்லைனில் நிரப்புவது எப்படி..? 5 நிமிடங்கள் போதும்.. வீட்டிலிருந்தே நீங்களே செய்து முடிக்கலாம்..!
வாக்காளர்கள் இனி படிவங்களை ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்யவோ, சமர்ப்பிக்கவோ தேவையில்லை. அவர்கள் படிவங்களை நேரடியாக ECI அல்லது CEO வலைத்தளம், ECINET செயலியில் நிரப்பலாம்.

உங்கள் வீட்டிலிருந்தே வாக்காளர் தரவு சரிபார்ப்பு
வாக்காளர் அடையாள அட்டைகளைப் புதுப்பித்து சரிபார்க்க தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற சிறப்பு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்த செயல்முறையை ஆன்லைனிலும் முடிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். சிறப்பு தீவிர திருத்தம் (SIR) கீழ், வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவது, சமர்ப்பது முழுவதையும் ஆன்லைனில் செய்து முடிக்கலாம்.
தேர்தல் ஆணையம் இந்த செயல்முறையை எளிமைப்படுத்தி டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. நீங்கள் இப்போது படிவத்தை நிரப்பி உங்கள் உள்ளீடுகளை நேரடியாக voters.eci.gov.in தளத்தில் புதுப்பிக்கலாம். இது உங்கள் வீட்டிலிருந்தே வாக்காளர் தரவு சரிபார்ப்பு, திருத்தத்தை மிகவும் எளிதாக்குகிறது.
ஆன்லைன் முறை அறிமுகம்
தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கிறது. டிஜிட்டல் வசதியை மேம்படுத்த, ஈசிஐ கணக்கீட்டுப் படிவ ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆணையத்தால் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது. வாக்காளர்கள் இனி படிவங்களை ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்யவோ, சமர்ப்பிக்கவோ தேவையில்லை. அவர்கள் படிவங்களை நேரடியாக ECI அல்லது CEO வலைத்தளம், ECINET செயலியில் நிரப்பலாம். இந்த டிஜிட்டல் செயல்முறை தரவு துல்லியம், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPIC, அல்லது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, 10 இலக்க தனித்துவமான வாக்காளர் அடையாள எண். எஸி.ஐ.ஆர் கணக்கீட்டுப் படிவத்தை ஆன்லைனில் நிரப்பி சமர்ப்பிக்க உங்கள் வாக்காளர் அடையாள அட்டை நம்பர், மொபைல் எண்ணை இணைப்பதை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. ஒவ்வொரு வாக்காளரும் எஸ்.ஆர்.ஐ படிவத்தை பூர்த்தி செய்து பி.எல்.ஓ, ஆன்லைன் இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது. வாக்காளஎ அடையாள அட்டை நம்பர் ஏற்கனவே இணைக்கப்படவில்லை என்றால், படிவம்-8 மூலம் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதன் மூலம் அதை உடனடியாக இணைக்க முடியும்.
ஆன்லைன் படிவத்தை சமர்ப்பிப்பது எப்படி?
முதலில், voters.eci.gov.in க்குச் செல்லவும்.
இங்கே நிரப்பு கணக்கீட்டு படிவத்தைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் மொபைல் எண் அல்லது EPIC எண்ணை உள்ளிடவும்.
உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து EPIC எண்ணை உள்ளிடவும்.
உங்கள் தேர்தல் தகவல் திரையில் தோன்றும். அதை கவனமாகச் சரிபார்க்கவும்.
படிவத்தை நிரப்புவதற்கு முன், உங்கள் EPIC ஐ உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டியது அவசியம்.
EPIC இணைக்கப்படவில்லை என்றால், படிவம்-8 ஐ சமர்ப்பிப்பதன் மூலம் அதை உடனடியாக இணைக்கலாம்.
இதைச் செய்ய, ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ளீடுகளின் திருத்தம் என்பதைக் கிளிக் செய்து, படிவம்-8-ல் மொபைல் எண் விருப்பத்தை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
EPIC இணைக்கப்பட்டதும், மீண்டும் உள்நுழையவும்.
இப்போது முந்தைய SIR தொடர்பான தகவல்களுடன் கணக்கீட்டு படிவத்தை நிரப்பவும்.
ஆதார் அடிப்படையிலான மின்-கையொப்பத்தைப் பயன்படுத்தி படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
EPIC, ஆதாரில் உள்ள பெயர் மின்-கையொப்பத்திற்கு பொருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
கணக்கீட்டுப் படிவம் பதிவேற்றப்பட்டது
எப்படிச் சரிபார்ப்பது?
உங்கள் கூகுல் தேடுதலில் voters.eci.gov.in க்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள நிரப்பு கணக்கீட்டுப் படிவத்தைக் கிளிக் செய்யவும்.
இது உள்நுழைவு/பதிவுப் பக்கத்தைத் திறக்கும்.
பதிவு என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், மாற்று மின்னஞ்சல் ஐடி மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு பதிவை முடிக்கவும்.
இப்போது லாக் இன்னுக்கு சென்று, உங்கள் மொபைல் எண், கேப்ட்சாவை உள்ளிட்டு, OTP கோரிக்கை என்பதைக் கிளிக் செய்து உள்நுழைய OTP ஐ உள்ளிடவும்.
உள்நுழைந்ததும், உங்கள் சுயவிவரம் மேலே தோன்றும். மீண்டும் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் வாக்காளர் ஐடி எண்ணை உள்ளிடவும்.
சேர்ஜ்ஜை கிளிக் செய்யவும். உங்கள் படிவ நிலை உடனடியாகக் காட்டப்படும்.
படிவம் பதிவேற்றப்பட்டால், உங்கள் படிவம் ஏற்கனவே மொபைல் எண் XXXXX உடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று மொபைலுக்கு உங்களுக்கு மெசேஜ் வரும்.
இந்த மெசேஜ் வரவில்லை என்றால், உங்கள் படிவம் பதிவேற்றப்படவில்லை என்று அர்த்தம்.
தவறான மொபைல் எண் காட்டப்பட்டாலோ, நீங்கள் சமர்ப்பிக்காதபோது அது சமர்ப்பிக்கப்பட்டதாகத் தோன்றினாலோ, உடனடியாக உங்கள் பி.எல்.ஓ-வைத் தொடர்பு கொள்ளவும்.
