MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • வீடு தோறும் இனி இலவச LED டிவி..! அசத்தும் திமுக..! வெளியாகும் மெகா அறிவிப்பு

வீடு தோறும் இனி இலவச LED டிவி..! அசத்தும் திமுக..! வெளியாகும் மெகா அறிவிப்பு

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் டிவி திட்டத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா. இப்போது அதே திட்டத்தை எல்.இ.டி., டிவியாக அறிவித்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது திமுக.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 11 2026, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுகவின் தீவிர தேர்தல் வாக்குறுதி
Image Credit : x

திமுகவின் தீவிர தேர்தல் வாக்குறுதி

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. தற்போது திமுக தீவிரமாக தேர்தல் வாக்குறுதி தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 2026 தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்துள்ளார். இதற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார்.

பொதுமக்களிடம் இருந்து கருத்துகள், பரிந்துரைகளை சேகரிக்கும் பெரிய அளவிலான பொது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதை ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ மூலம் முயற்சிகள் செய்கிறார்கள்.

24
 505 வாக்குறுதிகளில் 404
Image Credit : Asianet News

505 வாக்குறுதிகளில் 404

திமுக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் manifesto 2026 பிரிவில் https://www.dmk.in/ta/manifesto2026. இங்கு பொதுமக்கள் அவர்களது பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். ஏஐ உதவியுடன் கருத்து சேகரிக்க tnmanifesto.ai எதிர்கால தமிழ்நாடு என்ற பெயரில் தளம் இயங்குகிறது

அரசு ஊழியர்களுக்கான உத்தரவாத ஓய்வூதிய திட்டத்தில் கடைசி ஊதியத்தில் 50% ஓய்வூதியம் உறுதி செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்கள், இளைஞர்கள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்தப்படும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். 2021 தேர்தல் அறிக்கையில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக கூறுகிறது. மீதமுள்ளவற்றில் பல மத்திய அரசு ஒத்துழைக்காததால் நிலுவையில் உள்ளதாக குற்றம்சாட்டுகிறது.

Related Articles

Related image1
பாஜக போடும் 70-40 கணக்கு.! அதிமுகவை கதறவிடும் டெல்லி தலைமை.! என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
34
குடும்பத்துக்கு ஒரு எல்.இ.டி., டிவி
Image Credit : X/@arivalayam

குடும்பத்துக்கு ஒரு எல்.இ.டி., டிவி

2021-ல் நிறைவேற்றப்படாத நீட் ரத்து, சிலிண்டர் மானியம், வேலைவாய்ப்பு, கல்விக்கடன் தள்ளுபடி போன்ற சுமார் 150 வாக்குறுதிகள் மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆட்சியை தக்க வைக்க துடிக்கிற திமுக தலைமை தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வாரி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உதவித் தொகை ரூ.1000 த்தில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த முறை குடும்பத்துக்கு ஒரு எல்.இ.டி., டிவி அல்லது ஸ்மார்ட் போன் வழங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

2006-2011 கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு வர மிக முக்கிய காரணமாக இருந்தது அப்போது வெளியான தேர்தல் அறிக்கையில் வெளியான இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் அதாவது இலவச கலைஞர் டிவி.

44
 ‘திராவிட மாடல் 2.0’ வாக்குறுதிகள்
Image Credit : Asianet News

‘திராவிட மாடல் 2.0’ வாக்குறுதிகள்

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா இத்திட்டத்தை ரத்து செய்தார். இப்போது அதே திட்டத்தை எல்.இ.டி., டிவியாக அறிவித்து ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது திமுக.

முழு தேர்தல் அறிக்கை வெளியான பிறகு அதிகாரப்பூர்வமாக தெரியவரும். தற்போது திமுக மக்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ‘திராவிட மாடல் 2.0’ அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்து வருகிறது.

About the Author

TR
Thiraviya raj
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாஜக போடும் 70-40 கணக்கு.! அதிமுகவை கதறவிடும் டெல்லி தலைமை.! என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
Recommended image2
Vijay Set Hit Back: 5 வருடம் 5 முதலமைச்சர்.! சீமான் உள்ளிட்டோரை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம் ரெடி.! அடித்து ஆட தொடங்கும் விஜய்.!
Recommended image3
நம்பிக்கையில்லா தீர்மானம்... சபாநாயக ஓம் பிர்லா எடுத்த மிக முக்கிய முடிவு
Related Stories
Recommended image1
பாஜக போடும் 70-40 கணக்கு.! அதிமுகவை கதறவிடும் டெல்லி தலைமை.! என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved