தாயார் பழனியம்மாள் அஸ்தியை கங்கையில் கரைத்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.!!
மறைந்த தனது தாயார் பழனியம்மாள் அஸ்தியை கங்கையில் கரைத்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிறகு பெரியகுளம் அக்கிரஹாரம் தெருவில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் தாயார் உடலுக்கு உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
தாயாரை இழந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்ட ஓபிஎஸ் தாயார் பழனியம்மாளின் உடல், வடகரை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
அங்கு தனது தாயாரின் சிதைக்கு ஓ.பன்னீர்செல்வம் தீ மூட்டினார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் இறுதிச்சடங்கு செய்தனர். இதனை தொடர்ந்து தாயாரின் அஸ்தியை ஓ.பன்னீர்செல்வம் காசி , கங்கை நதியில் கரைத்தார்.
அவர் தனது சகோதரர் ஓ.ராஜா மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்