MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • நம் மீது கை வைக்க நினைப்பவர்களுக்கு எதிராக மை வைத்தால் போதும்.. மக்கள் வெள்ளத்தில் கெத்து காட்டிய கமல்..!

நம் மீது கை வைக்க நினைப்பவர்களுக்கு எதிராக மை வைத்தால் போதும்.. மக்கள் வெள்ளத்தில் கெத்து காட்டிய கமல்..!

நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 20 2023, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டாலும் தன்னுடை வெற்றியாகவே திமுக பார்க்கிறது. ஆகையால், அதிமுக, திமுகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திமுக சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற வைப்பது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியான அதிமுகவை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என திமுக அமைச்சர்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆளுங்கட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஓட்டாக மாற்ற அதிமுகவினர் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதனால், ஈரோடு தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து  நேற்று ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.  

35

அப்போது, பேசிய கமல்;- ஒரு சின்னத்தில் நின்றுவிட்டு தற்போது வேறு சின்னத்திற்காக ஓட்டுக் கேட்டு வந்துள்ளேன் என நீங்கள் நினைக்கலாம். நாட்டில் சர்வதிகார போக்கு தலை தூக்குகிறது. அதனால் யாருடன் கை கோர்க்க வேண்டும் என எனக்கு நன்கு தெரியும். அதனால் தான் இங்கு பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல, நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள். எனது பாதை புரியும்.

45

ஆபத்து காலத்தில் சின்னம், கொடி , கட்சி ஆகியவற்றை தாண்டியது தான் தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்று இந்தியாவில் அது நடந்து கொண்டு இருக்கிறது. நம்நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது,  என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார். 

55

இது நாட்டு பிரச்சனையல்ல என் பிரச்சனை. நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினேன். என்னுடைய கடனையெல்லாம் தீர்த்து தற்போது எந்த லாபமும் எதிர்பார்க்காமல் வந்துள்ளேன். நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் என்றார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய காங்கிரஸ்
திமுக
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved