ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்கப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் பொதுமக்களுடன் இணைந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
Erode East Constituency
வாக்கு செலுத்த வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது கட்சி துண்டை தோளில் அணிந்த படி வந்திருந்தார். அதனை அகற்றிவிட்டு வாக்களிக்க செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கட்சி துண்டை அகற்றிவிட்டு ஆனந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.
Erode East Constituency
தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக வேட்பாளர் தென்னரசு நான் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அதவும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
Erode East Constituency
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேக்னா மக்கள் அனைவரும் மாற்றத்துக்காக வாக்களிக்க வரவேண்டும். வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர் அனைவரும் கண்டிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Erode East Constituency
எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியை சந்திப்பார்கள் என்று ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.