MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இதெல்லாம் வேண்டாம்.. உச்ச நீதிமன்ற கதவை தட்டிய திமுக... சம்பவம் செய்ய காத்திருக்கும் அதிமுக, தவெக!

இதெல்லாம் வேண்டாம்.. உச்ச நீதிமன்ற கதவை தட்டிய திமுக... சம்பவம் செய்ய காத்திருக்கும் அதிமுக, தவெக!

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை அதிமுக மற்றும் தவெக கட்சிகள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்தி வருகின்றன.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 07 2025, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக மனு
Image Credit : Asianet News

திமுக மனு

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. இதற்கு எதிராக திமுக கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தேர்தல் ஆணையம் தன் அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேர்தல் ஆணையம்
Image Credit : F/DMK

தேர்தல் ஆணையம்

திமுக தனது மனுவில், “தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரை ஏற்கனவே சிறப்பு சுருக்கச் சேகரிப்பு (SSR) மூலம் தேர்தல் பட்டியல் புதுப்பிக்கப்பட்டது. இதனால், புதிய SIR நடைமுறை தேவையற்றது,” என வாதிட்டுள்ளது. மேலும், SIR வழிகாட்டியில் பல முக்கிய அடையாளங்கள் (பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் ஐடி) ஏற்கப்படாமல், புதிய 13 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கவும் வேண்டும் என விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்றும் திமுக கூறியுள்ளது. அதோடு, தேர்தல் ஆணையம் குடியுரிமைச் சோதனையை மேற்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானது என திமுக வாதிடுகிறது.

34
உச்ச நீதிமன்றம்
Image Credit : Asianet News

உச்ச நீதிமன்றம்

“குடியுரிமை ஆய்வு என்பது 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வரும் விஷயம்; தேர்தல் ஆணையத்துக்குச் சம்பந்தமே இல்லை,” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், SIR பணிகள் பொங்கல் விடுமுறை காலத்தில் திட்டமிடப்பட்டதால், புகார் அளிக்கும் காலம் குறைந்துவிட்டது. இதனால் வாக்காளர் பெயர்கள் தவறாக நீக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளது. இந்த மனுவை தொடர்ந்து, தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

44
அதிமுக தவெக எதிர்ப்பு
Image Credit : Asianet News

அதிமுக தவெக எதிர்ப்பு

திமுக சட்டரீதியாக தன் நிலைப்பாட்டை வலுப்படுத்தி இருக்கும் நிலையில், அதிமுக மற்றும் தவெக (TVK) கட்சிகள் இதை அரசியல் வாய்ப்பாக பயன்படுத்த தயாராக உள்ளன. அதிமுக ஆதரவாளர்கள், “திமுக வாக்காளர் பட்டியலில் தலையிடுகிறது” என்றும், தவெக தரப்பும் “வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்றும் குரல் எழுப்பி வருகிறது. மொத்தத்தில், தேர்தல் பட்டியல் விவகாரம் தமிழகத்தில் புதிய அரசியல் போருக்கு சூழல் உருவாகியுள்ளது. திமுக சட்டப்போராட்டத்தில் இருக்க, அதிமுகவும் தவெகவும் சம்பவம் செய்ய காத்திருக்கின்றன என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
டிவி.கே. விஜய்
எடப்பாடி பழனிசாமி
மு. க. ஸ்டாலின்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Related Stories
Recommended image1
இந்த முறை நயினார் நாகேந்திரனிடம் தோற்றால் திமுகவினரின் பதவி பறிக்கப்படும்! முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended image2
விஜய் கட்சி வேட்பாளர்களை 2 கோடி கொடுத்து புள்ள புடிக்கிற மாதிரி தூக்கிடும் திமுக- அதிமுக..! ஒரு சீட்டு ஜெயிப்பது கூட கஷ்டம் பாண்டே ஆருடம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved