- Home
- Politics
- கடைசி தீபாவளி..! 10 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பரிசுகளை அள்ளி வீசும் திமுக ..! இன்ப அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!
கடைசி தீபாவளி..! 10 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பரிசுகளை அள்ளி வீசும் திமுக ..! இன்ப அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!
‘ ‘திமுக ஆட்சி என்பது உருட்டு கடை அல்வா’' என அல்வா பாக்கெட்டை காட்டினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவர் திமுகவுக்கு அல்வா பாக்கெட்டை காட்டவில்லை. கட்சியினருக்கு தீபாவளி பரிசு கொடுக்காமல் தந்த அல்வா’’ என உள்ளுக்குள் புகைகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி திமுகவில் வார்டு செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை தலா பத்தாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை அள்ளி வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் கட்சியினருக்கு பெரிய அளவில் எந்த உதவிகளையும் செய்யவில்லை.
திருமணம் உட்பட வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு அழைத்தால் 2000 ரூபாய் பொய் வைத்து சென்றனர். ஆனால் விஷேச வீடுகளுக்கு வரும் அவர்களுக்காக சால்வை, வரவேற்பு என கட்சியினர் பல மடங்கு கூடுதல் செலவு செய்து வந்தனர். வெற்றி பெற உழைத்தவர்களை கண்டுகொள்ளாததால் விரக்தியில் இருந்து வந்தனர்.
வார்டு முதல் மாவட்டம் வரை பல பொறுப்புகளில் உள்ள கட்சியினர் அதிருப்தியில் இருந்ததை முதல்வர் ஸ்டாலின் மருமகன் நடத்தும் பென் ஆய்வு நிறுவனம் வழியாக கட்சி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆட்சியின் கடைசி தீபாவளி, சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளதை மனதில் வைத்து தீபாவளியை ஒட்டி அனைத்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுக்கு கட்சி தலைமை பரிசுகளை அள்ளி வழங்க அறிவுறுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து வார்டு அளவில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் வரை கவனிப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. பகுதி பிரதிநிதிகள், துணைச் செயலாளர்களுக்கு தலா 10,000 ரூபாயும், வார்டு செயலாளர், மாவட்ட பிரதிநிதிகளுக்கு தல ஐம்பதாயிரம் ரூபாயும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
பகுதி ஒன்றிய செயலாளர்களுக்கு தல ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பேரூர், மாநகர, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளுக்கு தலா ஒரு லட்சம் வரை வழங்கப்படுகிறது. இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு 10,000 முதல் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பரிசு பொருட்களாக பட்டாசு, இனிப்பு, வேஷ்டி- சட்டை, கிரைண்டர், ஜார் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு கொடுத்து வரவிருக்கும் தேர்தல் பணிகளை தொய்வின்றி பார்க்க ஊக்குவிக்கும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது திமுக தீபாவளிடா என உற்சாகமடைந்து வருகின்றனர் உபிஸ்.
திமுகவினர் தீபாவளி பரிசுகளால் உற்சாமடைந்து வரும் அதேவேளை அதிமுகவினர் தங்கள் கட்சி கண்டுகொள்ளவில்லையே என்கிற விரக்தியில் உள்ளனர். நேற்று சட்டசபையில் ‘ ‘திமுக ஆட்சி என்பது உருட்டு கடை அல்வா’ என அல்வா பாக்கெட்டை காட்டினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவர் திமுகவுக்கு அல்வா பாக்கெட்டை காட்டவில்லை. கட்சியினருக்கு தீபாவளி பரிசு கொடுக்காமல் அதிமுகவினருக்கு தந்த அல்வா’’ என பலரும் உள்ளுக்குள் புகைந்து வருகின்றனர்.
தீபாவளி ஸ்பெஷல்- #திமுக_உருட்டுகடை_அல்வா!#TNAssemblypic.twitter.com/E8OyFTEFKp
— 𝗞.𝗠 𝗚𝗼𝗽𝗶 - SayYEStoWomenSafety&AIADMK (@KM_Gopi) October 17, 2025