- Home
- Politics
- அதிமுகவின் 9 மாஜி அமைச்சர்களை காப்பாற்றும் அறிவாலயம்..! அதிர வைக்கும் அண்டர் டீலிங்..! பகீர் கிளப்பும் அரசியல் விமர்சகர்..!
அதிமுகவின் 9 மாஜி அமைச்சர்களை காப்பாற்றும் அறிவாலயம்..! அதிர வைக்கும் அண்டர் டீலிங்..! பகீர் கிளப்பும் அரசியல் விமர்சகர்..!
நாங்கள் உங்க பேரில் வெறும் ரைடு விடுகிறோம். செய்தி மட்டும் வரும். உங்கள் பேரில் எந்த நடவடிக்கையும் இருக்காது. நாங்க மற்றதை பார்த்துக் கொள்கிறோம் என ஒரு அண்டர்ஸ்டாண்ட் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கோபாலபுரத்திலயுமே

அதிமுக மாஜி அமைச்சர்களை ஊழலில் இருந்து திமுக அரசு காப்பாற்றி வருவதாக அரசியல் விமர்சகர் தேவப்ரியா பகீர் கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்ட அவர், ‘‘ஊழல் வழக்குகள் ஒழுங்காகப்போடப்படுகிறதா என ஜூனியர் விகடன் இதழ் கடந்த வாரம் தலையங்கம் வெளியிட்டு சந்தேகம் கிளப்பியது. தமிழகத்தின் அதிமுக முன்னாள் அமைச்சர்களை இந்த மு.க.ஸ்டாலின் அரசு காப்பாற்றுகிறது. கிட்டத்தட்ட 9 அமைச்சர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஆயிரம் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருக்கிறது.அந்த ஒன்பது அமைச்சர்களில் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, வீரமணி, இரு விஜயபாஸ்கர்கள், சேவூர் ராமச்சந்திரன் என இப்படி லிஸ்ட் போகிறது.
1000 இடத்தில ரெய்டு செய்து மூன்று பேர்மீதுதான் வழக்குப்போடப்பட்டுள்ளது. அந்த மாஜி அமைச்சர்கள் யாரெல்லாம் எந்த காண்ட்ராக்டர்களிடம் லஞ்சம் வாங்கினார்களோ, அதற்கு துணை நின்ற அந்த ஐஏஎஸ் அதிகாரிகளும், காண்டரக்டர்களும் இப்போது திமுகவோடு இருக்கிறார்கள். அதே ஐஏஎஸ் அதிகாரியை வைத்துக்கொண்டு தான் திமுக அரசு இப்போது செயல்பட்டு வருகிறது. உதாரணமாக ரேஷன் பொருட்களை கிறிஸ்டி என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இன்றைக்கும் அதே கிறிஸ்டி நிறுவனத்துக்கு தான் காண்ட்ராக்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
திமுக -அதிமுக இரண்டு பேருக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துவிட்டது. நாங்கள் உங்க பேரில் வெறும் ரைடு விடுகிறோம். செய்தி மட்டும் வரும். உங்கள் பேரில் எந்த நடவடிக்கையும் இருக்காது. நாங்க மற்றதை பார்த்துக் கொள்கிறோம் என ஒரு அண்டர்ஸ்டாண்ட் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. கோபாலபுரத்திலயுமே சசிகலாவுக்கு ஏதாவது ஒரு பங்கு இருக்குமா? காப்பாற்றப்படுவதற்காக இவங்களுடைய பணம் ஏதாவது அவர்கள் கைக்கு மாறி இருக்குமா? என்கிற சந்தேகமும் எழுகிறது. சசிகலாவிற்கு சொந்தமாகவும் படப்பையில் ஒரு மதுபான தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. அதை நடத்த முடியவில்லை என இப்போது லீசுக்கு கொடுத்து இருக்கிறார். அது திமுகவிற்கு வேண்டியவர்களின் கையில்தான் இருக்கிறது. ‘‘நாங்க ரெண்டு பேரும் பங்காளிகள்’’ என்று துரைமுருகனே சொல்லி இருக்கிறார்.
இப்போதுவரை திமுக ஒருமுறைகூட அடுத்தடுத்து ஜெயித்ததில்லை. அந்த ரெக்கார்டு பிரேக் பிரேக் இப்போது உடைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. எதிர்கட்சிகளை சரிக்கட்டி காப்பாற்றும் அந்த வேலையை சூப்பர் சீப் மினிஸ்டரின், ஈசிஆர் பங்களாவில் இருக்கிற மாப்பிள சார் செய்கிறார் என்று கூறப்படுகிறது. திமுகவிற்காக ஆபீசியலாக இப்போது நான்கு வியூக அமைப்புள் வேலை செய்து வருகிறது. சபரீசனின் பென் நிறுவனம், உதயநிதிக்காக சுனில் கனுகோலு, ஐபேக் விலகிய பிறகு அதே ஆட்களை வைத்து இன்னொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இது தவிர மேலும் இரண்டு நிறுவனங்கள் மொத்தம் ஆறு நிறுவனங்களை வைத்துக் கொண்டு மீடியாவையே கண்ட்ரோல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என்று 2021-சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்தார் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதே போல திமுக ஆட்சி வந்தது. மு.க.ஸ்டாலின் முதல்வரும் ஆனார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவில், "கொடநாடு கொலை சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சிலருக்கு தொடர்பு உண்டு. அவர்களிடம் விசாரிக்க வேண்டும் " என்று கோரப்பட்டிருந்தது. ஆனால், சம்பவம் நடந்து 8 வருடங்கள் கடந்தும் இந்த வழக்கு முடிக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்கவும் இல்லை.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே மு.க.ஸ்டாலின் பேசி வந்தார். இதுதொடர்பாக, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் புகார் மனுவையும் கொடுத்தார் ஸ்டாலின். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கோடநாடு வழக்கின் விசாரணையை தி.மு.க அரசு தொடங்கியது.
ஆனால், தற்போது வரை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தாலும், இந்தக் குற்றச் சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. எடப்பாடி உள்பட சம்பவத்தின் பின்னணியில் உள்ள நபர்களுக்கு எதிராக ஒரு சிறு துரும்பையும் நகர்த்தவில்லை ஸ்டாலின் அரசு. இதற்கான பின்னணியில், ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் இடையே அண்டர் டீலிங் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக இவர்கள் இருவருக்கும் நல்ல புரிதலும் நட்பும் இருக்கிறது. அதனால், கொடநாடு சம்பவத்தில் எடப்பாடிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தொடராமல் பார்த்துக் கொள்கிறது திமுக அரசு.
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளைத் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வரக்கூடாது . வருவதற்கும் நாம் வழி வகுத்துவிடக்கூடாது. நீங்கள் ஆட்சியில் இருந்தால் எனக்கு எதிராக ஆக்சன் எடுக்கக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் மீது ஆக்சன் எடுக்க மாட்டோம். ஆனால், அரசியல் ரீதியாக இருவரும் திட்டிக் கொள்ளலாம் என்று இருவரும் பரஸ்பரம் எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதனால், கொடநாடு கொலை சம்பவத்தில் எடப்பாடியையோ அல்லது அதிமுக பெரும் தலைகளையோ தண்டிக்கும் திட்டம் எதுவும் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. ஆக மொத்தத்தில் அதிமுக மாஜிக்களை திமுக அரசு காப்பாற்றி வருகிறது’’ என்கிறார்.