MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • காங்கிரஸ் செய்த தவறு..! கூட்டணி ஆட்சியா..? ஒரு கட்சி ஆட்சியா..? ஸ்டாலினுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

காங்கிரஸ் செய்த தவறு..! கூட்டணி ஆட்சியா..? ஒரு கட்சி ஆட்சியா..? ஸ்டாலினுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸ் செய்த தவறு’

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 11 2026, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக, காங்கிரஸ் இடையே பிளவு
Image Credit : Google

திமுக, காங்கிரஸ் இடையே பிளவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ் இடையே பிளவு நீடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இந்தியா டுடே ஊடகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் திமுக கூட்டணி 45 விழுக்காடு வாக்குகுளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதைவிட 12 விழுக்காடு குறைவான வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 விழுக்காடு வித்தியாசம் என்றாலே வெற்றி உறுதி. 12 விழுக்காடு வித்தியாசம் என்பது மிகப்பெரிய வெற்றியாக இருக்கப் போகிறது.

24
சாதிக்கும் தமிழகம்
Image Credit : Google

சாதிக்கும் தமிழகம்

கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் உழைப்பை தாமதப்படுத்த மாட்டோம். இன்னும் வேகமாக உழைக்கத் தெடங்குவோம். தமிழகத்திற்கும், திமுக அரசுக்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. அதனையும் கடந்து திமுக அரசு அனைத்து துறைகளிலும் சாதனைப் படைத்து வருகிறது.

Related Articles

Related image1
ஆட்சியில் பங்கு கேட்பது தமிழகத்திற்கு ஒத்துவராது..! கூட்டணி கட்சியினரின் கனவில் மண்ணை போட்ட முதல்வர்
34
ஆட்சியில் பங்கு..?
Image Credit : Asianet News

ஆட்சியில் பங்கு..?

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி சாதனைப் படைத்துள்ளோம். தலை சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தில் 33 கல்லூரிகள் உள்ளன. திமுக அரசின் வெற்றிப் பயணம் 2.0 ஆட்சியிலும் தொடரும். ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது. அது எங்களுக்கும் தெரியும், கூட்டணியில் உள்ளவர்களுக்கும் தெரியும். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்குவதற்காக இப்படிப்பட்ட விவாதங்களை மேற்கொள்கின்றனர். அரசியலைக் கடந்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சகோதரராகப் பார்க்கிறேன். அவரும் அப்படி தான் என்னைப் பார்க்கிறார்.

2021ம் ஆண்டைக் காட்டிலும் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் அவ்வளவு கடினமானதாக இருக்காது. திமுக கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

44
காங்கிரஸ் செத தவறு
Image Credit : Google

காங்கிரஸ் செத தவறு

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், ‘‘கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம்  தமிழக காங்கிரஸ் செய்த தவறு’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீடு தோறும் இனி இலவச LED டிவி..! அசத்தும் திமுக..! வெளியாகும் மெகா அறிவிப்பு
Recommended image2
பாஜக போடும் 70-40 கணக்கு.! அதிமுகவை கதறவிடும் டெல்லி தலைமை.! என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
Recommended image3
Vijay Set Hit Back: 5 வருடம் 5 முதலமைச்சர்.! சீமான் உள்ளிட்டோரை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம் ரெடி.! அடித்து ஆட தொடங்கும் விஜய்.!
Related Stories
Recommended image1
ஆட்சியில் பங்கு கேட்பது தமிழகத்திற்கு ஒத்துவராது..! கூட்டணி கட்சியினரின் கனவில் மண்ணை போட்ட முதல்வர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved